சிறைத்துறையின் கணக்குப்படி சுதாகரன் முதலிலும், அடுத்து இளவரசியும் இறுதியில் தான் சசிகலா விடுதலை செய்யப்படுவாராம்!
சிறைத்துறையின் கணக்குப்படி சுதாகரன் முதலிலும், அடுத்து இளவரசியும் இறுதியில் தான் சசிகலா விடுதலை செய்யப்படுவாராம்!
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, கர்நாடகா சிறைத்துறையின் மீது கடும் அதிருப்தியில் இருப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் நான்கு ஆண்டு சிறை தண்டைனைக்காக அடைக்கப்பட்டனர்.
அவர்களது தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27-ஆம் திகதியோடு முடிவடைய உள்ளதாகக் கர்நாடக சிறைத்துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது.
இந்நிலையில், சசிகலா உள்ளிட்ட மூவரின் விடுதலைக்கான பூர்வாங்க வேலைகளை ஏற்கனவே சிறைத்துறை தொடங்கிவி...









