சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார் – உதயநிதி ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டது என்றும், நம்மை விட மோசமானவன் என நினைத்து கொரோனாவே பயந்து ஓடும் நிலை உள்ளது என்றும், சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார் எனவும், சிதம்பரத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சிதம்பரத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடந்தது. திமுகவின் முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம் ஆர் கே பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் முதன் முதலாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த பிரச்சார பயணத்தை மேற்கொண்டேன். திருக்குவளையில் கலைஞர் பிறந்த இல்லத்தில் அவரது விட்டு வாயிலின் முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டேன். எடப்பாடி அரசு...









