இன்று தொடங்கும் திமுக நேர்க்காணல்… வேகமெடுக்கும் திமுக… பதட்டத்தில் அதிமுக!
இன்று தொடங்கும் திமுக நேர்க்காணல்... 9ம் தேதி வேட்பாளர் அறிவிப்பா? வேகமெடுக்கும் திமுக... பதட்டத்தில் அதிமுக!
தமிழக தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக கூட்டணி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது.
விருப்ப மனு அறிவிப்பில் முந்திக் கொண்ட திமுக நேர்க்காணலிலும் முந்திக் கொண்டது. இன்று தொடங்கி 6ம் தேதிவரை நேர்க்காணல் நடத்த திமுக திட்டம்.
7ம் தேதி பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடத்தி முடித்து 9ம் தேதி வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே விடியலைத் தேடி, மக்கள் கிராம சபை, அதிமுகவை நிராகரிக்கிறோம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல பெயர்களில் தமிழகம் முழுதும் பல கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த திருப்தியில் இருக்கிறது திமுக.
திமுகவின் அதிரடிகள் கண்டு ஆளும் கட்சி பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஏற்கனவ...








