ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள் – கர்நாடகா அதிர்ச்சி வீடியோ!

தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள் – கர்நாடகா அதிர்ச்சி வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தடுப்பூசி போட்டுக் கொள்வது போல நடித்த அதிகாரிகள் - கர்நாடகா அதிர்ச்சி வீடியோ கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் குறித்து பல வதந்திகள் எழுந்திருப்பதால், முன்களப் பணியாளர்கள் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராத சூழலே தற்போது நிலவுகிறது. அதனால், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் நடித்த வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில், அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருக்கையில் அமருகிறார். அங்கு இருக்கும் செவிலியர், ஊசியை உள்ளே செலுத்தாமல் அவர் அருகி...
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து!

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து! மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் சிறிது நேரத்திற்கு முன்னர் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் சீரம் நிறுவனத்தில் சிறிது நேரத்திற்கு முன்னர் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் திடீரென தீ விபத்திற்கான காரணம், பொருட்கள் சேதம் குறித்த விவ...
எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய  அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்

எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய  அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  எந்தெந்த கோவில்களில் சிலைகள் மாயமாகியுள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய  அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில், வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வரலாறு, சிலைகளின் தொன்மை, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். ஆனால், பல கோவில்களில் இந்த பதிவேடுகள் காணாமல் போனதால், ஐகோர்ட்டு உத்தரவுப்படி, கோவில் சொத்துகள் குறித்த விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதில், பல கோவில்களின் சொத்துகள், சிலைகள் மாயமானது தெரியவந்துள்ளது. ஆனால், அதை அதிகாரிகள் மறைக்கின்றனர். எனவே, கோவில்களுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், சிலைகள் மாயமானது உள்ளிட்டவை குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ், தொல்லியல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டு புலன் விசார...
ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள வேதா இல்லம்!

ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள வேதா இல்லம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜெயலலிதா நினைவிடத்தை தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள வேதா இல்லம்! ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட உள்ள நிலையில், அவர் வாழ்ந்த வேதா இல்லமும் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சென்னை போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான அவசர சட்டத்தை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறப்பித்தார். வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் தலைவரா...
டாஸ்மாக் கடைகளில் விற்கும் மதுபானத்திற்கு கம்பியூட்டர் பில் – நீதிபதிகள் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் விற்கும் மதுபானத்திற்கு கம்பியூட்டர் பில் – நீதிபதிகள் உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
டாஸ்மாக் கடைகளில் விற்கும் மதுபானத்திற்கு பில் - நீதிபதிகள் உத்தரவு தமிழக டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதும், உரிய ரசீது வழங்காததும் வாடிக்கையாகி விட்டது. இதனை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் பிரியா, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு அளித்தார். அந்த மனுவில் மதுபாட்டில்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாக குறிப்பிட்டிருந்த அவர், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்குமாறும் கம்பியூட்டர் ரசீது வழங்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். அந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றவர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை பட்டியலை வைக்க வேண்டும் என்றும் அனைத்து டாஸ...
சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!

சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்! சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வருகிற 27-ந்தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். இத்தகவலை அறிந்த உடன் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அமமுகவினர் மருத்துவமனை முன்பு குவிந்தனர். அப்போது, சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறி தென்பட்டதால் சசிகலாவிற்கு நடத்தப்பட்ட ஆர்.டி., பி.சி.ஆர். சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில், சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார...
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை!

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை! வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு முதலில் 20 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அதன்பின்னர், அதன் கிளைகளாக செயல்படும் பாரிமுனை, வானகரத்தில் இருக்கும் ஜெபகோபுரம் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது தவிர சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரனின் இல்லத்திலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. மேலும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பள்ளிகளில் ஏராளமான அதிகா...
சசிகலா நலமாக இருக்கிறார்… அச்சம் கொள்ள தேவை இல்லை – டிடிவி தினகரன் பேட்டி

சசிகலா நலமாக இருக்கிறார்… அச்சம் கொள்ள தேவை இல்லை – டிடிவி தினகரன் பேட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா நலமாக இருக்கிறார். அச்சம் கொள்ள தேவை இல்லை - டிடிவி தினகரன் பேட்டி சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு சிவாஜி நகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. * சசிகலா நலமாக இருக்கிறார். அச்சம் கொள்ள தேவை இல்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் சசிகலாவுக்கு ஸ்கேன் சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். * சசிகலா நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது....
டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்!

டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன். கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார். அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்ப்ன டிரம்ப் ...
வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்

வேளாண் சட்டங்களை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்னமும் நீடிக்கிறது. வேளாண் சட்டங்களுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், அந்த சட்டங்களை பகுதி வாரியாக ஆய்வு செய்து அறிக்கை தர குழுவையும்  அமைத்துள்ளது. இந் நிலையில் இன்று மத்திய அரசுடன் விவசாயி சங்கங்களின் பிரதிநிதிகள் 10வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடம், தங்களுக்குள் குழு ஒன்றை அமைத்து, கோரிக்கைகள் பற்றிய வரைவை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவற்றை திறந்த மனதுடன் அரசு விவாதிக்கும் என்று கூட்டத்தில் அமைச்சர் தோமர் தெரிவித்தார். மேலும் வேளாண் சட்டங்களை ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கும...