ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்!

ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  ரஜினி அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் - ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை: ரத்த அழுத்த மாறுபாடு நேற்று இருந்ததைவிட இன்று கட்டுக்குள் உள்ளது. ரஜினியின் அவர்களின் உடல்நிலையை பரிசோதித்ததில் எந்த ஆபத்தான முடிவு வரவில்லை.
‘தினமலர்’ கோபால்ஜி தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக தேர்வு

‘தினமலர்’ கோபால்ஜி தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக தேர்வு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ‘தினமலர்’ கோபால்ஜி தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மாநில விசுவ இந்து பரிஷத் தலைவராக இருந்த ராமகோபாலன் மறைவைத்தொடர்ந்து, தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், நசென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில்  விசுவ இந்து பரிஷத் பொதுக்குழுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, அகில உலக முன்னாள் செயல்தலைவர் வேதாந்தம் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அதன்படி, தற்போதைய மாநிலத்தலைவர் ரத்தினசாமி போஷகராகவும், புதிய மாநில தலைவராக தினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளராக சோமசுந்தரம், துணைத் தலைவர்களாக கிரிஜா சேஷாத்திரி, ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி, எம்.ஜெ.துளசிராம், கவுசிக் என் சர்மாவும், செயல் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்...
இந்திய மதிப்பில் ரூ.161 கோடிக்கு விற்பனை ஆன மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு!

இந்திய மதிப்பில் ரூ.161 கோடிக்கு விற்பனை ஆன மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள், நடிகர்கள்
மைக்கேல் ஜாக்சன் இறந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாப் இசை உலகின் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு அமெரிக்காவில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அதில் கலிபோர்னியாவில் உள்ள நெவர்லேண்ட் பண்ணை வீடும் ஒன்று. சுமார் 2 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்புடைய இந்தப் பண்ணை வீட்டை கடந்த 1987-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் இந்தப் பண்ணை வீட்டில் வைத்து 13 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். மேலும் தன் மீ...
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? பதிலளிக்க மறுத்த மத்திய அமைச்சர்

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? பதிலளிக்க மறுத்த மத்திய அமைச்சர்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புதிய இந்தியா செய்திகள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு என்ற புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற செய்தியாளர்களின் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார். திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே என்று கேள்வி எழுப்பினர். அது  தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று பிரகாஷ் ஜவடேகர் பதிலளித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது: தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறேன். மற்ற கட்சிகள் எல்லாம் குடும்ப நலம் சார்ந்த கட்சிகள். பாஜக மட்...
வைகுண்ட ஏகாதசி தங்க தேரில் பவனி வந்த மலையப்ப ஸ்வாமி

வைகுண்ட ஏகாதசி தங்க தேரில் பவனி வந்த மலையப்ப ஸ்வாமி

HOME SLIDER, NEWS, செய்திகள்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. சொர்க்க வாசல் வழியாக மூலவரை உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட போது, முக்கிய பிரமுகர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பின், உற்சவ மூர்த்தியான மலையப்ப ஸ்வாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி யுடன், தங்க ரதத்தில் உலா வந்தார். பெண்கள் மட்டுமே இந்த ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு, கோயிலில் பணிபுரியும் 200 பெண் ஊழியர்களை கொண்டு தங்க ரதம் இழுத்து செல்லப்பட்டது. குழுமி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழங்க, 4 டன் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த நான்கு மாட வீதிகள் வழியாக மலையப்ப ஸ்வாமி உலாவந்தார்....
திமுக-வுக்கு செல்லுமிடமெங்கும் பெருகிவரும் ஆதரவைப் பார்த்து பதற்றத்தில் அதிமுக தடைபோடுகிறது -ஸ்டாலின்

திமுக-வுக்கு செல்லுமிடமெங்கும் பெருகிவரும் ஆதரவைப் பார்த்து பதற்றத்தில் அதிமுக தடைபோடுகிறது -ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக-வுக்கு செல்லுமிடமெங்கும் பெருகிவரும் ஆதரவைப் பார்த்து, பதற்றத்தில் தடைபோடுகிறது @CMOTamilNadu அரசு! அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சுவோரல்ல நாங்கள்! திமுக-வின் #WeRejectADMK மக்கள் கிராமசபை கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி!   அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி திமுக நிர்வாகிகள், தாங்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வருகிறார்கள். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில் ஸ்டாலினும் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்தக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கும் நோக்கில் தமிழக அரசு நடவடிக்கை ...
அதிமுக தரப்பிடமிருந்து தேமுதிகவுக்கு எந்தவித அழைப்பு வரவில்லை பிரேமலதா கோபம்!

அதிமுக தரப்பிடமிருந்து தேமுதிகவுக்கு எந்தவித அழைப்பு வரவில்லை பிரேமலதா கோபம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  அதிமுக தரப்பிடமிருந்து தேமுதிகவுக்கு எந்தவித அழைப்பு வரவில்லை பிரேமலதா கோபம்! சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் முதல் பொதுக்கூடம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் வரவுள்ளதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை முழு வீச்சில் ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக ஆளுங்கட்சியான அதிமுகவும் தனது தொடக்கப் பொதுக்கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது. முன்னதாக பொதுக்கூட்டம் தொடர்பாக அதிமுக, ‘வருகின்ற 27.12.2020 அன்று காலை ...
நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் தேர்வு!

நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் தேர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நாட்டின் இளம் மேயர் ஆக ஆர்யா ராஜேந்திரன் என்ற 21 வயது பெண் பதவி ஏற்றுள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் பெரும்பான்மையான இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினர் வென்று இருந்தனர். தற்போதுபஞ்சாயத்து போர்டு, வார்டு கவுன்சிலர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்று வருகின்றனர். இந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் மேயர் ஆகப் பதவி ஏற்றுள்ளார். இவர் பி.எஸ்சி கணிதம் முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே எஸ்.எஃப்.ஐ உறுப்பினராகவும் தலைவராகவும் எனப் பல பதவிகள் வகித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே இவர் தேர்தலை வென்றுள்ளார்....
திருப்பதி கோயிலில் இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை  திறந்தே வைக்கப்பட உள்ள சொர்க்கவாசல்

திருப்பதி கோயிலில் இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை திறந்தே வைக்கப்பட உள்ள சொர்க்கவாசல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்கவாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது. வைக்குண்ட ஏகதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஆனால், வரலாற்றிலேயே இதுவரையில் இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்க வாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது. உள்ளூர் பொதுமக்களுக்கு தரிசனம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன் என்ற கணக்கில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் இந்த 10 நாட்கள் விசேஷ வழிபாடு இலவசமாகவே வழங்கப்பட உள்ளது. இதற்காக உள்ளூர் மக்கள் திருப்பதி கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். டோக்கன் விநியோகத்துக்காக ஐந்து சிறப்பு கவுன்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் சொர்க்கவாசல் திறந்தே வைத்திருக்கப்படும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட...
புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ – பா. இரஞ்சித்

புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ – பா. இரஞ்சித்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ வானம்” போன்ற பண்பாட்டு மீட்பு இசை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் மாபெரும் இசைத்திருவிழா நிகழ்ச்சி சென்னையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மதிப்புறு முனைவர் மதிச்சியம் பாலா, சுகந்தி, வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடினர். சேலம் ஆதிமேலம் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும், வேலு ஆசான் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து இயக்குனர் பா. இரஞ்சித் ...