சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், நடிகர்கள்
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி வரும் வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். இதற்கு சாய்னா நேவால், எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கிறேன் என பதிவு செய்திருந்தார். சாய்னா நேவாலின் இந்த கருத்திற்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெண்களை கொச்சை படுத்தும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் உங்கள் ட்வீட்டில் பதிவிட்ட, சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்க...
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்து கொள்ளுங்கள் – கீர்த்தி சுரேஷ்

HOME SLIDER, NEWS, நடிகைகள்
  நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- லேசான அறிகுறிகளுடன் எனக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகுந்த கவனமாக இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நான் இப்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வைரஸ் பரவலின் வேகம் அச்சுறுத்துகிறது. தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதுவரைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருந்தால், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இதை செய்தால் மட்டுமே உங்களையும், உங்கள் அன்புக்கு உரியவர்களையும் பாதுகாக்க முடியும். கொரோனா தொற்றிலிருந்த...
வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு

HOME SLIDER, NEWS, கட்டுரை
  நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், வருமான வரித்துறையும் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் வரி செலுத்துவோர் சிக்கலை சந்தித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டும், இ-பைலிங் தளத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 15,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு மது வழங்கப்படாது. ஒரே நேரத்தில் 5 நபர்கள் மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படும். மது வாங்க நிற்பவர்களில் 2 பேருக்கு இடையில் 6 அடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். கடைகளுக்கு முன் கூட்டமாக இருக்க கூடாது. கூட்டம் கூடினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ...
பத்திரிகையாளர்களின் எழுத்துகள் தான் எங்களை போன்ற இயக்குனர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கிறது – கிருத்திகா உதயநிதி

பத்திரிகையாளர்களின் எழுத்துகள் தான் எங்களை போன்ற இயக்குனர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கிறது – கிருத்திகா உதயநிதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா   தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கிருத்திகா உதயநிதி பேசும் போது, பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ரொம்ப பாசத்தோடு கூப்பிட்டதால் இந்த விழாவிற்கு வந்தேன். பத்திரிகையாளர்களின் எழுத்துகள் தான் எங்களை போன்ற இயக்குனர்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுக்கிறது. என்னுடைய அடுத்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்றார்.  ...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டது

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் மனிதருக்கு பொருத்தப்பட்டது

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  மருத்துவ உலகில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மிருகங்களின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்   பன்றியின் இதயம் மனிதர்களின் இதயத்துடன் ஒத்துபோவதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் அதனை மனிதர்களுக்கு பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காததை அடுத்து வேறு ஆய்வில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி பன்றியின் இதயத்தை மரபணு மாற்றம் மூலம் மனிதருக்கு ஏற்ப உருவாக்கி அதனை மாற்று அறுவை சிகிச்சை மேற் கொள்வதற்கான சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க டாக்டர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னாட் இதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்....
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மு.க. ஸ்டாலின்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மற்றும் முக கவசம் மட்டுமே தடுப்பு ஆயுதமாக பார்க்கப்பட்டு வருகிறது இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முன் களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதிக்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 4 லட்சம் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்  ...
பணத்திற்காக மனைவிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல் – 7 பேரை கைது

பணத்திற்காக மனைவிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல் – 7 பேரை கைது

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரள மாநிலம்  சங்கனாச்சேரியைச் சேர்ந்த பெண் ,காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது கணவர் கட்டாயப்படுத்தி வேறு ஒரு நபருடன் உறவு  வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறான உறவுக்கு,  தான் உட்படுத்தப்பட்டதாகவும் அந்த பெண் தமது புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்தப் புகாரை விசாரித்த கேரள காவல்துறையினர், அந்த பெண்ணின் கணவர் மற்றும் நண்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. அதன்படி கோட்டயம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் டெலிகிராம் மற்றும் மெசஞ்ஜர் செயலிகள் மூலம் பலர் குழுக்களாக இணைந்துள்ளனர். இந்த குழுவில் இணையும் நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்ட பின்னர் தங்களது மனைவிகளை மாற்றிகொண்டது தெரியவந்துள்ளது. கேரளாவில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் இந்த குழுவில் இணைந்துள்ளனர். பணத்திற்காக பலர் இந்த செயலில...
பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு ஆவணங்கள் இன்றி ஆதார் எண் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின்போது பாலியல் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக, தர்பார் மகிளா ஒருங்கிணைப்புக் குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை வழங்குவது, தொடர்பான நிலை அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதுவரை பாலியல் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை எதுவும் கேட்காமல் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிரு...
பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்படி, 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒருபகுதியாக  பொங்கல் விடுமுறை நாட்களில்  கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் நிறைவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்த...