சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

தோனி குறித்து அஸ்வின் புகழாரம்!

தோனி குறித்து அஸ்வின் புகழாரம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை  எம் எஸ் தோனி வழிநடத்தி செல்வது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளதாவது : ஐ.பி.எல்.லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி இருந்தார். கடந்த சீசன் உள்பட  சென்னை சூப்பர் கிங்ஸ் 4 பட்டங்களை கைப்பற்ற தோனி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல சந்தர்ப்பங்களில் முக்கியமான பினிஷிங் ஷாட்கள் விளையாடியதன் மூலம் கடந்த காலங்களில் தோனி அணியின் மன உறுதியை உயர்த்த உதவியுள்ளார். அவரது கேப்டன் திறமை குறித்து பேசுபவர்கள் இது குறித்து  சரியாக பேசுவதில்லை. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸை மிகவும் நிலையான அணியாக மாற்றினார். தோனியின் அமைதியான மற்றும் கூட்டு அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. இவ்வாறு அவர் ...
முதல்கட்ட தேர்தல் உ.பி.யில் 60.17 % வாக்குகள் பதிவு..!

முதல்கட்ட தேர்தல் உ.பி.யில் 60.17 % வாக்குகள் பதிவு..!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
    உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் மத்திய படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது.  மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. இன்று நடந்த  உத்தர பிரதேச  சட்டசபை  தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில்  60.17  சதவீதம் வாக்குகள்  பதிவாகி உள்ளன....
இந்தியா மதசார்பற்ற நாடா… அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?- ஐகோர்ட் சரமாரியாக கேள்வி !

இந்தியா மதசார்பற்ற நாடா… அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா?- ஐகோர்ட் சரமாரியாக கேள்வி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த பொது நல மனுவில் அவர் கூறியிருந்ததாவது:- கடந்த 1947-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழக ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை. கடந்த 1970-ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோரும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஐகோர்ட்டு 1972-ல் ரத்து செய்தது. ஆனால், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். எந்த சட்டப்பூர்வமான உரிமையும் இல்லாத நிலையில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்ற விளம்பர பலகைகளை, நுழைவாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அவர்களது பாரம்பரிய ஆடைகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்...
ரஹானே, புஜாராவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு!

ரஹானே, புஜாராவுக்கு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடமில்லை – பி.சி.சி.ஐ. முடிவு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி வரும் 25ம் தேதி முதல் மார்ச் 1ந் தேதி வரை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, விருத்திமான் சாஹா, அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படாது என இந்திய கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரில் தேர்வாளர்கள் சில புதிய வீரர்களை களமிறக்க விரும்புகிறார்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகத்தின் மற்ற மூத்த உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. உயர் அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். அணியில் இடம் இல்லை என்பது தேர்வாளர்களால் தனித்தனியாக நான்கு பேரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஞ்சி போட...
அண்டை நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் – ஐ.நா.வில் இந்தியா புகார்!

அண்டை நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் – ஐ.நா.வில் இந்தியா புகார்!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையால் அதன் சுற்றுப்புறத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2008 ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் 2016 ல் பதான்கோட்டில் பயங்கரவாதச் செயல்கள் உட்பட எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தாக்குதலினால் ஏற்படும் மனித இழப்பை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதில் முழு உறுதியுடன் இந்தியா உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அண்டை நாட்டில் இருந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம். ஆப்கான...
6 ஆண்டுகளாக கழுத்தில் டயருடன் முதலை!

6 ஆண்டுகளாக கழுத்தில் டயருடன் முதலை!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என மக்கள் அச்சப்பட்டனர். இதனால் முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும், முதலை மீதுள்ள அச்சம் காரணமாக யாரும் பெரிதாக அதில் ஆர்வம் காட்டவில்லை. முயற்சித்த ஒரு சிலருக்கும் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த டிலி (வயது 35) என்ற விலங்குகள் நல ஆர்வலர் பிரத்யேக பொறி ஒன்றினை அமைத்து அதில் கோழியாக இரையாக வைத்...
மாட்டை பூட்டி செக்கிழுக்கும் காஷ்மீர் முதியவர்!

மாட்டை பூட்டி செக்கிழுக்கும் காஷ்மீர் முதியவர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
எண்ணெய் வித்துகளில் இருந்து சமையல் எண்ணெய் எடுப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மரச்செக்கு பயன்படுத்தப்பட்டது. இதை இழுப்பதற்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்த நவீன யுகத்தில் இந்த மரச்செக்கு பயன்பாடு வழக்கொழிந்து விட்டது. பெரும்பாலும் காட்சிப்பொருளாகவே மாறிவிட்ட மரச்செக்கு, ஆங்காங்கே ஓரிரு பகுதிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இதில் முக்கியமாக, காஷ்மீரை சேர்ந்த முகமது வானி (வயது 77) என்ற முதியவர் இன்றும் மரச்செக்கு மூலம் எண்ணெயை பிரித்தெடுத்து வருவது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த தள்ளாத வயதிலும் அதிகாலை முதல் அந்தி மாலை வரை செக்கில் மாட்டை ஓட்டி எண்ணெய் எடுத்து வரும் அவருக்கு என பல வாடிக்கையாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். காஷ்மீரில் கடந்த 1970-களில் மூலை முடுக்கெல்லாம் மரச்செக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால் தற்...
பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் தேசப்பற்று: ஜோதிமணி எம்.பி.!

பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் தேசப்பற்று: ஜோதிமணி எம்.பி.!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ‘ஹிஜாப்’ அணிந்து வந்த மாணவிக்கு எதிராக காவித்துண்டு அணிந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவர்கள் அல்லாத பலபேர் மாணவியை விரட்டும் காட்சியை நாம் பார்த்தோம். இந்த காட்சி, இந்தியா முழுவதும் தீப்பிடித்ததுபோல பரவியுள்ளது. இது தமிழகத்துக்கு வந்துவிட ரொம்ப நாள் ஆகிவிடாது. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் வடமாநிலங்களில்தான் இப்படி நடக்கும் என்று பலபேர் என்னிடம் தெரிவித்து உள்ளனர். தென் மாநிலத்துக்கு தற்போது வந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி அல்லாத மாநிலங்களில் இப்படி நடக்கவில்லை. ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பதை அந்த பெண்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த சம்பவத்துக்கு ஆளான பெண் போல, எல்லா பெண்களும் பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் துணிவோடு எதிர்த்து நிற்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் எதி...
உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

உத்தர பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். பா.ஜனதா, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் 53 தொகுதிகள் பா.ஜனதா வசம் உள்ளவை. தலா 2 தொகுதிகள், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வசம் உள்ளவை. ஒரு தொகுதி, ராஷ்டிரீய லோக்தளம் வெற்றி பெற்ற இடமாகும். முசாபர்நகர், மீரட், பாக்பத், காசியாபாத், ஷாம்லி, ஹாபூர், கௌதம் புத்தநகர், புலந்த்ஷாஹர், அலிகார், ஆக்ரா மற்றும் மதுரா உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம்  2 கோடிய...
பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவு!

பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித்துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித்துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் கர்நாடகா மாநில கல்லூரிகளில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து கர்நாடகத்தில் 3 தினங்களுக்கு  அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே, ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் அணிவதை எதிர்த்த...