ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழகஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழகஅரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவிப்பு பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது * பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. * தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 3,000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப...
கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்!

கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்!

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
கங்குலி நலம்பெற வேண்டி ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம்! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி லேசான மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கங்குலி விரைவில் நலம்பெற வேண்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றுடன் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்...
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள்

HOME SLIDER, NEWS, Photos, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
16 கோபுரங்களில் இருந்து 35 நிமிடங்களுக்கு தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு 2 கின்னஸ் சாதனை விருதுகள் அபுதாபியில் பாரம்பரிய கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஷேக் ஜாயித் பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. மறைந்த முன்னாள் அதிபர் ஷேக் ஜாயித் பெயரில் நடக்கும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கலைபொருட்கள், பாரம்பரிய தயாரிப்புகள், உணவுபொருட்கள் ஆகியவை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா நடைபெறும் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரமாண்டமான வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த 16 கோபுரங்களில் இர...
சவுரவ் கங்குலியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா பானர்ஜி

சவுரவ் கங்குலியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க (பிசிசிஐ) தலைவராக செயல்பட்டு வருகிறார். மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதியம் 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்படுள்ளதாகவும், அதற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சவுரவ் கங்குலி பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்றார். அங்கு அவர் சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். ...
ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!

ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!   https://youtu.be/iH2GXev1bE4
மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக நியமனம்!

மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்பரசு உள்ளிட்டோரின் மகன்களுக்கும் கட்சியில் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் கே.எஸ்.அழகிரி, ராமசாமி, சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, செல்லகுமார், மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார் எம்.பி., விஷ்ணுபிரசாத், மாயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, ஜே.எம்.ஹாரூண் ரசீத், பீட்டர்...
இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த – பாஜகவை காட்டமாக விமர்சித்த சுப்பிரமணியசாமி

இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த – பாஜகவை காட்டமாக விமர்சித்த சுப்பிரமணியசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்தியஅரசு  அஸ்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த என காட்டமாக விமர்சித்து உள்ளார். அவசரகால பயன்பாட்டிற்காக கூட அஸ்ட்ராஜெனெகாவை உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்காத நிலையில்,  இந்தியர்கள் கினியாப் பன்றிகளாக இருக்கப் போகிறார்களா? என கேள்வி எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்–டி தடுப்பூசி, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைய...
திமுக நடத்திய கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கையாளா ? ஸ்டாலின் எச்சரிக்கை

திமுக நடத்திய கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கையாளா ? ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  கோவை, தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார்.பதில் சொல்ல முடியாதுஅப்போது எழுந்த பெண் ஒருவர், திமுக கட்சியை மாட்டி கொண்டு, எதற்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது. திமுக., வினர், ஸ்டாலின் முன்னிலையிலேயே அந்த பெண்ணை தாக்க முயன்றனர். அவர்களை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பி ஆள் என தெரிவித்தார். தொடர்ந்து அந்த பெண், ''திமுக எதையும் செய்யவில்லை. கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன்'' என கோஷம் போட்டு கொண்டு வெளியேறினார். வெளியி...
எந்த குழப்பமும் வேண்டாம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு

எந்த குழப்பமும் வேண்டாம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தமிழக தேர்தல் களம பரபரப்பான இயங்கி வருகிறது. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அதிமுக தலைமைக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், பாஜக தலைமையோ, ரஜினி அரசியலுக்கு வந்து தங்களுக்கு ஆதரவு தருவார் என கனவுகண்டு வந்தனர். அந்த மிதப்பில், அதிமுகவை மட்டம் தட்டும் வகையில் விமர்சித்து வந்தனர். கடந்த வாரம்கூட பாஜக மாநில பொறுப்பாளர் சிடி ரவி, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து, தேர்தல் முடிவு வந்தபிறகு தீர்மானிக்கப்படும் என கூறினார். இது அதிமுக தலைவர்களிடையே கடும்...
2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்!

2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் புதிதாக 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் முதல் இடம் பிடிக்கும் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஜனவரி ஒன்றாம் தேதி சுமார் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312). இதனை தொடர்ந்து எகிப்து (9,455), பங்களாதேஷ் (...