செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து?!

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து?!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    விசாரிக்க தனிவீடு... பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்... தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து! விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் கொடூர மரண வழக்கு நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைதாகி உள்ளனர். இந்த சூழலில் இதே போல வியாபாரிகளிடமும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை மடக்கியும் தொடர் வசூலில் ஈடுபடும் இன்ஸ்பெக்டரால் பொதுமக்கள் பெரிதும் அவதி படுகிறார்கள். அதோடு, புகார் கொடுக்கும் பொது மக்களை அலட்சியமாகவும், புகாரில் குற்றம் சாட்டப்படும் நபரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்தும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார் இந்த இன்ஸ்பெக்டர் தனது கட்டப்பஞ்சாயத்து வசூல் வேட்டைகளுக்கு ...
ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் நினைவு இல்லம் அமைக்க மீண்டும் தீபா- தீபக் எதிர்ப்பு!

ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் நினைவு இல்லம் அமைக்க மீண்டும் தீபா- தீபக் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஜெயலலிதாவுக்கு போயஸ்கார்டனில் நினைவு இல்லம் அமைக்க மீண்டும் தீபா- தீபக் எதிர்ப்பு! மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் நேரடி வாரிசுகள் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களை எடுப்பது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, நிவாரணம் பெறவேண்டும் என்று நீதிபதிகள் அறிவுரை வழங்கினர். இந்நிலையில், போயஸ் கார்டனில் ஒரு பகுதியை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா, தீபக் ஆகியோர் இன்று சென்னை கிண்டி கோட்டாட்சியர் என்.லட்சுமியிடம் மனு அளித்தனர். ஏற்கனவே அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தீபாவும், தீபக்கும் இன்று மீண்டும் மனு அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஜெ.தீபா, தீபக் சார்ப...
ஜூம் செயலிக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ மீட்!

ஜூம் செயலிக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ மீட்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஜூம் செயலிக்கு போட்டியாக களம் இறங்கும் ஜியோ மீட்! உலகம் முழுதும் கொரானா பாதிப்பால் இயல்பான வாழ்க்கை பெரிதும் தடை பட்டு உள்ளது. பல நாடுகளில் அரசு ஆலோசனைகள், முக்கிய சந்திப்புகள் கூட ஜூம் மீட் எனப்படும் செயலி மூலமாக நடந்து வருகிறது. இந்த ஜூம் மீட் செயலி பாதுகாப்பானதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தனி நபர் தகவல்களை ரகசியம் காக்க தவறுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பிரதமர் மோடி தொடங்கி பல அரசியல் கட்சி தலைவர்களும் ஜூம் மீட் செயலி மூலமாக பல கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போது ஜூம் மீட் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ மீட் என்ற செயலியை அறிமுகபடுத்தி உள்ளது. தற்போது சோதனை முயற்சியாக இந்த ஜியோ மீட் செயலி பிளே ஸ்டோரில் உள்ளது. ஜூம் செயலியை விட நல்ல தெளிவான காட்...
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் !

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் !

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் ! சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு. தப்பி ஓடிய முத்துராஜை தேடி வருகிறோம். விரைவில் பிடிபடுவார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட யாரும் அப்ரூவராக மாறவில்லை. சிபிசிஐடி போலீஸ் அறிவிப்பு...
உண்மையை கண்டுபிடிக்க 12 மணிநேரம் சிபிசிஐடி தனிதனியாக விசாரணை!

உண்மையை கண்டுபிடிக்க 12 மணிநேரம் சிபிசிஐடி தனிதனியாக விசாரணை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உண்மையை கண்டுபிடிக்க 12 மணிநேரம் சிபிசிஐடி தனிதனியாக விசாரணை! சாத்தான்குளம் தந்தை மகன் கொடூர மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொடூர மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்ததும் விசாரணை வேகம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருகிறது. இப்போது சிபிசிஐடி விசாரணை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. எப்ஐஆர் பதிவு செய்த எஸ்ஐ ரகுகணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 போலீஸ் கைது செய்யப்பட்டார்கள். அதில் மிக முக்கியமான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைதுதான் மிக பரபரப்பாக அமைந்தது. கைது செய்யபட்டவர்களை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வந்து, தீவிர விசாரணை செய்தார்கள். அதோடு, ஒவ்வொருவரிட...
சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற புதிய காப்பீடு திட்டம்!

சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற புதிய காப்பீடு திட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற புதிய காப்பீடு திட்டம்! இந்தியாவில் சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களில் பலர் சிகிச்சைக்கு உரிய நேரத்தில் பணம் கட்ட முடியாமல் பரிதாபமாக பலியாகிறார்கள். இந்த சிக்கலை போக்க மத்திய அரசு புதிய காப்பீடு திட்டத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் சராசரியாக 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இந்த விபத்துக்களில் சிக்கி சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி, விபத்தில் சிக்குபவர்கள் அனைவருக்கும் ரூ.2.5 லட்சம் வரை பணம் எதுவும் இன்றி இலவச சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக மோட்டார் வாகன விபத்து நிதியை ஏற்படுத்துமாறு, மாநில போக்குவரத்து செயலர் மற்றும் ஆணையர்களுக்கு சாலை போக்குவர...
என்.எல்.சி. விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 30 லட்சம் நிவாரணம் – மத்திய அரசு அறிவிப்பு

என்.எல்.சி. விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 30 லட்சம் நிவாரணம் – மத்திய அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் நேற்று காலை திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்எல்சி அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உள்துறை மந்திரி அமித்ஷா முதலமைச்சர் பழனிசாமியுடன் இன்று தொலைபேசியில் பேசினார். அப்போது என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், என்.எல்.சி. விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழ...
சாத்தான்குளம் கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

சாத்தான்குளம் கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சாத்தான்குளம் கொலையில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயன்ற அ.தி.மு.க அரசின் அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் தலையீட்டினால் சட்டத்தின் முன் வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், நீதிமன்றம், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக்கொண்டது. இந்த வழக்கில் சிலரைக் கைது செய்துவிட்டு, அனைவரது வாயையும் மூடிவிடலாம் என்று அரசு தப்புக்கணக்கு போட்டுவிடக் கூடாது. அனைத்து தரப்பினரும் கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள். கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்ட வேண்டும். மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங...
அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு!

அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு! சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர். முன்னதாக வியாபாரி-மகன் பரிதாபமாக அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, “எனக்கும் - குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   இன்று சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிள...
சென்னை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றார் மகேஷ்குமார் அகர்வால்!

சென்னை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றார் மகேஷ்குமார் அகர்வால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்ய விரும்புகிறேன். கரோனா பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். அவசியம் ஏற்படும் போது வெளியே வந்தாலும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் வலியுறுத்தினார். மேலும், கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் செல்லிடப்பேசியில் காணொலி வாயிலாகவே பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டம் நாள்தோறும் அல்லது வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் என்னிடம் நேரடியாகவே புகார் அளிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும் என்ற...