ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை  கலாய்த்த பிரபல நடிகை!

“இப்ப இல்லை, எப்பவுமே இல்லை” ரஜினிகாந்த்தை கலாய்த்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை பிரபல நடிகை கஸ்தூரி கலாய்த்து ட்வீட் செய்துள்ளார். டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி தொடங்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் முடிவு குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை!" என பதிவிட்டுள்ளார்   https://twitter.com/KasthuriShankar/status/13438190604971950...
ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரியில் திறப்புவிழா செய்ய தமிழக அரசு முடிவு!

ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரியில் திறப்புவிழா செய்ய தமிழக அரசு முடிவு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ரூ.57.8 கோடி மதிப்பில் ஜெயலலிதா நினைவிடம் ஜனவரியில் திறப்புவிழா செய்ய தமிழக அரசு முடிவு! சென்னை மெரினாவில், ரூ.57.8 கோடி மதிப்பில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் ரூ.57.8 கோடி மதிப்பில், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள் உள்ளிட்டவை அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகமும் கட்டப்பட்டுள...
திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுர அலங்காரத்தை சிலுவை என பதிவு செய்தவர் மீது வழக்கு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுர அலங்காரத்தை சிலுவை என பதிவு செய்தவர் மீது வழக்கு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுர அலங்காரத்தை சிலுவை என பதிவு செய்தவர் மீது வழக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுர அலங்கார விளக்குகளை சிலுவை வடிவில் இருப்பதாக கூறி முகநூலில் பதிவிட்ட நிறுவனத்தின் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி கோயில் கோபுரத்தை சுற்றி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆனால், பூரணகும்ப கலசம் என கூறி சிலுவை அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக தால பத்ரா நிதி நிறுவனம், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தது. இது இணையத்தில் பெரும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது இதையடுத்து, பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையிலும் பதிவிட்டு பக்தர்களிடையே புரளியை கிளப்பியதாக தேவஸ்தான அதிகாரிகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பூரண கும்ப கலச அலங்காரத்தை சிலுவை என பதிவு செய்த தாலா பத்ரா நிதி முக நூல் பதிவாளர் மீது ...
மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை

மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று பேச்சுவார்த்தை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் மத்திய அரசு 3 புதிய சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு போன்றவற்றை ஒழித்துவிடும் எனவும், விவசாய துறையை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்துவிடும் எனவும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் எல்லைப்பகுதிகளை ஆக்கிரமித்து அவர்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 34-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. போக்குவரத்து முடக்கத்தால் டெல்லிவாசிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக அவதிப்பட்டு வருகின்றனர...
மேக்கப் இல்லாமல் பனியன், குட்டை பாவாடை அணிந்த ஐஸ்வர்யா மேனன்

மேக்கப் இல்லாமல் பனியன், குட்டை பாவாடை அணிந்த ஐஸ்வர்யா மேனன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகர் சிவா உடன் தமிழ் படம் 2 இந்தப் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தமிழ் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு படங்களில் சின்ன ரோலில் நடித்துள்ளார். அதன்பின் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து நான் சிரித்தால் படத்தில் நடித்தார். இந்தப்படத்திலும் தமிழ் படம் 2லும் உள்ள பாடல்களுக்கு செமையாக குத்தாட்டம் போட்டார். அதன்பின் அவ்வளவாக படவாய்ப்புகள் வரவில்லை. ஆனாலும் போட்டோ ஷூட் புகழ் ஷிவானியை விட அதிகமான போட்டோவை இவர் சமூக வலைத்தளங்கள் பதிவேற்றியுள்ளார். அதிலும் முன்னழகு எடுப்பாகவும் பின்னழகு தூக்கலாகவும் தெரியுமாறு போட்டோவிற்கு போஸ் தருவதில் வல்லவர். தாராளபிரபு என்றே சொல்லலாம். அதேபோல தற்போது வெளியீட்டில் ஒரு புகைப்படத்திலும் போட்டில் செல்வதுபோல ஒரு புகைப்படத்தை போட்டு உள்ளார். அதில் மேக்கப் இல்லாமல் பனியன் மற்று...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறினால் நடவடிக்கை – கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறினால் நடவடிக்கை – கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் கீழ் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி ரூ.7 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம், 8 வடிவிலான நடைபயிற்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறுவர் பூங்காவை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமையிட கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணை கமிஷனர் மல்லிகா, ஆயுதப்படை துணை கமிஷனர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் பொது இடங்களிலும், மதுபான விடுதி, சொகுசு விடுதிகளிலும் தடை...
கள்ள சாவி போட்டு சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கத்தை திருடியது யார்? சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை

கள்ள சாவி போட்டு சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கத்தை திருடியது யார்? சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கள்ள சாவி போட்டு சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கத்தை திருடியது யார்? சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை 2012ம் ஆண்டு சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சிபிஐக்கு தகவல் வந்ததை அடுத்து, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, 400 கிலோ தங்கம் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கரில் சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும் 400.47 கிலோ பறிமுதல் செய்ததாக தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந...
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது – கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், இன்று உடல்நிலையை கருத்தில் கொண்டு, தான் அரசியலுக்கு வரமுடியவில்லை என பகிரங்கமாக அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‘ ரஜினியின் முடிவு சற்று ஏமாற்றம் இருந்தாலும்; அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். சென்னை வந்தவுடன் அவரை சந்திப்பேன். அவரது ரசிகர்கள் மனநிலைதான் எனக்கும். அவரது ஆரோக்யம் எனக்கே முக்கியம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் அவர் ஆரோக்யத்துடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்....
பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கமல்

பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை – கமல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
பொள்ளாச்சி சம்பவம் நடந்து 600 நாட்கள் கடந்தும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். மநீம தலைவர் கமல்ஹாசன் வேளாங்கண்ணியில் இன்று 3ம் நாள் பிரசாரத்தை துவக்கினார். காலை 9.30 மணிக்கு தனியார் ஓட்டலில் பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் பழிவாங்கும் அரசியல்வாதி அல்ல. பழிபோடும் அரசியல்வாதி அல்ல. வழிகாட்டும் அரசியல்வாதி. மக்கள் நீதி மய்யம் மக்கள் மையமாக இருக்கும். இங்கு வந்துள்ள மகளிருக்கு பாதுகாப்பாக இருப்போம். பிற அரசியல்வாதிகள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருகிறார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வர சொல்லவில்லை. இது தானாக வந்துள்ளது. இது கூட்டம் அல்ல, குடும்பம். ஓட்டு சேர்க்க உங்களிடம் நான் வரவில்லை. சேகரித்து கொடுங்கள் என கேட்டு வந்துள்ளேன். மகளிரிடம் ஏன் பேசுகிறேன் என்றால் ஆண்கள் செல்ல முடியாத இடத்திற்கெல்லா...
அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கு ‘ஏர் பேக்’ கட்டாயம் – மத்திய அரசு

அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கு ‘ஏர் பேக்’ கட்டாயம் – மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கு ‘ஏர் பேக்’ கட்டாயமாக்க மத்திய போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. கார் ஓட்டுநருக்கு கட்டாயம் ‘ஏர் பேக்’ இருக்க வேண்டும் என்ற விதிமுறை 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓட்டுநருக்கு மட்டும் ஏர் பேக் வசதி இருப்பதால் முன் இருக்கையில் பயணிப்போரின் உயிருக்கு பாதுகாப்பு குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் விபத்தின் போது மிக மோசமாக காயமடையவும் வாய்ப்பு உள்ளது. பல சந்தர்ப்பங்களில் முன் இருக்கை பயணிகள் உயிரிழப்பதும் நிகழ்ந்துள்ளதாக புகார்கள் வெளிவந்தன. இதனிடையே முன் இருக்கையில் இருப்பவர்களும் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கும் ‘ஏர் பேக்’கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அனைத்து கார்களிலும் முன் இர...