டிடிவி தினகரன் மகள் திருமண நிச்சயதார்த்தம்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மகளுக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நேற்று முன்தினம் இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு டிடிவி.தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதன் துளசி அய்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
முன்னதாக மாப்பிள்ளை வீட்டார் சீர் வரிசை தட்டு எடுத்து வந்தனர். டிடிவி.தினகரனின் மனைவி அனுராதா மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்றார். கிருஷ்ணசாமி வாண்டையார், தங்கள் குடும்பத்தினரை டிடிவி.தினகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
நிச்சயதார்த்த விழா என்றால் பெண்ணையும், மாப்பிள்ளை யையும் ஒரே மேடையில் உட்கார வைத்து உறவினர்கள் அவர்களுக்கு பொட்டு வைத்து வாழ்த்துவது தற்போதை...








