டெல்லியில் தமிழுக்கான அகாடமி – உருவாக்கிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழ் மொழி மற்றும் தமிழி மக்களின் கலாசாரத்தை ஊக்குவிக்கும் விதமாக தலைநகர் டெல்லியில் தமிழுக்கான அகாடமியை டெல்லி அரசு உருவாக்கியுள்ளது.
தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக அகாடமி தொடங்கியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்றுவரும் டெல்லி அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "டெல்லியில் தமிழ் அகாடமி" அமைத்துள்ள டெல்லி முதல்வர் @CMODelhi ( அரவிந்த் கெஜ்ரிவால்) மற்றும் துணை முதல்வர் @msisodia (மனீஷ் சிசோடியா) ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
டெல்லி அ...









