இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப்போகிறோம் – மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 67 மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
நான் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், முதல் அமைச்சருக்கு வழிகாட்டக்கூடிய ஒருவனாக நான் இருக்கிறேன். வழிகாட்டுவதை அவர் பின்பற்றுகிறாரா? என்ற சந்தேகம் இருப்பது வேறு பிரச்சினை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை.
தி.மு.க. எதிர்க்கட்சி. ஆனால் நாம் அறிவிப்பதை பார்த்துத்தான் ஆளுங்கட்சியினர் அவற்றைச் செய்யக் கூடிய நிலைமை உள்ளது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களை பொறுத்தவரையில் அதுதான் ஆளுங்கட்சி. அதுதான் உண்மை. இன்னும் 3 மாதம் அல்லது 4 மாத காலத்தில் நாம்தா...









