நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? தெரியாது.. ஒரு அதிமுக அமைச்சர் கூட தேர்தலில் ஜெயிக்கக்கூடாது- ஸ்டாலின்
நீங்க என்ன பண்ணுவீங்களோ? ஏது பண்ணுவீங்களோ? தெரியாது.. ஒரு அதிமுக அமைச்சர் கூட தேர்தலில் ஜெயிக்கக்கூடாது.. ஸ்டாலின்
மும்முனை தாக்குதல்களில் நாம் மாட்டிக் கொண்டாலும் நாம் 6வது முறையாக வெற்றிபெற வேண்டும். அர்ஜூனன் வைத்தகுறி தப்பாது என்பது போல திமுக வைத்த குறி தப்பாது என நிரூபிக்க வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை, சண்டை சச்சரவுகளை தூக்கியெறிய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாம் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக, சிலரை கட்டாயப்படுத்தி கட்சி துவங்க வைக்கப்படுகிறது. திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க பல முனைகளில் சதி நடக்கிறது. வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். ஆனால், அந்த வெற்றியை எளிதில் பெற விட மாட்டார்கள்.அர்ச்சுனன் குறி போல், திமுக குறி தப்பாது என்பதை நிரூப...









