சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் – டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் - டாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு! சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பு மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிஉரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது. நாட்டில் 156 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதித்து உலகிற்கு இந்தியா நம்பிக்கையின் பூச்செண்டை பரிசாக அளித்துள்ளது. இந்தியர்களாகிய நமக்கு நமது ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. 21-ம் நூற்றாண்டை இந்தியர்களின் மனோபாவம் மற்றும் திறமையால் மேம்படுத்தும் தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. இந்தியா உலகின் 3-வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது. கொரோனா தொற்று காலங்களில் 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி பல நாடுகள...
ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து!

ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்திய அயர்லாந்து! அயர்லாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 24 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால், ஒருநாள் தொடர் 1-1 என சமனிலையில் இருந்தன. இந்நிலையில், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அரை சதமடித்து 53 ரன்னில் வெளியேறினார். ஜேசன் ஹோல்டர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அயர்லாந்து சார்பில் ஆன்டி மெக்பிரின் 4 விக்கெட்டும், கிரேக் யங் 3 விக்கெட...
அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அருணாசல பிரதேசத்தில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! அருணாசல பிரதேசத்தின் பர்சாவில் இருந்து தென்மேற்கே இன்று காலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்....
சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

சென்னை, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம், விரைவில் அரசிதழில் வெளியிடப்பட உள்ளது.மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.     விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், மாநகராட்சி மேயருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒது...
களக்காட்டில் பொங்கல் திருவிழா: இளவட்டக்கல்-உரல் தூக்கி அசத்திய இளைஞர்கள்-பெண்கள்!

களக்காட்டில் பொங்கல் திருவிழா: இளவட்டக்கல்-உரல் தூக்கி அசத்திய இளைஞர்கள்-பெண்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
களக்காட்டில் பொங்கல் திருவிழா: இளவட்டக்கல்-உரல் தூக்கி அசத்திய இளைஞர்கள்-பெண்கள்! களக்காடு நாடார் புதுத்தெருவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. சாக்கு ஓட்டம், ஓட்டப்பந்தயம், கபடி, சைக்கிள் பந்தயம், பலூன் உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதனை தொடர்ந்து 125 கிலோ எடையுள்ள இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது. இளைஞர்கள் இளவட்டக்கல்லை தலையின் மீது தூக்கி சுற்றி சாதனை படைத்தனர். இதுபோல பெண்களுக்கு உரல் தூக்கும் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்கள் உரலை தூக்கி அசத்தினர். அதன் பின் வழுக்கு மரம் ஏறும் போட்டியும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது....
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு!

குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு! தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில்  இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான கருத்துருவை நிபுணர் குழு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, கொரோனா பெருந்தொற்று உள...
சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை! சிங்கப்பூரில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 692 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதை போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்று தொற்று நோயியல் நிபுணர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூரில் எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஒமைக்ரான் அலையின் தீவிரம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ...
பிக் பாஸ் வின்னர் ராஜுக்கு கிடைத்த தொகை 71  லட்சம்!?

பிக் பாஸ் வின்னர் ராஜுக்கு கிடைத்த தொகை 71 லட்சம்!?

HOME SLIDER, NEWS, TV news, செய்திகள்
    சின்னத்திரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. இன்று அந்த இறுதி எபிசோடு ஒளிபரப்பப்பட உள்ளது. பொதுவாகவே பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளருக்கு 50 லட்சம் என்ற பரிசு தொகை அறிவிக்கப்படும். அந்த வகையில் ராஜுவுக்கும் 50 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டுள்ளது. அது போக அந்நிகழ்ச்சியில் ராஜுவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்கள் இருந்ததால் ராஜுவிற்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். எனவே ராஜு மொத்தமாக 71 லட்சம் ரூபாய்யை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெற்றுள்ளாராம். தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களிடம் தீயாய் பரவி வருகிறது...
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
    தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு இடங்களில் லேசான மழைபெய்து வருகிறது. வடபழனி, கிண்டி,அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்...
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்!

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
  தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்! ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பு சாம்பியனான, நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (வயது 34), தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்றார். ஆனால் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோ...