சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

எல்லையில் வலுவான தடுப்பு வேலி – பி.எஸ்.எப். நடவடிக்கை!

எல்லையில் வலுவான தடுப்பு வேலி – பி.எஸ்.எப். நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
எல்லையில் வலுவான தடுப்பு வேலி - பி.எஸ்.எப். நடவடிக்கை! இந்தியா-வங்காளதேச எல்லையில் போதைப்பொருள், கால்நடைகளை கடத்துவோர் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர். இந்த பகுதியில் போடப்பட்டுள்ள வேலி பழையதாக வலு இழந்ததாக உள்ளதால் அதை துண்டித்து சட்ட விரோதமாக கடத்தல்காரர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் நவீன வகை வேலியை எல்லைப் பாதுகாப்பு படை அமைத்துள்ளது. இதன்படி இந்த வேலியை யாரும் வெட்டவோ அல்லது ஏறி குதிக்கவோ முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட உழைப்பு மற்றும் வலுவுடன் இது இருக்கும் என வடக்கு வங்க எல்லை பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அஜய் சிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகள் இடையே வேலி இல்லாத பகுதியில் 110கிலோ மீட்டர் தூரம் தற்போது ஆன்டி கட்-ஆன்டி க்ளைம்ப் தடுப்பு வேலி அமைக்கப் பட்டுள்ளதாகவும், இது மொத்தமுள்ள 4,216 கில...
ஜூனியர் உலக கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா!

ஜூனியர் உலக கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஜூனியர் உலக கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா! ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குரூப் சி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. டீகே வில்லி 71 ரன்னும், கொரே மில்லர் 64 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் காசிம் அக்ரம் 3 விக்கெட்டும், அவைஸ் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் சிக்கி திணறியது. பாகிஸ்தான் மெஹ்ரன் மும்தாஸ்...
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கையோடு எடுத்துச் செல்லும் போர்டபிள் டாய்லெட்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கையோடு எடுத்துச் செல்லும் போர்டபிள் டாய்லெட்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பிரத்யேக போர்டபிள் டாய்லெட் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும், எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அதை கையோடு எடுத்துச் செல்வார் எனவும், அதை யாராவது தொட்டாலே சுட்டுக் கொலை செய்துவிடுவார் எனவும் அந்நாட்டின் முன்னாள் கமாண்டோ படை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜாங் உன், நவீன காலத்து சர்வாதிகாரியாக வர்ணிக்கப்படுகிறார்.   சின்ன விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் கடுமையான தண்டனைகள் உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மிகவும் வித்தியாசமான நபரான கிம் ஜாங் உன்னின் செயல்களும் கவனம் ஈர்ப்பதாகவே உள்ளன. இதன் காரணமாகவே இவரைப் பற்றிய செய்திகளை மக்கள் தேடிப்படிக்கிறார்கள். சமீபத்தில் வடகொரிய அதிபராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததுடன், தனது தந்தையின் 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 11 நாட்களுக்கு யாருமே நாட்டில் ...
14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் அசால்ட்டாக பிடித்த நபர்!

14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் அசால்ட்டாக பிடித்த நபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    உலகின் மிக நீளமான கொடிய விஷம் கொண்ட நச்சுப் பாம்பு இனமாக திகழ்வது ராஜநாகம். அதனால் தான் அதனை நாகங்களுக்கு அரசன் என பொருள்படும் வகையில் பெயரிட்டுள்ளனர். பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் தன்மை கொண்ட இப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் வரை வளரக் கூடியதாகும். இவை பிற பாம்புகளை உணவாக கொள்கின்றன. மிக மிக கொடிய விஷமுடைய இந்த நாகத்தின் ஒரு கடியே ஒரு மனிதனை கொல்லவல்லதாகும். இந்த நாகத்தின் கடியால் இறப்பு நேரிடும் விகிதம் 75% ஆக உள்ளது. இப்பாம்பினைக் கண்டாலே பலரும் மிரண்டு ஓடவே செய்வார்கள். இந்த பாம்பு கடித்தால் ஒரு யானையே 3 மணி நேரத்தில் இறந்துவிடுமாம். இத்தனை கொடிய விஷப்பாம்பை தனி ஒருவரால் கையாளுவது பெரும் சிரமம் என கூறப்படுகிறது. அப்படியிருக்க, 14 அடி நீளமுடைய ராஜநாகத்தை வெறும் கைகளால் துனிச்சலாக ஒருவர் பிடித்திருப்பதை கேட்கவே புல்லரிக்கிறதல்...
சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!!

சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில், தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.   இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் க...
மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கணவனை சுத்தியால் அடித்து கொன்ற மனைவி விடுவிப்பு!

மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கணவனை சுத்தியால் அடித்து கொன்ற மனைவி விடுவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை , தாயே சுத்தியலில் அடித்துக்கொன்றதாக கைதான நிலையில், தற்காப்புக்காக கொலை நடந்ததாகக்கூறி காவல்துறையினர் பெண்ணை விடுவித்துள்ளனர். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 43 வயது நபர் , மது போதையில் தனது 20 வயது மகளிடம் புதன்கிழமை இரவு பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி கண்டித்துள்ளார். அதனையும் மீறி அத்துமீற முயன்றுள்ளார். மகளை காப்பாற்ற ஒரு கட்டத்தில் கணவனை சுத்தியலால் தாக்கினார். இதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   இதனையடுத்து சம்பவம் குறித்து அந்தப்பெண் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத...
வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை … போட்டு வைத்திருந்த மெகா  திட்டம்… மனம் திறந்த கூட்டாளி சிவா part 1

வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை … போட்டு வைத்திருந்த மெகா திட்டம்… மனம் திறந்த கூட்டாளி சிவா part 1

HOME SLIDER, kodanki voice, NEWS, செய்திகள், வீடியோ
    வீரப்பன் தேடிய தமிழ் தேசிய படை I போட்டு வைத்திருந்த மெகா  திட்டம் I மனம் திறந்த கூட்டாளி சிவா part 1 https://youtu.be/cByWBMItdVQ    
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!

ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்! தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம் உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர். ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்...
சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்!

சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி – ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்! ஆஸ்திரேலியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,465,811 உயர்ந்துள்ளது. கொரோனா தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் மொத்தம் 3,465 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது பல நாடுகளில் காணப்படும் இறப்பு விகிதத்தை விட மிகக் குறைவு.  இந்நிலையில் 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் சிறார்களுக்க பூஸ்டராகப் பயன்படுத்தப்படும்  ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்க மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ...