சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!  

தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து!  

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து! தமிழக உளவுத்துறையில் முதல் பெண் ஐ.ஜி.யாக நியமனம் பெற்றிருக்கும் தூத்துக்குடி மாவட்டம், கொங்கராயக் குறிச்சியில் பிறந்த ஆசியம்மாளுக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக உளவுத்துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்தவர். அதனால் அவருக்கு உளவுத்துறை ஏடிஜிபி பதவியை புதிய திமுக அரசு வழங்கியுள்ளது. அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியாக டிஐஜி அந்தஸ்த்தில் பெண் அதிகாரியான ஆசியம்மாள் அமர்த்தப்பட்டுள்ளார். இது தமிழக காவல்துறையிலேயே முதன்முறையாகும். குரூப்-1 அதிகாரியான ஆசியம்மாள் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். 56 வயது நிறைந்த இவர் எம்எஸ்சி, எம்டெக் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர். தூத்துக்கு...
சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை!

சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்ட சவுதி இளவரசி 3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை! சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 2019 மார்ச் மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்து செல்ல திட்டமிட்டு விமான நிலையம் செல்லும் நிலையில் இளவரசி பாஸ்மா சவுத் கைது செய்யப்பட்டார். உடல் நலனைக் கருத்தில் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுதி அரேபிய இளவரசி பாஸ்மா மற்றும் அவரது மகள் ஆகியோர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தடுப்புக் காவலில் இருந்தபோதும் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை என அங்குள்ள மனித உரிமைகள் கு...
நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் – உரிமையாளர் மீது வழக்கு!

நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் – உரிமையாளர் மீது வழக்கு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் - உரிமையாளர் மீது வழக்கு! குஜராத் மாநிலம் கிருஷ்ணா நகர் மாவட்டத்தில் உள்ள திரண்பார்க் பகுதியை சேர்ந்தவர் சிரக் படேல், ஊர்விஸ் படேல். அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவரும் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் அந்த செல்ல நாய்குட்டிக்கு பிறந்தநாளாம். இதையொட்டி கிருஷ்ணா நகரில் மிகவும் பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உறவினர்கள் அனைவருக்கும் அவர்கள் அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர். நுற்றுக்கணக்கானவர்கள் அந்த செல்ல நாய்க்குட்டி பிறந்த நாளுக்கு திரண்டு வந்தனர். நாய் குட்டியை கையில் வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் கேக் வெட்டினார்கள். முதல் துண்டு கேக் அந்த நாய்குட்டிக்கு ஊட்டப்பட்டது. அபி என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நாய்க்குட்டிக்கு பட்டுத்துணியில் உட...
சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்!

சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்! சென்னையில் கொரோனா பரவல் கடந்த அலையைவிட தற்போது வேகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் பலருக்கு ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவைகளில் மொத்தம் 1090 ஐ.சி.யூ படுக்கைகளில் 58 படுக்கைகள் அதாவது 6 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன. 3,747 ஆக்சிஜன் படுக்கைகளில், 18 சதவீதம் (699 படுக்கைகள்) மட்டுமே நிரம்பி உள்ளன. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரனிராஜன் கூறுகையில், 231 நோயாளிகள் எஸ் ஜீன் வீ...
சத்தியமங்கலம் அருகே திடீர் என வயல்வெளியில் இறங்கிய ஹெலிகாப்டர்

சத்தியமங்கலம் அருகே திடீர் என வயல்வெளியில் இறங்கிய ஹெலிகாப்டர்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  பெங்களூரிலிருந்து பாரத்-ஷீலா என்ற கணவன் மனைவியை ஏற்றிக்கொண்டு கேப்டன் ஜஸ்பால் கேரளா மாநிலம் கொச்சின் நோக்கி ஹெலிகாப்டரை இயக்கி உள்ளார், உடன் இன்ஜினியர் அங்கித் சிங் என நான்கு பேருடன் பெங்களுரில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் புறப்பட்டு உள்ளது ஹெலிகாப்டர், ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி வழியாக வானில் வந்த போது அத்தியூர் என்ற இடத்தில் காலை 11-15 மணியளவில் திடீர் என வயல்வெளியில் தரை இறங்கியது முன்னதாக, கடம்பூர் மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் வானில் இருந்து தாழ்வான பகுதியில் பறந்து சென்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்து உள்ளனர் ஹெலிகாப்டர் தரை இறங்கியதை அறிந்த கடம்பூர் மலைப்பகுதியை பொதுமக்கள் ஹெலிகாப்டரை காண திரண்டனர், மேலும் சிறுவர்கள், இளைஞர்கள் ஹெலிகாப்டரை முன்பு நின்று ஆச்சரியத்தில் போட்டோ மற்றும் செல்பி எடுத்து கொண்டனர். பனிமூட்டம் காரணமாக கடம்பூர் அருகேயுள்ள அத்தியூர...
வடிவேலுவின் ”கிணத்த காணோம்” பாணியில் போலீசுக்கு வந்த புகார்!

வடிவேலுவின் ”கிணத்த காணோம்” பாணியில் போலீசுக்கு வந்த புகார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வடிவேலுவின் ”கிணத்த காணோம்” பாணியில் போலீசுக்கு வந்த புகார்! மதுரையின் கூடல்புதூர் நகரில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வோடபோன் செல்போன் டவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என போலீசில் புகாரளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 'கண்ணும் கண்ணும்' படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நிலத்தில் தோண்டிய கிணத்தை காணும் என்று போலீசில் புகார் அளிப்பார்.  இதுபோன்ற ஒரு சம்பவம் தான் மதுரை நகரின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஆனால் இங்கு காணாமல் போனது கிணறு இல்லை, பல லட்சம் மதிப்பிலான பிரபல நிறுவனத்தின் செல்போன் டவர். மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூரின் அமராவதி தெரு பகுதியில், பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான Vodafone நிறுவனத்தின் சார்பில் செல்போன் டவர் ஒன்று ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. கடந்த இரு தினங்களாக இப்பகுதி மக்களுக்கு சரியாக சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு...
கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் – அதிர்ச்சித்தகவல் வெளியிட்ட விஞ்ஞானி

கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் – அதிர்ச்சித்தகவல் வெளியிட்ட விஞ்ஞானி

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
  ‛‛கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்பதால், தமிழகத்திற்கு மீண்டும் பொது முழு ஊரடங்கு தேவையில்லை,'' என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை, சவுமியா சுவாமிநாதன், திறந்து வைத்தார். பின், சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டி:கொரோனா தொற்றின் முதல் அலையில், தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தெரியாத சூழலில், பொது முடக்கம் தேவைப்பட்டது. தற்போது, உலக முழுதும் மருத்துவ கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது முழு முடக்கம் தேவையில்லை. டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும், மருந்து சிகிச்சைக்கான தேவை குறைவாக உள்ளதால், தமிழகத்திற்கு முழு ஊரடங்கு தேவைப்படாது.தற்போதைய ச...
ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு…!

ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு...! நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்று மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான எளிய வழிமுறைகளை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை, பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இருப்பை பொருத்து வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சு...
கலாச்சார அவமதிப்பு, ஆபாச சர்ச்சையில் சிக்கிய கிரீஸ் குறும்படம்

கலாச்சார அவமதிப்பு, ஆபாச சர்ச்சையில் சிக்கிய கிரீஸ் குறும்படம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
கலாச்சார அவமதிப்பு, ஆபாச சர்ச்சையில் சிக்கிய கிரீஸ் குறும்படம் கிரீஸ் நாட்டின் ஏதென்சில் உள்ள பண்டைய தொல்பொருள் தளமான அக்ரோபோலிசை அவமதிக்கும் வகையில், குறும்படம் எடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்ரோபோலிசில் இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்வது போன்று அந்த படத்தில் வருகிறது. மொத்தம் 36 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படத்திற்கு ‘டிபார்த்தினான்‘ என பெயரிட்டுள்ளனர். டிசம்பர் 21ம் தேதி ஆன்லைனில் படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த வாரம்தான் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து நாட்டின் கலாச்சார அமைச்சகம் விசாரணையை தொடங்கி உள்ளது. அக்ரோபோலிசில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை, அக்ரோபோலிசின் தொல்பொருள் தளமானது, சமூக செயல்பாடு மற்றும் நினைவுச்சின்னத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் எந்தவித செயல்பாடுகளுக்கும் ஏற்ற இடம் அல்ல எனறு கலாச்சாரத்துறை கூறி உள்ளது. ...
150 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா – மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து!

150 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா – மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
150 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா - மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, இந்தியாவில் 150 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கொரோனாவை கட்டுப்படுத்த 150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளோம் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், 150 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதைக் குறிக்கும...