‘பொள்ளாச்சி சம்பவத்தை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’!
M பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தரமானதாகவும் கருத்துள்ளதாகவும் “ கருத்துக்களை பதிவு செய் ”என்ற படத்தை தயாரிக்கிறது..
இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.
மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான்.
இணை தயாரிப்பு - JSK கோபி. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் ராகுல். இவர் ஏற்கெனவே ஜித்தன் 2 ,1 A.M என்று இரண்டு படங்களை இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார். அந்த இரண்டு படங்களுமே ஹாரர் டைப் படங்கள்.
இப்போது இயக்கும் கருத்துக்களை பதிவு செய் படமும் ஹாரர் டைப் படமே.
ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான் என்கிறார் ராகுல்...
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது...சமூக வலை தல மான பேஸ்புக் பற்ற...









