ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று!

helth tips, HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், செய்திகள்
இந்தியாவில் புதிதாக 53,476 பேருக்கு கொரோனா தொற்று! இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,17,87,534 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 251 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,60,692 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,31,650  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 26,490 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,95,192  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 5,31,45,709 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது....
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, செய்திகள், நடிகர்கள்
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா! பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அமீர்கான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்....
ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்!

ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ராகவா லாரன்ஸ் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்! ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார். கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து திரையுலகைச் சேர்ந்த சிலர் இவருக்கு உதவிக்கரம் நீட்டினர். இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீப்பெட்டி கணேசன், கடந்த திங்களன்று (மார்ச் 22) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகி...
தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு பாதுகாப்பானது – உச்சநீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு பாதுகாப்பானது – உச்சநீதிமன்றம் கருத்து

HOME SLIDER, NEWS, politics
    தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீடு சரியானதுதான்; அரசியல் சாசனத்தின் பாதுகாப்பைப் பெற்றுள்ளது; தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீட்டு வரம்பை தாண்டி செல்லலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் மராத்தி ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் தமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனால் மராத்தா இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் இந்த வழக்கு விசாரிக்கபட உள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, நாகேஸ்வர ராவ், அசோக் பூஷண், அப்துல் நசீர், ரவீந்தர பட் ஆகியோர் அடங்கிய அரசியல் பெஞ்ச் மு...
மராட்டியத்தில் ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால்…. பா.ஜ.க.,வுக்கு- சிவசேனா எச்சரிக்கை

மராட்டியத்தில் ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால்…. பா.ஜ.க.,வுக்கு- சிவசேனா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மராட்டியத்தில் ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால்.... பா.ஜனதாவுக்கு- சிவசேனா எச்சரிக்கை மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் கமி‌ஷனர் பரம்பீர் சிங் சரியாக நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி அவர் கமி‌ஷனர் பணியில் இருந்து மாற்றப்பட்டார். இந்தநிலையில் பரம்பீர் சிங், மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ஒரு முக்கிய குற்றச்சாட்டை கூறினார். உள்துறை மாதம் மாதம் ரூ.100 கோடி கமி‌ஷன் பணம் வசூலித்து தரும்படி வற்புறுத்தியதாகவும், அதை ஏற்க மறுத்ததால் தன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இந்த பிரச்சினை மராட்டியத்தில் பெரிய வி‌ஷயமாக வெடித்துள்ளது. உள்துறை மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வற்புறுத்தி வருகிறது. அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என்று சரத்பவார் அறிவித்து இருக்கிறார். இந்தநிலையில் சிவச...
சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பு!

சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பு!

HOME SLIDER, NEWS
சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பு! கொரோனா பரவலால் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருந்த உள்நாட்டு விமானங்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், ஏப்ரல் மாதத்திற்கான கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு  ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் -மு.க ஸ்டாலின்

இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம் -மு.க ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics
இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவி ஈழத் தமிழர்களுக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 'இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா, இலங்கை...
ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்!

ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்!

HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள், முன்னோட்டம்
ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்! இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று இன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது. அப்போது இந்தியா உள்பட 14 நாட்கள் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணித்தன. வங்காளதேசம், பொலிவியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வெனிசுலா உள்பட 11 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், நமிபியா, கேமரூன், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது....
சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு?

சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், முன்னோட்டம்
சட்டசபை தேர்தலில் சென்னையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் வாக்கு யாருக்கு? தலைநகர் சென்னை வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னையாக திகழ்கிறது. தொடக்கத்தில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு ஏராளமானோர் படையெடுத்தனர். தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பலரும் சென்னைக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள், தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை பெறுவது சிம்ம சொப்பனமாக திகழ்கிறது.   ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய வட மாநிலத்தவர்களோ வாக்குரிமை, ஆதார் கார்டு, லைசென்சு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசின் அடையாள ஆவணங்களை பெற்று, தற்போது பூர்வீக சென்னைவாசிகளாகவே மாறி விட்டார்கள். சென்னை நகரின் பல இடங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் தாய்மொழி அல்லாத வட மாநிலத்தவர்களி...
தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்!

தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், முன்னோட்டம்
தொல். திருமாவளவன் மு.க.ஸ்டாலினை ஆதரித்து நாளை பிரசாரம்! விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொண்டார். காலையில் பிரசார பாடல் ஒலிப்பேழையை வெளியிட்ட அவர் மாலையில் திருக்கழுகுன்றம், கேளம்பாக்கம், திருப்போரூர் (பொதுக்கூட்டம்) ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். இன்று (செவ்வாய்கிழமை) மாலை பவுஞ்சூர், செய்யூர், சித்தாமூர் கூட்டுச்சாலை, சூனாம்பேடு ஆகிய இடங்களில் திருமாவளவன் பேசுகிறார். இரவு 7 மணிக்கு கடப்பாக்கம், கல்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். நாளை (24-ந் தேதி) சென்னையில் 6 தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். 4 மணிக்கு திரு.வி.க. நகர், 5 மணிக்கு எழும...