சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து!

திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து விபத்து! சென்னையை புறநகர் பகுதியான திருவெற்றியூரில்  4 மாடிகள் கொண்ட 336 குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. 1998 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடுகள், தேனாம்பேட்டை திருவொற்றியூர் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த வீடுகளில் கடுமையான விரிசல் ஏற்பட்டதாக இங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிறுசிறு பணிகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று இரவு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு லேசாக விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருக்கும் திமுக பகுதி செயலாளரிடம் பொதுமக்கள் இது குறித்து புகார் கூறினர். இதையடுத்து இன்று காலை அந்த கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டனர். காலை பத்...
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு!

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு! இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஹர்பஜன் சிங், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளளார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998-ம் அண்டு மார்ச் 25-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 1998-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015-ம் ஆண்டு வரை விளையாடினர். 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டும், 236 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக்க...
ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்!

ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஒமைக்ரான் அச்சம்: இரண்டு ஆயு்வுகளில் குட் நியூஸ்! கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் முன்னதாகவே நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மிகப்பெரிய அளவில் தாக்கம் இல்லை. ஆனால், கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைய ஆரம்பித்தது. இது உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதில் டெல்டா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் டெல்டா வைரசால் 2-வது அலை உருவாகி அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. டெல்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக தேவைப்பட்டது. இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி, சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் டெல்டா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட 2-வது அலையை இந்தியா கட்டுப்படுத்தியது. தற்போது இந்தியாவில் ...
ரூ. 870 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

ரூ. 870 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரூ. 870 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்! உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேச மாநிலம் சென்று பல்வேறு திட்டங்களுக்க அடிக்கல் நாட்டி வருகிறார். மேலும், இரண்டு அரசுகளும் இணைந்து செயல்படுத்திய திட்டங்களை திறந்து வைக்கிறார். அந்த வகையில் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று மோடி செல்கிறார். அங்கு 870 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 475 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கர் நிலத்தில் உருவாக இருக்கும் ‘பனாஸ் டெய்ரி சங்குல்’ திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதன்மூலம் தினசரி ஐந்து லட்சம் லிட்டர் பால் பதப்படுத்த முடியும். மேலும், பல திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்....
கேரளாவில் டீ கடையில் குண்டு வெடிப்பு: 2 பேர் உயிருக்கு போராட்டம் -போலீசார் விசாரணை!

கேரளாவில் டீ கடையில் குண்டு வெடிப்பு: 2 பேர் உயிருக்கு போராட்டம் -போலீசார் விசாரணை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவில் டீ கடையில் குண்டு வெடிப்பு: 2 பேர் உயிருக்கு போராட்டம் -போலீசார் விசாரணை! திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே பிடனபிலவு அனிகாடு பகுதியில் பஷீர் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். பஷீர் நேற்று வழக்கம் போல் டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் கடையின் உள்பகுதியில் அமர்ந்து டீ குடித்தனர். திடீரென கடையில் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. கடையில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன, மேலும் கடை முழுவதும் குபுகுபு வென கரும்புகை சூழ்ந்தது. மேலும் கடையும் தீப்பற்றி எரிந்தது. இதில் கடையில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் இச்சம்பவம் பற்றி கீழ வைப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கட...
மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! சீனா நிறுவனமான சியோமி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்! ராமேசுவரத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களையும், 6 விசைப்படகுகளையும் கச்சத்தீவு அருகே உள்ள நெடுந்தீவில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீனவர்கள் மீள்வதற்குள் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் 19-ந்தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 55 மீனவர்களும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 3-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மற்றும் விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தன...
பாகிஸ்தானில் பரபரப்பு- கொலை முயற்சியில் நூலிழையில் தப்பிய மந்திரி!

பாகிஸ்தானில் பரபரப்பு- கொலை முயற்சியில் நூலிழையில் தப்பிய மந்திரி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தானில் பரபரப்பு- கொலை முயற்சியில் நூலிழையில் தப்பிய மந்திரி! பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் மந்திரி சபையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரியாக இருந்து வருபவர் ஷிப்லி பராஸ். இவர் நேற்றுமுன்தினம் மாலை கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள கோட் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம கும்பல் ஒன்று அவரது காரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. எனினும் இதில் அதிர்ஷ்டவசமாக மந்திரி ஷிப்லி பராஸ் காயங்கள் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார். அதே சமயம் இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது கார் டிரைவர் படுகாயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
ஆபாச பட தயாரிப்பில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை: ராஜ் குந்த்ரா!

ஆபாச பட தயாரிப்பில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை: ராஜ் குந்த்ரா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
ஆபாச பட தயாரிப்பில் நான் ஒருபோதும் ஈடுபடவில்லை: ராஜ் குந்த்ரா! பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இவர் ஆபாச படம் எடுத்து, அதை செல்போன் செயலி மூலம் வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலை மாதம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செப்டம்பர் மாதம் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதேபோல ஆபாச படம் வினியோகம் செய்தது தொடர்பான வழக்கிலும் ராஜ்குந்த்ராவை கைது செய்ய கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்தநிலையில் ராஜ்குந்த்ரா தன் மீதான வழக்குகள் குறித்து கூறியிருப்பதாவது:- நீண்ட சிந்தனைக்குப் பிறகு, பல தவறான மற்றும் பொறுப்பற்ற அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் மிதந்து வருவதைக் கருத்தில் கொண்டு, எனது மவுனம் பலவீனமாக தவறாகக் கருதப்பட்டதாலும், நான் என் வாழ்நாளில் ‘ஆபாசப் படங்கள்' தயாரிப்பிலும், விநியோகத்திலும் ஈடுபட்டதில்லை என்று கூறி தொடங்க விர...
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன?- நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை!

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன?- நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன?- நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 கோணங்களில் விசாரணை! கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி பூங்கா நஞ்சப்பசத்திரம் பகுதியில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேரும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக முப்படைகளின் சார்பில் அமைக்கப்பட்ட ஏர்மார்‌ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான விசாரணை குழுவினர், குன்னூர் வந்து, விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து விபத்தை நேரில் பார்த்தவர்கள், விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்கள், விபத்து நடப்பதற்கு முன்பு ஹெலிகாப்டரை கடைசியாக செல்போனில் வீடியோ எடுத்தவர்கள்,...