தலைமை முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.! – ரஜினி எச்சரிக்கை!
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அரசியலில் களம் காண உள்ள ரஜினி, முற்கட்டமாக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருதினங்களுக்கு முன்னர் மன்றத்தின் விதிகளுக்கு மாறாக செயல்படுவதாக கூறி ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்புராஜ் இடைக்கநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஜினி மக்கள் மன்றத்தில் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ரஜினியின் அறிவுரைப்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம்.சுதாகர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்டுள்ள செய்தியில், தம்புராஜ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்காமல் தனக்கு விருப்பமானவர்களை ம...









