கர்நாடகாவில் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது- டி. ராஜேந்தர்
நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் விழாவில் பங்கேற்க வந்த டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க.வை பின்னால் இருந்து இயக்குவது பாரதிய ஜனதா கட்சிதான். தமிழக ஆட்சியாளர்கள் பாரதிய ஜனதாவின் ஊதுகுழலாக உள்ளனர்.
கர்நாடகாவில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. அங்கு தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. அதுவரை இங்கு என்ன போராட்டம் நடந்தாலும் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்காது.
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளது. அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து இங்கு உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. நடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு நடிகை தமிழகம் ஒரு கண் என்றால், கர்நாடகம் இன்னொரு கண் என்று கூறி உள்ளார். அப்படி என்றால் தமிழக மக்க...









