ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆன்லைன் சூதாட்டம் மூலம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அவல சூழ்நிலை ஏற்பட்டது. பல இளைஞர்கள் பணத்தை இழப்பதோடு, உயிர்களை மாய்த்துக் கொண்டதால் உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருந்தார். அதன்படி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு இன்று தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுகிறது. மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6  மாதம் தண்டனையும் விதிக்கப்படும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவ...
அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்

அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டம் தனது வாசலை திறந்த பின்பும் அரசியல் காரணங்களுக்காக 7 பேர் விடுதலை மறுக்கப்படுவது அநீதி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கருத்து தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஏழுபேர் இத்தனை வருடங்களாகியும் விடுவிக்கப்படாதது அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாக தான் உள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மாநில அரசே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தற்பொழுது வரையிலும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத் அவர்களை விடுதலை செய்தது போல தனது மகனையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாயார் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 7 பேர் விடுதலை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்...
துபாய் விபத்தில் விமான வேகத்திற்கு இணையாக பறந்த ஜெட்மேன் மரணம்

துபாய் விபத்தில் விமான வேகத்திற்கு இணையாக பறந்த ஜெட்மேன் மரணம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகெங்கிலும் உள்ள சாஹசம் செய்ய துடிக்கும் ஒவ்வொரு நபரையும் ஒரே ஒரு  வீடியோ மூலம் கட்டிபோட்டவர் ஜெட்மேன் வின்சென்ட்(வயது-36) அவர் துபாயில் உயிரிழந்தார். துபாய் வான்வழி 400 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த எமிரேட் விமானத்துக்கு இணைய ஜெட்மேன் உடை அணிந்து அவர் பறந்து சென்ற ஒரு வீடியோவே போதும் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஜெட்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் 36 வயதான வின்சென்ட், இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் ஜெட் பேக் அணிந்து கொண்டு மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில், வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். ஏராளமான வான் சாகசங்களை நிகழ்த்தியுள்ள இவர், துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருந்து குதித்து, ஸ்கை டைவிங் செய்தது,இவரது சாகசங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ஜெட்பேக் சூட் அணிந்து கொண்...
திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது

திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டமன்ற தேர்தலுக்கான 100 நாள் பிரசாரத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து, அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை விடுவிக்கக்கோரி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கைது செய்தாலும் திமுகவின் பிரசார பயணம் தொடரும் என்றும், திமுகவின் பிரசாரத்தை தடுக்க அரசு முயற்சிப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்....
சசிகலா விடுதலையில் கூடுதல் சலுகைகள், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது – கர்நாடக  அமைச்சர்

சசிகலா விடுதலையில் கூடுதல் சலுகைகள், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது – கர்நாடக  அமைச்சர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சசிகலா விடுதலையில் கூடுதல் சலுகைகள், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது - கர்நாடக  அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு(2021) பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை கர்நாடக சிறைத்துறை தீவிரமாக பரிசீலித்து வருவதால் சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. சலுகைகள் வழங்கப்படலாம் என்...
மாநாடு படத்தில் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகர்!

மாநாடு படத்தில் முதலமைச்சரான எஸ்.ஏ.சந்திரசேகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக சமீபத்தில் பதிவு செய்தார். இதற்கும் விஜய்க்கும் சம்மந்தம் இல்லை என்று அவரே கூறினார். விஜய்யும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இந்த விஷயம் மிகவும் பரபரப்பானது. இதற்கிடையில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகி வரும் இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் முதலமைச்சர் வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காட்சிகள் பாண்டிசேரியில் படக்குழுவினர் படமாக்கியுள்ளனர் சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்....
உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வரும் நிலையில் இன்று அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வரும் நிலையில் இன்று அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வரும் நிலையில் இன்று அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை சென்னை வர உள்ள நிலையில், தேர்தல் பணிகள் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசிப்பதற்காக, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இன்று சென்னையில் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, இன்னும் ஐந்து மாதங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை துவக்கி உள்ளன.உரசல்மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.,விற்கு, தற்போது தமிழகத்தில், ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லை. வரும் சட்டசபை தேர்தலில், கணிசமான எண்ணிக்கையில், எம்.எல்.ஏ.,க்களை பெறுவதற்கான, பல்வேறு பணிகளை, பா.ஜ., தேசிய தலைமை துவக்கி உள்ளது.தினமும் மாற்று கட்சியில் உள்ளவர்களை, கட்சியில் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து ஓட்டுச் சாவடிகளுக்கும், முகவர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர். தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டண...
உலக அளவில் ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு இந்த ஆண்டு  77-வது இடம்!

உலக அளவில் ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு இந்த ஆண்டு 77-வது இடம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஊழல் மலிந்த நாடுகளில் இந்தியாவுக்கு இந்த ஆண்டு 77-வது இடம்! அமெரிக்காவில் மேரிலாந்து மாகாணத்தில் அன்னாபொலிஸ் நகரில் டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு செயல்படுகிறது. லஞ்ச ஒழிப்பு அமைப்பான இந்த அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் உலகளவில் இந்தியா உள்ளிட்ட 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு பட்டியலிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு தரவுகள்படி, வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தென்சூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம்...
சாலமன் தீவில் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு!

சாலமன் தீவில் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  சாலமன் தீவின் தகவல் தொடர்பு துறை அமைச்சரான பீட்டர் ஷனேல் அகோவகா, இந்த வாரம் ஃபேஸ்புக்கின் தற்காலிக தடைக்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதகா தெரிகிறது. மேலும் இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இணைய சேவை வல்லுனர்களுடன் அமைச்சர் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதைப் பற்றி தகவல் தொடர்பு துறை அமைச்சர் பீட்டர் ஷனேல் அகோவகா தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்களுக்கு எதிராக தவறான மொழிகளை பயன்படுத்துவது, பிரதமருக்கு(மனஸ்சே சோகாவரே) எதிரான வாதங்கள், பாத்திர படுகொலை, விஐபி களைப்பற்றி அவதூறு, போன்ற பிரச்சனைகள் அனைத்தும் கவலைக்குரிய பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது. ஆதலால் நாங்கள் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.   மேலும் பேஸ்புக்கை தடை செய்ய அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை கொண்டு வர இருக்கிறது என்னும் கேள்விக்கு, அரசாங்கமோ அமைச்சர் அ...
வைரலாகி வரும் மு.க.ஸ்டாலினின் சைக்கிளிங் போட்டோக்கள்

வைரலாகி வரும் மு.க.ஸ்டாலினின் சைக்கிளிங் போட்டோக்கள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேஷுவலாக சைக்கிளிங் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் திமுக இந்த தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் கட்சியை வலுப்படுத்தி முன்னெடுத்து செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் திமுக உள்ள நிலையில், புதிய பொருளாளர், பொது செயலாளர்களுடன் இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளிங் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கட்சி சார்ந்த செயல்பாடுகளில் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வந்தாலும், இந்த தேர்தலில் உதயநிதி மீது ஒரு கவனத்தை ஏற்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுபயண பிரச்...