சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

பக்தர்களுக்கு கொரானா உறுதியானதால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மீண்டும் மூடப்படுமா?

பக்தர்களுக்கு கொரானா உறுதியானதால் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் மீண்டும் மூடப்படுமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும், வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதனை கண்டு கொள்ளாமல் பொது இடங்களில் அதிகளவில் கூடி வருகிறார் கள். குறிப்பாக கோவில்களில் சாமி தரிசனத்துக்கு கூட்டம் அதிகரிக்கிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து 3 பஸ்களில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 100 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து விட்டு தங்கள் மாநிலத்துக்கு திரும்பி உள்ளனர். ஒவ்வொரு பஸ்களில் 35 பேர் வரை இருந்துள்ளனர். கர்நாடகாவில் அந்த மாநில அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேல்மருவத்தூரில் இருந...
புதுச்சேரியில் இன்று முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் இன்று முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுச்சேரியில் இன்று முதல் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி -ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி கொரோனா மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- 3-வது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும். இன்று முதல் முககவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா, இயற்கை மருத்துவ முறையை கையாள வே...
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் பொங்கல் வைப்பதற்கு  தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் வழங்கப்படுகிறது. மொத்தம் 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ...
கோவா வந்த உல்லாச பயண கப்பலில் 66 பேருக்கு கொரோனா

கோவா வந்த உல்லாச பயண கப்பலில் 66 பேருக்கு கொரோனா

HOME SLIDER, NEWS, செய்திகள்
மும்பையில் இருந்து கோவா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு கார்டேலியா குரூஸ் எம்ப்ரஸ் என்ற உல்லாச பயண கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே பெரியதாக கருதப்படும் இந்த உல்லாச கப்பலை ஒரு தனியார் நிறுவனம் இயக்குகிறது. இந்த கப்பலில் கடந்த அக்டோபரில் நடந்த போதை பார்ட்டி தொடர்பாகத்தான் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி பல உல்லாச பயணிகள் இந்த கப்பலில் மும்பையில் இருந்து கோவா வந்தனர். மர்மகோவா துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் வந்து சேர்ந்த அக்கப்பல் அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. அப்போது கப்பல் சிப்பந்தி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, கப்பலில் இருந்த பயணிகள், சிப்பந்திகள் ஆகிய 2 ஆயிரம் பேருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. அதற்காக ஒரு மருத்துவக்குழு கப்பலுக்கு வ...
இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு – சென்னையில் 20 ஓவர் போட்டி!

இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு – சென்னையில் 20 ஓவர் போட்டி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் 2022 போட்டி அட்டவணை வெளியீடு - சென்னையில் 20 ஓவர் போட்டி! இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் (2022) விளையாடும் போட்டி விவரங்களை பி.சி.சி.ஐ. (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) வெளியிட்டுள்ளது. இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. 2-வது டெஸ்ட் நாளை முதல் 7-ந் தேதி வரை ஜோகன்னஸ்பர்க்கிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் 11 முதல் 15 வரை கேப்டவுனிலும் நடக்கிறது. அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் 19, 21 (பாரல்) மற்றும் 23 (கேப்டவுன்) ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீசுடன் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9 மற்றும் 12-ந் தேதிகளில் அகமதாபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகி...
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்! சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 86.22 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 58.82 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். சென்னையை பொருத்த வரை 5 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ள வில்லை. அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை விரைந்து போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது. உலக அளவில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவின் உருமாற்ற வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து இந்த அலையில் வேகமாக தாக்குகிறது. உலக அளவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரேநாள் தொற்று 29 லட்சத்து 4 ஆயிரமாக இருந்தது. அதுதான் உ...
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்

10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் - போராடும் சி.என்.ஆர் - முக நூலில் வெளுத்த நாகரத்தினம் வன்னியர்களுக்கான, 10.5% சதவிகித, உள் இட ஒதுக்கீட்டு சட்டம், எப்படி, கருவானது/உருவானது❓ எப்படி "குறை" பிரசவ சட்டமானது❓ **************** 1987 ல், MGR ஆட்சியில், 25 வன்னிய உயிர்களை பலி கொடுத்து, 1989ல் பின்னர் வந்த, தி.மு.க ஆட்சியில், வன்னியர் உள்ளிட்ட 108 ஜாதிகளை உள்ளடக்கிய, MBC என்ற பெயரில் 20% சதவிகித, "தொகுப்பு" இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இது, எல்லோருக்கும் தெரிந்த, செய்திதான். அந்த, அரசாணை‌ ஆவணத்தில், 108 ஜாதிகளுக்கான, மக்கள் தொகையும், ஜாதிவாரியாக, தனித்தனியாக, குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி குறிப்பிட்டிருந்தும், மதிப்பெண் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில், ஜாதிவாரி தேர்வு பட்டியல் தாயாரிக்கப்படாமல்,108 ஜாதிகளுக்கும், ஒரே மதிப்பெண் பட்டியல் (Random list) தயார் ச...
இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும் – தொல்.திருமாவளவன் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.* *-விசிக தலைவர் . தொல் திருமாவளவன் MP.* இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று “மார்கழியில் மக்களிசை” ஆகும். ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் நடைபெற்று வந்த இந்நிகழ்வு, இந்த ஆண்டு கோவை, மதுரை, சென்னை ஆகிய பெருநகரங்களில் நடைபெற்றது. கோவை மற்றும் மதுரையில் ஒரு நாளும், சென்னையில் 8 நாட்களும் மிகவும் கோலாகலமான எளிய உழைக்கும் மக்களின் இசைத்திருவிழாவாக இது நடைபெற்று முடிந்திருக்கிறது. முத்தாய்ப்பாக கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் MP, திமுக பார...
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒமைக்ரானை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தாருங்கள்- மு.க.ஸ்டாலின் காணொலியில் வேண்டுகோள்! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி பதிவில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். வணக்கம் உங்கள் எல்லோருக்கும், என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த 2022-ம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை. அப்படி நன்றாக இருக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டுகள் தந்த பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா என்ற நோய் தொற்றின் முதலாவது அலை மற்றும் இரண்டாவது அலையில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாவது அலை உச்சகட்டத்தில் இருந்த போது தான் உங்களுடைய முதல்- அமைச்சராக மட்டும் அல்ல. உங்களுடைய நலனுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது தான் என்னுடைய முதல் வேலையாக இர...
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு! சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல், மிக கனமழை பெய்யும். நாளை 1-ந் தேதி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்ற...