இயக்குனர் விசு அவர்கள் வெளியிட்ட பதிவு.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுபவன் நான் அல்ல .. சொந்த முயற்சியில் எத்தனையோ vv நற்பணிகளை 'அரட்டை அரங்கம்' மூலமாகவும் 'மக்கள் அரங்கம்' மூலமாகவும் என்னால் செய்ய முடிந்திருக்கிறது என்பதை நாடறியும் .. Dialysis எனும் ரத்த சுத்திகரிப்பு நோயுடன் 6 வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கும் நான், இன்றைய தேதியிலும், இந்த 2018 ம் வருஷத்திலும், மாணவ மாணவிகளின் படிப்புக்காக எங்கள் 'விசு எஜுகேஷனல் டிரஸ்ட்' மூலம் லஷக்கணக்கில் பணம் நன்கொடை வழங்கி இருக்கிறேன் .. என்பதையும், இனியும் வழங்குவோம் என்பதையும், வருமான வரி அலுவலகத்துக்கு நாங்கள் சமர்ப்பிக்க இருக்கும் கணக்குப்புத்தகங்கள், ஆவணங்கள் சொல்லும் .. 7/8/2003 அன்று ஆரம்பிக்கப்பட்ட அந்த டிரஸடுக்கு நான் Founder and Managing Trustee .. அன்று முதல், 15 வருடங்களாக அந்த 'விசு எஜுகேஷனல் டிரஸ்டி' ல் மாணவ மாணவிகளுக்கு ந...
தியேட்டரில் புதுப்பட திருட்டு...
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
தமிழ்த் திரைப்படங்கள் ரிலீசான அன்றே தியேட்டர்களில் திருட்டுத்தனமாக கேமரா வைத்து எடுக்கப்பட்டு, இண்டர்நெட்டில் ஏற்றி திருட்டுத்தனமாகப் பார்ப்பதற்கும், டவுன்லோடு செய்து திருட்டு டிவிடி தயாரித்து எல்லா இடங்களுக்கும் விநியோகித்து தமிழ் சினிமாவின் வியாபாரத்தைப் பெருமளவில் நஷ்டப்படுத்திக் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்ததே.
அதனைத் தடுக்க சில தயாரிப்பாளர்கள் முயன்று தோற்றுப் போனார்கள். தியேட்டர் திருடர்கள் மேலும் வளர்ந்து சினிமாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கினார்கள். சினிமா விரும்பிகளும் டிக்கெட் விலை போன்ற சில காரணங்களைச் சொல்லி ஆண்ட்ராய்டு போன் மூலம் படம் பார்த்து இண்டர்நெட் திருட்டுக்கு உடந்தையாக இருந்தனர்.
இது தொடர்ந்தால் வெகு விரை...
தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தாரா இயக்குனர் ரஞ்சித்.
மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில்சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன். சமுதாயம்,அரசியல்,திரைப்படங்கள் குறித்து பேசினோம். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்தது தமிழக சினிமா வட்டாரத்திலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
ராகுல்காந்தியை இயக்குனர் ரஞ்சித் ஏன் திடீரென சந்தித்தார். அரசியல் பேசியதாக கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சியில் ரஞ்சித் சேரப் போகிறாரா...
அல்லது சமீபத்திய சினிமா அரசியல்வாதியாக அறிவித்த ரஜினி சார்பாக இந்த சந்திப்பு நடந்ததா என்றும் பல ஹோசியஙகள் களை க...
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
செக்கச் சிவந்த வானம் படத்தை முடித்த கையோடு அதிரடியில் இறங்கியுள்ளார் கோலிவுட்டின் மிகத் திறமையான நடிகர் சிம்பு...
இன்றைய ஜல்லிக்கட்டின் வெற்றியை மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதன் தொடக்கம் சிம்புதான்.
முதல் ஆளாகத் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்து போராடத் தொடங்கிய தமிழன். ஆனால் நான்தான் தொடங்கினேன் என எங்கும் இதுவரை மார்தட்டிக் கொள்ளவில்லை. மக்கள் நன்மைகளை கணக்கில் கொண்டு மக்களோடு மக்களாக நின்று குரல் கொடுக்கும் நிஜ நாயகனாக மட்டுமே தமிழ் மக்கள் முன் நிற்கிறார் சிம்பு.
தனது பழைய பாணிகளைத் தூக்கியெறிந்துவிட்டு கடுமையான உழைப்பு, சரியான கதைத் தேர்வு, நேரத்திற்கு படப்பிடிப்பில் கலந்துகொள்வது என ஒரு புது சிம்பு தெம்பாக களமிறங்கியுள்ளார்.
அடுத்தடுத்த...
பாலச்சந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு தடை விதித்த இலங்கை!
பாலசந்திரன், இசைப்பிரியா இருவரின் படுகொலையை மையமாக வைத்து ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்ட 'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness In Heaven) திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட முழுநீள திரைப்படம் சாட்சிகள் சொர்க்கத்தில்.
இப்படத்தில் ஈழத்தில் நடந்த கொலை சம்பவங்களோ, சித்திரவதை காட்சிகளோ, இறுதிப்போரில் நடந்த சம்பவங்களோ சித்தரிக்கப்படவில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தார் இப்படத்தின் இயக்குநர் ஈழன் இளங்கோ. இருப்பினும், இறுதிப்போரில் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் முகாம்களில் மற்றும் சமுதாயத்தில் வாழும் மக்களின் சோகக்கதைகள் மற்றும் சம்பவங்கள் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது...
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை;
தமிழக நலன் காப்போர் மீது பாசிச அடக்குமுறை!
வைகோ கண்டனம்
தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், சுற்றுச்சூழல் நாசத்தைத் தடுக்கவும், விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுகின்றவர்களை,
தேசப் பாதுகாப்புச் சட்டம், தேசத்துரோகக் குற்றச்சாட்டு, குண்டர் சட்டம் ஆகிய கொடிய அடக்குமுறைச் சட்டங்களில் வழக்குப் பதிவு செய்து, அறவழிப் போராட்டக்காரர்களையும் சிறையில் அடைத்துத் துன்புறுத்துவது, தமிழக அரசின் அன்றாட நடவடிக்கை ஆகி விட்டது.
நாசகார ஸ்டெர்லைட் நச்சுஆலையை எதிர்த்து, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 14 பேரை காவல்துறை சுட்டுக்கொன்றது. மரண காயமுற்று மருத்துவமனையில் இருந்தவர்களைப் பார்க்கச் சென்றவர்கள் மீதும் தடியடி நடத்தினர். அரசியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் சென்னை எட்டு வழிச் சாலை குறி...
கருத்து சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதிக்கும் விதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது
சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கே.வி. சுசீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் அதற்குக் கூறியுள்ள காரணங்கள் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
அரசு முன்மொழியும் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டவும், எதிர்த்து இயக்கம் நடத்தவும் இந்திய அரசியல் சட்டம் உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கிற உரிமை அனைவருக்கும் உண்டு. குறிப்பாக, ஏற்கனவ...
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ்.
தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.
"என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார்.
வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம்வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது.
கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்....
டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விபரங்கள் கீழ்வருமாறு:-
மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடு இருக்க வேண்டும்.
மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லி அரசு என இருவருமே பொறுப்பு.
மாநில அரசுகளின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது.
சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்புகள் ...