28 கோடி நெடுஞ்சாலைத்துறை பேக்கேஜ் டெண்டர் முறைகேடு தென்காசியில் 5 பேர் சஸ்பெண்ட்
28 கோடி பேக்கேஜ் டெண்டர் முறைகேடு தென்காசியில் 5 பேர் சஸ்பெண்ட்
தமிழகத்தில் பொதுப்பணித் துறையில் கடந்த 50 ஆண்டுகளாக ஒவ்வொரு திட்டப்பணிக்கும் தனித்தனியாக டெண்டர் கோரும் நடைமுறை அமலில் இருந்து வந்தது. இதை மாற்றி, பொதுப்பணித் துறையில் பேக்கேஜ் டெண்டர் (பல பணிகளுக்கு ஒரே டெண்டர்) முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் 15.2.2019-ல் அரசாணை பிறப்பித்திருந்தார்.
இந்த பேப்கேஜ் முறை மாநிலஅளவில் பெரிய அளவிலான 10 ஒப்பந்ததாரர் களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இதன் டென்டர் காரணமாக ஒப்பந்தத் தொழிலில் உள்ள 5 ஆயிரம் ஒப்பந்ததாரர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், தென்காசி பகுதியில் 28 கோடி செலவில் கோட்டத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்துவது, அகலப்...









