ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு -கமல் தேர்தல் அறிக்கை

நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு -கமல் தேர்தல் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics
நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இருந்தது. முன்னதாக தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டார். அதில் கூறியிருப்பதாவது:- 1. ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி கொடுக்கப்படும். 2. விவசாயம் தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை உறுதி செய்து ரூ.60-70 லட்சம் கோடியாக உயர்த்துவோம். 3. 1 முதல் 2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உறுதி செய்து, தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக ...
“டிஎம்சாட் 1”- காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் புதிய செயற்கைக்கோள்!

“டிஎம்சாட் 1”- காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் புதிய செயற்கைக்கோள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
"டிஎம்சாட் 1"- காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் புதிய செயற்கைக்கோள்! அமீரகத்தின் காற்று மாசுபாடு தொடர்பாக அளவீடு செய்யும் வகையில் ‘டிஎம்சாட் 1’ என்ற புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் துபாய் மாநகராட்சி ஒத்துழைப்புடன் இந்த திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த செயற்கைக்கோள் வருகிற 20-ந் தேதி அமீரக நேரப்படி காலை 10.07 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அமீரக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அமீரகத்தில் இருக்கும் காற்று மாசுபாடு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அமீரகம் உள்ள...
ஊரடங்கு வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- சென்னை மாநகராட்சி

ஊரடங்கு வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- சென்னை மாநகராட்சி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஊரடங்கு வதந்தி பரப்பினால் சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை! சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் எதிர்புறம் அமைந்துள்ள மார்க்கெட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் நேற்று கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது. சென்னையில் 4 லட்சம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டு உள்ளனர். இவர்களில் யாருக்கும் இதுவரை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை. 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால்தான் சென்னை பாதுகாப்பான நகரம் என சொல்லமுடியும். 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இன்னும் 3 மாத காலம் ஆகும். சென்னையில் உள்ள 140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாநகராட்சி மூலமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட தயாராக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்...
கொரோனாவை காட்டிலும் சாலை விபத்துகளால் பலி அதிகம் – நிதின் கட்கரி

கொரோனாவை காட்டிலும் சாலை விபத்துகளால் பலி அதிகம் – நிதின் கட்கரி

HOME SLIDER, NEWS, politics
கொரோனாவை காட்டிலும் சாலை விபத்துகளால் பலி அதிகம் - நிதின் கட்கரி கொரோனாவை காட்டிலும் சாலை விபத்துகளால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது .  ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்திய மக்கள் கொரோனா வைரஸுடன் போராடி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு விதிக்க மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.மக்களவையில் நேற்று கேள்வி பதில் நேரத்தின்போது, போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், “ கடந்த ஒரு ஆண்டில் சாலை விபத்துகளால் 1.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களோ 1.46 லட்சம் பேர். கொ...
பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி விரைவில் கைது?

பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி விரைவில் கைது?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளாகி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி விரைவில் கைது? பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பெரம்பலூரில் முதலமைச்சர் பழனிச்சாமியின் தேர்தல் பரப்புரை பாதுகாப்பு பணிக்கு  சென்றுவிட்டு திரும்பிய போது, பெண் எஸ்பியிடம் சிறப்பு டிஜிபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது புகார் ஆகும். இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இது குறித்து கூடுதல் தலைமை செயலாளர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் சிபிசிஐடி போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.,யான கே.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன...
அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தி போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்த தலைவர்கள்!

அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தி போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்த தலைவர்கள்!

HOME SLIDER, NEWS, politics
அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தி போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்த தலைவர்கள்! அதிமுக கூட்டணியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பல தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தற்போதைய எம்எல்ஏ விஜயகுமாருக்கு சீட் கொடுக்காமல், பாமகவுக்கு ஒதுக்கியதால் அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டங்களை நடத்தினர். அதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் லட்சுமி சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனுக்கு சீட் கொடுக்காமல், சந்திரனுக்கு சீட் கொடுத்தனர். இதனால் சந்திரசேகரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து போட்டியிட பாஜ மாவட்ட தலைவர் ஓம் சரவணா நே...
வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது!

வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது!

HOME SLIDER, NEWS, politics
வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது! தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. 13-ந்தேதி (சனிக்கிழமை), 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் தவிர்த்து, வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் அளிக்கும் வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 3 ஆ...
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்கும் பா.ஜ.க. தலைவர்கள் – மம்தா குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics
வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கவும், ஓட்டுகளை அள்ளவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்றனர் - மம்தா குற்றச்சாட்டு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார். ஆனால் அவரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியே தீருவது என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளது. மம்தா கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்கள் முதல் மந்திரிகள் வரை பலரும் பா.ஜ.க.வுக்கு தாவுகின்றனர். இந்த தருணத்தில் பாசிம் மெதினிபூரில் நேற்று மம்தா பானர்ஜி பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வாக்காளர்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும், ஓட்டுகளை அள்ளுவதற்காகவும் பா.ஜ.க. தலைவர்கள் பண மூட்டைகளுடன் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வந்திறங்குகின்ற...
நடிகை குஷ்புவின் அசையும் அசையா சொத்து மதிப்பு இதுதான்!

நடிகை குஷ்புவின் அசையும் அசையா சொத்து மதிப்பு இதுதான்!

HOME SLIDER, NEWS, politics, நடிகைகள்
நடிகை குஷ்புவின் அசையும் அசையா சொத்து மதிப்பு இதுதான்! தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு, இன்று மனுதாக்கல் செய்தார். அதில், தனது அசையும் அசையா சொத்துகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தனது பெயரில் 18 கோடி ரூபாயில் அசையா சொத்துகள் இருப்பதாகவும், பார்ச்சூனர், டொயோட்டா, மாருதி ஸ்விப்ட் போன்ற கார்கள் உள்ளதாகவும், தங்க நகைகள் 8.55 கிலோ உள்ளதாகவும், வெள்ளி 78 கிலோ பொருட்கள் என 4.55 கோடி மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாக அவர் தெரிவித்து...
அதெல்லாம் சரி… பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? – மோடிக்கு சவால் விட்ட மேற்கு வங்க எம்பி

அதெல்லாம் சரி… பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? – மோடிக்கு சவால் விட்ட மேற்கு வங்க எம்பி

HOME SLIDER, NEWS, politics
அதெல்லாம் சரி... பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? 15 லட்சம் எங்கே? - மோடிக்கு சவால் விட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மேற்கு வங்கத்தில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வர் பதவியில் இருக்கும் மம்தா பானர்ஜியை, இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜியை தாக்கி பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும், மம்தா பானர்ஜி வெளியேற உள்ளதாகவும் அவர் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், பிரதமருக்கு சவால் விட்டிருக்கிறார். டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:- நீங்கள் அழிவுகரமான கட்சி. நான் பிரதமரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எங்களிடம் மம்தா பானர்ஜி இருக்கிறார். உங்களால் ஏன் ...