பஞ்சுப் பொங்கல், விறகில்லா அடுப்பு என செட்டப் பொங்கல் விழா பா.ஜ.கவின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று
பஞ்சுப் பொங்கல், விறகில்லா அடுப்பு என செட்டப் பொங்கல் விழா பா.ஜ.கவின் ஏமாற்று வேலைகளில் இதுவும் ஒன்று
தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பா.ஜ.க., பல்வேறு நாடகங்களை அடிக்கடி அரங்கேற்றி வருகிறது. குறிப்பாக, கடவுளின் பெயரில் யாத்திரை நடத்துவதாக கூறி, கூட்டத்தைக் கூட்ட சினிமா டான்ஸர்களை குத்தாட்டம் போட வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது வந்தது.
பா.ஜ.கவின் இதுபோன்ற ஏமாற்று வேலைகளை தமிழக மக்கள் அடையாளம் கண்ட நிலையில், விறகில்லா அடுப்பு, பஞ்சுப் பொங்கல் என சினிமா சூட்டிங் பாணியில் நடத்திய பா.ஜ.கவினரின் பொங்கல் விழாவை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மதுரை தெப்பகுளம் பகுதியில், பா.ஜ.க-வினர் சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் குஷ்பு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு காசு கொடுத்து அழைத்து வரப்பட்ட பெண்கள் பலர் விழா நட...









