சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

கார் பரிசு வாங்கிய காளை… 3வது ஆண்டாக காளைகளை அடக்கிய வாலிபருக்கு பைக்… களை கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு!

கார் பரிசு வாங்கிய காளை… 3வது ஆண்டாக காளைகளை அடக்கிய வாலிபருக்கு பைக்… களை கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கார் பரிசு வாங்கிய காளை... 3வது ஆண்டாக காளைகளை அடக்கிய வாலிபருக்கு பைக்... களை கட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு! பாலமேடு ஜல்லிக்கட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான விருதை பிரபாகரன் பெற்றுள்ளார். மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. 'சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டு, அதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்கும் முன்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். பாரம்பரிய வழக்கப்படி முதலாவதாக காளையாக பாலமேடு கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. காலை 8 மணிக்கு ...
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பு- பிரதமர் மோடி!

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பு- பிரதமர் மோடி!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பு- பிரதமர் மோடி! இந்தியாவில் வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், விண்வெளி, தொழில்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 150 ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடி வருகிறார். வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளுரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற மையப்பொருள்கள் அடிப்படையில் தொழில்முனைவோர் 6 பணிக்குழுக்களாக பிரிக்கப்பட்டு, பிரதமர் மோடியுடன் உரையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:- ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்தான் புதிய இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கப்போகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்தவுடன், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள...
உக்ரைன் அரசு இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

உக்ரைன் அரசு இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் அரசு இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்! உக்ரைன் நாட்டு அரசு இணையதளங்கள் திடீரென முடக்கப்பட்டன. வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளை சேர்ந்த இணையதளங்களில் ஹேக்கர்கள் ஊடுருவி முடக்கினர். அந்நாட்டு மக்களின் தனிநபர் விவரங்களை வெளியிடப்போவதாகவும், வரும் நாட்களில் மோசமான விளைவுகளை சந்திக்க தயாராக இருக்குமாறும் ஹேக்கர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உக்ரைன் அரசு முடக்கப்பட்ட அரசு இணைய தளங்களை மீட்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு உதவுவதாக தெரிவித்துள்ளன. அரசு இணையதளங்கள் மீதான சைபர் தாக்குதல் பின்னணியில் ரஷியா இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது. ரஷியாவுக்கு உக்ரைனுக்கும் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. சமீபத்தில் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம்...
ஊக்கத்தொகை வேண்டி பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டம்!

ஊக்கத்தொகை வேண்டி பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊக்கத்தொகை வேண்டி பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டம்! சிதம்பரத்தில், மாதாந்திர ஊக்கத்தொகை வேண்டி அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் கண்டிக்கும் வகையில் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 பயிற்சி மருத்துவர்கள் இன்று திடீர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதுபற்றி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது:- கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக இந்த கல்லூரி மாற்றப்பட்டு 8 மாதங்களாக எங்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மற்ற அரசு மருத்துவக் கல்லூரி...
சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!

சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள்
    சந்தாதாரர்களுக்கு இலவச திரைப்பட டிக்கட்டுகளை வழங்கவுள்ள theaterhoods.com அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.   தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், "இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்," என்றார்.   "உலகத்தரம...
துபாயிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த ஷாக் தகவல்!

துபாயிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட இருந்த 2 விமானங்கள் மோத இருந்த ஷாக் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  துபாய் விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, பின் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது. துபாயில் கடந்த ஜனவரி 9-ம் தேதி இரவு, 5 நிமிட இடைவெளியில் இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்களுக்கு ஒரே ஓடு பாதை ஒதுக்கப்பட்டிருந்தது. விமானங்கள் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக ஒரு விமானத்தின் பயணத்தை நிறுத்துமாறு அறிவித்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- அரபு எமிரேட்ஸ் நிறுவனத்தின் இ.கே-524 என்ற விமானம் இரவு 9.45 மணிக்கு ஐதராபாத்துக்கு புறப்பட தயாராக இருந்தது. அதே நிறுவனத்தின் மற்றொரு விமானமான இ.கே-568, 5 நிமிட இடைவெளியில் பெங்களுருக்கு புறப்பட இருந்தது. துபாய் - ஹைதராபாத் வ...
ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ஆன “போடா டேய்”  தமிழ் ட்வீட்!

ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ஆன “போடா டேய்” தமிழ் ட்வீட்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆனந்த் மஹிந்திராவின் வைரல் ஆன “போடா டேய்” தமிழ் ட்வீட்! இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்த் மஹேந்திரா. இவரது சொத்து மதிப்பு 190 டாலர் என்று மதிப்பிடடப்பட்டுள்ளது. ஆனந்த் மஹேந்திரா வெற்றிகரமான தொழிலதிபராக இருப்பது போலவே சமூக வலைதளத்திலும் பலரது பாராட்டுகளை பெற்று வருபவர். ட்விட்டரில் அவரது பதிவுகளுக்கு தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. சமூக சிந்தனை, தொழில் சார்ந்த அறிவிப்புகள் மட்டுமில்லாமல் சுவாரஸ்ய நிகழ்வுகள், நகைச்சுவை சம்பவங்கள் ஆகியவற்றையும் இவர் பதிவிட்டு வருகிறார். இதனிடையே பொங்கல் அன்று இவர் தமிழ் மொழி பற்றியும் தமிழ்நாட்டில் இவர் கல்வி பயின்றது குறித்தும் சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். ஆனந்த் மஹேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ் ஒரு ஆற்றல் மிகுந்த மொழி. உதாரணமாக, ஆங்கிலத்தில் ‘உங்களது விளக்கத்தை கேட்டு புரிந்துகொள்ள எனக்கு நேரம் இல்லை எ...
சீறிப்பாய காளைகள்… பரிசாக கார்,பைக்,தங்ககாசு ரெடி இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு

சீறிப்பாய காளைகள்… பரிசாக கார்,பைக்,தங்ககாசு ரெடி இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு

HOME SLIDER, NEWS, செய்திகள்
அவனியாபுரத்தை தொடர்ந்து இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் பாலமேட்டில், நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ்பெற்றது. அங்குள்ள மஞ்சமலை ஆற்றுத் திடலில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாலமேடு கிராம பொதுமக்கள் மற்றும் மகாலிங்கசாமி மடத்து கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் ஆயிரத்து 500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனமும் அளிக்கப்பட உள்ளது. சிறந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு நாட்டுப்பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட உள்ளது. மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிகட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு...
இணையத்தில் வைரல் ஆன சூர்யா-ஜோதிகா பொங்கல் கொண்டாட்ட படம்!

இணையத்தில் வைரல் ஆன சூர்யா-ஜோதிகா பொங்கல் கொண்டாட்ட படம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யா ஜோதிகாவின் பொங்கல் கொண்டாட்ட படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜெய் பீம் சர்ச்சைகளுக்கு பின் எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்திருக்கும் சூர்யா தனது வீட்டில் காதல் மனைவி ஜோதிகாவுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். அந்த படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.