ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

சிறைத்துறையின் கணக்குப்படி சுதாகரன் முதலிலும், அடுத்து இளவரசியும் இறுதியில் தான் சசிகலா  விடுதலை செய்யப்படுவாராம்!

சிறைத்துறையின் கணக்குப்படி சுதாகரன் முதலிலும், அடுத்து இளவரசியும் இறுதியில் தான் சசிகலா  விடுதலை செய்யப்படுவாராம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சிறைத்துறையின் கணக்குப்படி சுதாகரன் முதலிலும், அடுத்து இளவரசியும் இறுதியில் தான் சசிகலா  விடுதலை செய்யப்படுவாராம்! சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, கர்நாடகா சிறைத்துறையின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டு சிறை தண்டைனைக்காக அடைக்கப்பட்டனர். அவர்களது தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ஆம் திகதியோடு முடிவடைய உள்ளதாகக் கர்நாடக சிறைத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது. இந்நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரின் விடுதலைக்கான பூர்வாங்க வேலைகளை ஏற்கனவே சிறைத்துறை தொடங்கிவி...
தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்திய ஹன்சிகா

தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்திய ஹன்சிகா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்திய ஹன்சிகா நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால் நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது. நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்....
கொரோனா வைரஸ் பரவும் வேகம் ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை

கொரோனா வைரஸ் பரவும் வேகம் ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இங்கிலாந்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பை தடுக்கும்வகையில் அந்நாட்டில் கடந்த வாரம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதல் வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் கொரோனா விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் புதிய உச்சத்தை தொட்டது. தினமும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸ் இவ்வளவு வேகமாக பரவ காரணம் என்ன? என்பது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி செய்தனர். ...
மகாராஷ்டிராவில் இனி மற்றொரு ஊரடங்கு தேவையில்லை -முதல்மந்திரி உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் இனி மற்றொரு ஊரடங்கு தேவையில்லை -முதல்மந்திரி உத்தவ் தாக்கரே

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மகாராஷ்டிராவில் இனி மற்றொரு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய தேவையில்லை என மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- பொது இடங்களுக்கு செல்லும்போது அடுத்த 6 மாதங்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும். வரும் முன் காப்பதே சிறந்தது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கோ அல்லது மற்றொரு முழு ஊரடங்கோ அமல்படுத்த வேண்டும் என சிலர் எனக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால், மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கோ அல்லது மற்றொரு முழு ஊரடங்கோ அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை....
மாநில அரசின் செயல்பாடுகளுக்குள் வெட்கமின்றி தலையிடும் மத்திய அரசு – மம்தா தாக்கு

மாநில அரசின் செயல்பாடுகளுக்குள் வெட்கமின்றி தலையிடும் மத்திய அரசு – மம்தா தாக்கு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மேற்குவங்காளத்தின் டைமண்ட் ஹார்பர் பகுதிக்கு கடந்த 10-ம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது, ஜேபி நட்டா பயணித்த வாகனமும், அவரது பாதுகாப்பிற்கு வந்த வாகனங்கள் மீதும் மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து ஜே.பி.நட்டா-வின் பயணத்திற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடம்மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விடுவிக்க மேற்குவங்காள அரசு மறுத்துவிட்டது. இதனால், மத்திய பாஜக அரசுக்கும் முதல்மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையே அதிகார மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜிக்கு ஆதரவான கர...
குருத்வாராவுக்கு திடீரென்ற சென்ற பிரதமர் மோடி!

குருத்வாராவுக்கு திடீரென்ற சென்ற பிரதமர் மோடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாராவுக்கு இன்று திடீரென சென்றார். அங்கு அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்றனர். குருத்வாராவிற்குள் சென்ற மோடி அங்கு வழிபாடு நடத்தியதுடன், குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார். திட்டமிடப்படாத திடீர் பயணம் என்பதால் மோடி குருத்வாராவுக்கு சென்றபோது, அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. குருத்வாராவில் வழிபட்ட அவர், அங்கிருந்த சீக்கிய பக்தர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.  இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,  ‘வரலாற்று சிறப்பு மிக்க ரகாப் கஞ்ச் சாகிப் குருத்வாராவில் இன்று வழிபாடு நடத்தினேன். ஆசிர்வதிக்கப்பட்டவன் போல் உணர்கிறேன். குரு தேஜ் பகதூரின் கருணையால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் நானும் ஒ...
கூட்டணிக்குள் பாஜக முருகன் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் – புகழேந்தி

கூட்டணிக்குள் பாஜக முருகன் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் – புகழேந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கூட்டணிக்குள் பாஜக முருகன் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - புகழேந்தி அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி  அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே நேற்று அரியலூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும். தேர்தலை யாரு...
மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு கோரிக்கை வைத்தால் அனுமதி – அமைச்சர் கடம்பூர் ராஜூ

மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு கோரிக்கை வைத்தால் அனுமதி – அமைச்சர் கடம்பூர் ராஜூ

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள மாஸ்டர் படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தல் அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளாஅர். இது விஜய் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மாஸ்டர்’படம்;. இப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டில் மிகக்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மாஸ்டர் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என மாஸ்டர் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் எப்போது படம் ரிலீஸாகும் எனப் பெரும் கேள்விகள் ரசிகர்களிட,ம் எழுந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. குறிப்பாக இப்படம் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் பிரமாண்டமாக ரி...
காங்கிரஸ் தலைவராகப் மீண்டும் ராகுல்காந்தி!?

காங்கிரஸ் தலைவராகப் மீண்டும் ராகுல்காந்தி!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவிடம் படு்தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாருமே தேர்தலில் கட்சித் தோல்விக்குப் பொறுப்பேற்காத நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடித்தார். இதற்கு 5 மாநில முதல்வர்கள் நேரில் சென்று ராகுலை சமாதானப்படுத்த முயன்றனர். பலவேறு மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் எதற்கும் ராகுல் உடன்படவில்லை என்று தெரிகிறது. நேரு குடும்பத்தைச் சாராத ஒர்வரே காங்கிரஸ் தலைவராக பொறுபேற்க வேண்டும் என்று பிடிவாதமாகக் கூறினார். ஆனால் இதை ஏற்காத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்தியே காங்., தலைவராகத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதை ஏற்காத ராகுல்காந்தி தன் முடிவில் உறுதியாக இருந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்ற...
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கிரிக்கெட் சங்க நிதி மோசடி தொடர்பாக, பரூக் அப்துல்லா உள்ளிட்டோரின் ரூ.11.86 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது அப்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா. அப்போது கிரிக்கெட் வளர்ச்சிக்காக ரூ..43.69 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பரூக் மற்றும் நிர்வாகிகளான கான், மிர்சா, மிர் மன்சூர் கசான்பர் அலி மற்றும் முன்னாள் கணக்காளர்கள் 2 பேர் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையை சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அமல...