ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்த 48 வயது ஆசிரியை!

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்த 48 வயது ஆசிரியை!

HOME SLIDER, NEWS, sports
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்த 48 வயது ஆசிரியை! ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா ஹோலி வயது 48 . இவர்  ஒரு நீச்சல் வீராங்கனை . மேலும் இவர் தனது நீச்சல் பயிற்சியை, பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரியான ராஜூவ்திரிவேதிகான் என்பவரிடம் முறையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர்  தூரம் கிருஷ்னா நதியில் ,  13 கிலோமீட்டர் கங்கை நதியில்  நிந்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் 2019 ல் 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியில் போர்பந்தரில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார் கடலில் நீந்துவது அவரது  லட்சியமாக இருந்த நிலையில், தற்போது இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையில் உள்ள கடல் பகுதியில் நீந்தி கடப்பதற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார். இவர் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு ஒரு விசைப்படகில் வர உள்ளார...
அதிமுக கமிஷன் ராஜ்யத்தின் மையப்புள்ளிகளில் முக்கியமானவர் உங்களது கட்சியின் பொருளாளர் என்பது உண்மைதானா? கமலுக்கு காங்கிரஸ் கேள்வி

அதிமுக கமிஷன் ராஜ்யத்தின் மையப்புள்ளிகளில் முக்கியமானவர் உங்களது கட்சியின் பொருளாளர் என்பது உண்மைதானா? கமலுக்கு காங்கிரஸ் கேள்வி

HOME SLIDER, NEWS, politics
அதிமுக கமிஷன் ராஜ்யத்தின் மையப்புள்ளிகளில் முக்கியமானவர் உங்களது கட்சியின் பொருளாளர் திருப்பூர் சந்திரசேகரன் என்பது உண்மைதானா? கமலுக்கு காங்கிரஸ் கேள்வி சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்ததாக தகவல்கள் வந்தன. குறிப்பாக மதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை செய்யப்பட்டது இவற்றில் வருமான வரி சோதனைக்கு உள்ளானவர்களில் ஒருவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சொந்தமான பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூபாய் 80 கோடி அளவிற்கு அவருடைய வருமானம் மறைக்கப்பட்டுள்ளதும், அந்த வருமானத்திற்கு அவர் வரி கட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக திமுக போன்றவை ஊழல் கட்சிகள் எ...
பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் போக்சோ குற்றங்களில் சமரசத்துக்கு இடமில்லை – உயர்நீதிமன்றம் 

பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் போக்சோ குற்றங்களில் சமரசத்துக்கு இடமில்லை – உயர்நீதிமன்றம் 

HOME SLIDER, NEWS
பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் போக்சோ குற்றங்களில் சமரசத்துக்கு இடமில்லை - உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை செய்தவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறினாலும் சமரசத்துக்கு இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது 27). இவர் கடந்த 2014-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார், மருதுபாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் மருதுபாண்டி மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதால், மருதுபாண்டிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிபதி (கூடுதல் பொறுப்பு) ஜீவானந்தம் கடந்த...
தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

HOME SLIDER, NEWS, politics
தேர்தல் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு! சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஆஜராகி, ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் தினமும் டாஸ்மாக் கடைகளுக்கும், பார்களுக்கும் வருவதால் வைரஸ் தொற்று பரவும் இடங்களாக அவை திகழ்ந்து வருகின்றன. இது தொடர்பாக நான் தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார் அதற்கு நீதிபதிகள், மனு தாக்கல் செய்தால், விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று கூறினர். இதையடுத்து சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- பொதுமக்கள் எந்த ...
வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகள்!

வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகள்!

HOME SLIDER, NEWS, politics
வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதையொட்டி வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகள் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய பெரியார் சிலை அருகில் இருந்த...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்

HOME SLIDER, NEWS
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் இறுதியில் விடுதலையானார். பிப்ரவரி 8-ந் தேதி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த சசிகலாவுக்கு வழி நெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் சசிகலா தங்கி இருந்தார் அப்போது, தான் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த சசிகலா பின்னர் திடீரென அரசியலில் இருந்து விலகி ஒதுங்கி இருக்க போவதாக கூறினார். இந்தநிலையில் தஞ்சாவூர் சென்ற சசிகலா அங்கு நேற்று முன்தினம் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூருக்கு சென்று மகாலிங்க சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை சசிகலா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தார். அவருடன் அவரது உற...
போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – CN இராமமூர்த்தி அறிக்கை

போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – CN இராமமூர்த்தி அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட, சமத்துவம், சமூக நீதி நிலைக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சி தலைவர் சி.என்.இராமமூர்த்தி அறிக்கை வன்னியர் கூட்டமைப்பின் தலைவரும், அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் நிறுவன தலைவருமான சமூக போராளி சி.என்.இராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கை விவரம்: தமிழகத்தில் சமூக நீதியின் பெயரால் பல போலிகள் உலா வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் மட்டுமே சமூக நீதி பேசுவதும், சமத்துவம் பேசுவதும், சமுதாய மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியல் வியாபாரிகளின் முகத்திரையை இந்த தேர்தலில் கிழித்து எறிய வேண்டும். இதற்கான சரியான தலைமையை தமிழக மக்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். தமிழக்த்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது. இப்போது தேர...
புதுச்சேரியை முழு மாநிலமாக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் – டிடிவி தினகரன் பிரச்சாரம்

புதுச்சேரியை முழு மாநிலமாக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் – டிடிவி தினகரன் பிரச்சாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதுச்சேரி மாநில அமமுக சார்பில் ஏஎப்டி மைதானத்தில் மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது, ''புதுச்சேரியில் இதுவரை மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தருகின்ற விஷயத்தில் ஏற்கெனவே ஆண்ட காங்கிரஸ் அரசாக இருக்கட்டும், மத்தியில் ஆளுகின்ற பாஜக என இரண்டு கட்சிகளுமே மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பது தான் உண்மை. கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக அதற்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை எடுக்கவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த நாராயணசாமி, மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றார். அதற்கு, முன்பு அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தார். அப்போதாவது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க முயற்சி ...
மத்திய பிரதேசத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு!

மத்திய பிரதேசத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics
மத்திய பிரதேசத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு! மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதன் எதிரொலியாக அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் 3 நகரங்களில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையை அனுமதிக்க வேண்டாம் என்று மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் மத்திய பிரதேசத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிரடியாக லாக்டவுன் அறிவித்துள்ளார் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான். அதன்படி மத்திய பிரதேச தலைநகர் போபால், இந்தூர் மற்றும் ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் இரண்டு நாட்களுக்கு முழுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் எனவும் அறிவிக்க...
கொரோனா தொற்று அதிகரிப்பு புதுச்சேரியில் மே 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

கொரோனா தொற்று அதிகரிப்பு புதுச்சேரியில் மே 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

HOME SLIDER, NEWS, politics
  கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மே 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கொரோனா தொற்று சமீப நாட்களாக வேகமெடுக்க தொடங்கியது. கடந்த மார்ச் 16ம் தேதி புதுவையில் 24 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் மார்ச் 17ம் தேதி 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் நேற்று அதிரடியாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீப நாட்களில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு சுகாதாரத்துறை நேற்று பரிந்துரைத்தது....