ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 24 தொழில் ஒப்பந்தங்கள்-41,695 பேருக்கு வேலைவாய்ப்பு! இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை ‘வர்த்தகம் மற்றும் வணிக வாரம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, மாநிலத்தின் ஏற்றுமதித்திறனை வெளிப்படுத்தும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் “ஏற்றுமதியில் ஏற்றம்- முன்னணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவரது முன்னிலையில் ரூ.2120.54 கோடி முதலீட்டில் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 24 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முதலீடுகள் ஜவுளி, ரசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், எக்கு பொருட்கள், தோல் ஆடைகள், பொது உற்பத...
ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.12 கோடி பரிசு!

ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.12 கோடி பரிசு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஓணம் பம்பர் லாட்டரியில் ஆட்டோ டிரைவருக்கு ரூ.12 கோடி பரிசு! கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்த லாட்டரியின் முதல் பரிசு தொகை ரூ.12 கோடி ஆகும். கேரள நிதிமந்திரி கே.என்.பாலகோபால் கலந்துகொண்டு அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுத்தார். அதில் டி.இ. 645465 என்ற எண்ணிற்கு முதல் பரிசு ரூ.12 கோடி விழுந்தது. அதேநேரம் அந்த முதல் பரிசை பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், தற்போது அந்த அதிர்ஷ்டசாலி ஆட்டோ டிரைவர் என்பது தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித்துராவை சேர்ந்த ஜெயபாலனுக்கு இந்த பரிசு கிடைத்து உள்ளது. இவர் கடந்த 10-ந் தேதி இந்த லாட்டரி சீட்டை திருப்பணித்துராவில் உள்ள ஒரு கடையில் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. முதல் பரிசு பெற்ற ஜெயபாலனுக்கு ரூ.12 கோடியில் 10 சதவீதம் ஏஜென்ட் க...
கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை!

கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை! கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் அந்த வழக்கை நீலகிரி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முக்கிய குற்றவாளியான சயான், சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என 40-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் மறுவிசாரணை நடத்தி அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த 3 மாதங்களில் கொடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்த தினேஷ்குமார், தூக்கில் பிணமாக தொங்கினார். கொடநாடு எஸ்டேட்டின் வரவு- செலவு கணக்குகளை கண்காணித்து வந்த அவர் திடீரென இறந்ததில் மர்மம் உள்ளதாக அவரது உறவினர்கள் அப்போது புகார் தெரி...
சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை!

சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை! ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சென்னையில் அரசு சுவர்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி விட்டு அங்கு வண்ண வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு பகுதியிலும் எங்கெங்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன? என்பதை கண்காணித்து அவற்றை அகற்றி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 57 ஆயிரத்து 374 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 527 போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்று மட்டும் 210 இடங்களில் ஒட்டப்பட்டிருந்த 1,159 போஸ்டர்கள் அகற்றப்ப...
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்!

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம்! காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி தலைமையில் 19 கட்சிகள் பங்கேற்ற கூட்டணி கட்சிகள் கூட்டம் கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி காணொலி காட்சி மூலம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிதாக கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் உள்ளிட்ட மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செப்டம்பர் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் செப்டம்பர் 20-ந்தேதி (இன்று) மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு: வார்டு எண். 3-ப.ராமமூர்த்தி, குன்னம் வார்டு எண்.4-எஸ்.பாலா (எ) பால்ராஜ், மொளச்சூர் வார்டு எண்.5-வி.அரி, நந்தம்பாக்கம் வார்டு எண்.6-படப்பை ஆ.மனோகரன் வார்டு எண்.7-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு. செங்கல்பட்டு மாவட்டம் வார்டு எண்.1-ச.மனோகர், கவுல்பஜார் வார்டு எண்.4-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு எண்.5-பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில் வார்டு எண்.6-காயத்திரி அன்ப...
விண்வெளி நிலைய பணி – சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்!

விண்வெளி நிலைய பணி – சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
விண்வெளி நிலைய பணி - சீன விண்வெளி வீரர்கள் 3 பேர் 90 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினர்! சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தைக் கட்டமைத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் இந்த விண்வெளி நிலையத்தை முழுமையாக கட்டமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது. தியான்ஹே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மையப்பகுதி கடந்த ஏப்ரல் மாதம் 29-ம் தேதி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தியான்ஹே விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக நை ஹைஷெங், (56) லியு போமிங் (54) மற்றும் டாங் ஹோங்போ (45) ஆகிய 3 விண்வெளி வீரர்கள் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி சென்ஷு 12 விண்கலம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டனர். ...
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை!

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்: அண்ணாமலை நம்பிக்கை! பிரதமர் நரேந்திர மோடியின் 71- வது பிறந்தநாளையொட்டி தமிழக பா.ஜ.க. தொழில் பிரிவு சார்பில் சென்னை கமலாலயத்தில் ‘75 அங்குல அளவிலான தொடுதிரை டிஜிட்டல் டி.வி.’ நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் எம்.என்.ராஜா, அமைப்பு பொதுசெயலாளர் கேசவ விநாயகம், பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழாவில் தொடுதிரை டிஜிட்டல் டி.வி.யின் செயல்பாட்டை கே.அண்ணாமலை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த டிஜிட்டல் டி.வி. மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் (பன்கி பாத்) கலந்துரையாடலை கேட்டு அவரிடம் பேசவும் முடியும். சமூக நீதியை பிரதமர் நரேந்திர மோடி நிலைநா...
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 98.96 ரூபாய், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 14-வது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எவ்வித மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது....