சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

சவுரவ் கங்குலியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா பானர்ஜி

சவுரவ் கங்குலியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா பானர்ஜி

HOME SLIDER, NEWS, politics, sports, செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க (பிசிசிஐ) தலைவராக செயல்பட்டு வருகிறார். மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார். கொல்கத்தாவில் அவரது வீட்டில் இருந்த சவுரவ் கங்குலிக்கு இன்று மதியம் 2 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லேன்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்படுள்ளதாகவும், அதற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சவுரவ் கங்குலி பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்றார். அங்கு அவர் சவுரவ் கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். ...
ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!

ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஸ்டாலின் கூட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சர் திட்டம் அம்பலம்?!   https://youtu.be/iH2GXev1bE4
மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக நியமனம்!

மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அன்பரசு உள்ளிட்டோரின் மகன்களுக்கும் கட்சியில் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில் கே.எஸ்.அழகிரி, ராமசாமி, சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, செல்லகுமார், மாணிக்கம் தாகூர், ஜெயக்குமார் எம்.பி., விஷ்ணுபிரசாத், மாயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, ஜே.எம்.ஹாரூண் ரசீத், பீட்டர்...
இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த – பாஜகவை காட்டமாக விமர்சித்த சுப்பிரமணியசாமி

இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த – பாஜகவை காட்டமாக விமர்சித்த சுப்பிரமணியசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்தியஅரசு  அஸ்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாஜக மூத்த தலைவர்  சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியர்கள் கினியா பன்றிகளா அவர்களிடம் சோதனை நடத்த என காட்டமாக விமர்சித்து உள்ளார். அவசரகால பயன்பாட்டிற்காக கூட அஸ்ட்ராஜெனெகாவை உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்காத நிலையில்,  இந்தியர்கள் கினியாப் பன்றிகளாக இருக்கப் போகிறார்களா? என கேள்வி எடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் 6 தடுப்பூசிகள் பல்வேறு கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவற்றில், உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்–டி தடுப்பூசி, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைய...
திமுக நடத்திய கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கையாளா ? ஸ்டாலின் எச்சரிக்கை

திமுக நடத்திய கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண் அமைச்சரின் கையாளா ? ஸ்டாலின் எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  கோவை, தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியதும், அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார்.பதில் சொல்ல முடியாதுஅப்போது எழுந்த பெண் ஒருவர், திமுக கட்சியை மாட்டி கொண்டு, எதற்காக கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது. திமுக., வினர், ஸ்டாலின் முன்னிலையிலேயே அந்த பெண்ணை தாக்க முயன்றனர். அவர்களை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்டாலின், உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பி ஆள் என தெரிவித்தார். தொடர்ந்து அந்த பெண், ''திமுக எதையும் செய்யவில்லை. கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன்'' என கோஷம் போட்டு கொண்டு வெளியேறினார். வெளியி...
எந்த குழப்பமும் வேண்டாம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு

எந்த குழப்பமும் வேண்டாம் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் – பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. தேர்தல் அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் தமிழக தேர்தல் களம பரபரப்பான இயங்கி வருகிறது. இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அதிமுக தலைமைக்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், பாஜக தலைமையோ, ரஜினி அரசியலுக்கு வந்து தங்களுக்கு ஆதரவு தருவார் என கனவுகண்டு வந்தனர். அந்த மிதப்பில், அதிமுகவை மட்டம் தட்டும் வகையில் விமர்சித்து வந்தனர். கடந்த வாரம்கூட பாஜக மாநில பொறுப்பாளர் சிடி ரவி, அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து, தேர்தல் முடிவு வந்தபிறகு தீர்மானிக்கப்படும் என கூறினார். இது அதிமுக தலைவர்களிடையே கடும்...
2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்!

2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 60 ஆயிரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
2021 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் புதிதாக 3,71,504 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் இதில் இந்தியாவில் தான் அதிகபட்சமாக 60,000 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் முதல் இடம் பிடிக்கும் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஜனவரி ஒன்றாம் தேதி சுமார் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 35,615 குழந்தைகள், நைஜீரியா (21,439), பாகிஸ்தான் (14,161), இந்தோனேசியா (12,336), எத்தியோப்பியா (12,006), அமெரிக்கா (10,312). இதனை தொடர்ந்து எகிப்து (9,455), பங்களாதேஷ் (...
மதிமுகவைப் போலவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் – திருமாவளவன் அறிவிப்பு

மதிமுகவைப் போலவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் – திருமாவளவன் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டப்பேரவை தேர்தலில் மதிமுகவைப் போலவே நாங்களும் திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிப்பு. ஏப்ரல் அல்லது மே மாத இறுதியில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன. குறிப்பாக, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் அதிமுகவும், 10 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் இல்லாத வெறியை தீர்த்துக் கொள்ள திமுகவும் முயன்று வருகின்றன. ஜெயலலிதா இல்லாத நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக இந்தத் தேர்தலை சந்திக்கிறது. அதேபோல, கருணாநிதி இல்லாத திமுகவை, வடநாட்டு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் துணையுடன் ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார்.   அதன்படி, திமுக குறைந்தபட்சம் 180 முதல் 190 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்,...
இளம் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் களம் இறக்க தி.மு.க முடிவு!

இளம் நிர்வாகிகளை அதிக அளவில் தேர்தலில் களம் இறக்க தி.மு.க முடிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக ஐபேக் நிறுவனத்தினர் குக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள கள நிலவரங்களை அறிந்து கட்சி மேலிடத்துக்கு தகவல் அளிக்கிறார்கள். அதன் அடிப்படையில் கட்சியினர், முன்னணி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதி அளிப்பதோடு அதை தேர்தல் அறிக்கையிலும் சேர்க்க முடிவு செய்துள்ளார்கள். கடந்த வாரம் தென்காசி மாவட்டத்தில் உள்ள பண்பொழி என்ற கிராமத்திற்கு சென்ற கனிமொழி எம்.பி. அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளை சந்தித்து உரையாடி இருக்கிறார். கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறார். அங்கேயே தங்கி இருந்து கட்சி பணிகளையும் செய்து இருக்கிறார். இதை அங்குள்ளவர்கள் நினைவு கூர்ந்து இருக்கிறார்கள். ...
தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தன்னை சந்தித்த போது விஜய் சொன்ன விஷயம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.ஆனால், மாஸ்டர் போன்ற பெரிய திரைப்படத்தை OTTயில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதாலும் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது இருப்பினும் கொரோனா பிரச்சினை காரணமாக திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. பல கோடிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ்டர் திரைப்படம் வெறும் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையிடப்பட்டால் வசூலில் நிச்சயம் துண்டு விழும் என்று பலரும் கருதுகின்றனர் இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்ச...