அதிமுக உண்ணாவிரத போராட்டம்; எடப்பாடி & பன்னீர் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றுள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16 -ஆம் தேதி முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்கு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கிடையே இந்த கெடு கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது. எனினும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனால், மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம...









