ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து 10,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து 10,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து 10,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு! தமிழகத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். கே.கோபால், போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அரசு கூடுதல் செயலாளர், போக்குவரத்துத் துறை, காவல்துறை அலுவலர்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், தாம்பரம் நகராட்சி ஆணையர், பூந்தமல்லி நகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழும கண்காணிப்பு பொறியாளர், போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர், சாலை போக்குவரத்து நிறுவன இயக்குநர் மற்றும் அனைத்து மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்...
சிக்கலில் ஐஸ்வர்யா ராய் – ஆஜராக அதிரடி சம்மன்!

சிக்கலில் ஐஸ்வர்யா ராய் – ஆஜராக அதிரடி சம்மன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சிக்கலில் ஐஸ்வர்யா ராய் - ஆஜராக அதிரடி சம்மன்! பனாமா ஆவண விவகாரம் தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் என்ற பெயரில் வெளியானது. இதில் பல நாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட 500 இந்தியர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் பகுதி 37-ன் கீழ், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜாராக வேண்டும் என அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதாகவும், இது தொடர்பாக அவர் 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....
உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா!

உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலக அழகி இறுதிப் போட்டி தள்ளிவைப்பு: இந்திய அழகி உள்பட 17 பேருக்கு கொரோனா! 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி போர்டோரிகோ நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நாட்டு அழகிகள் அங்கு குவிந்தனர். இதில் இந்தியா சார்பில் மானசா வாரணாசி பங்கேற்றுள்ளார். உலக அழகி பட்டத்துக்கான இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் உலக அழகிப்போட்டி தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் திடீரென்று அறிவித்தனர். போட்டியில் பங்கேற்றுள்ள அழகிகளில் 17 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இதில் இந்திய அழகி மானசா வாரணாசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து உலுக அழகி போட்டி அமைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் பங்கேற்பாளர்களில் சிலருக்கு கொரோன...
தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்!

தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தெருநாய்களுக்கு உணவளித்த பெண்ணிற்கு ரூ.8 லட்சம் அபராதம்! நவிமும்பையில் உள்ள என்.ஆர்.ஐ. ஹவுசிங் காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் 40 குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்பை சேர்ந்த பெண் அன்சு சிங். இவர் தெருநாய்களுக்கு கட்டிட வளாகத்தில் உணவளித்து வந்தார். இதனால் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் அப்பெண்ணை நாய்களுக்கு உணவு வழங்க தடை விதித்தது. ஆனால் அன்சு சிங் இந்த தடையை மீறி உணவளித்து வந்தார். இதனால் கட்டிட வளாகத்தில் உணவளித்த குற்றத்துக்காக ஹவுசிங் காம்ப்ளக்ஸ் நிர்வாகம் நாள்தோறும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் விதிக்கப்பட்ட அபாரதம் ரூ.8 லட்சம் வரையில் எட்டி இருப்பதாகவும், இது சட்டவிரோதமானது என அன்சு சிங் குற்றம்சாட்டி உள்ளார். இதே போல மற்றொரு பெண்ணும் தெருநாய்களுக்கு உணவளித்ததாக ரூ.6 லட்சம் வரையில் அபராதம் விதித்தது. இது பற்றி ஹவுசிங் காம்ப்ளக்ஸ் செயலாளர் வினிதா ஸ்ரீ...
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் விடுதியில் சாப்பிட்ட 8 பேர் உயிரிழப்பு?: பெண் ஊழியர்கள் சாலை மறியல்! திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே ஜமீன்கொரட்டூரில் தனியார் கப்பல் என்ஜினீயரிங் கல்லூரி வளாகம் உள்ளது. தற்போது செயல்படாமல் உள்ள இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள 7 தளங்கள் கொண்ட மாணவர் விடுதியை, காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக  வாடகைக்கு எடுத்துள்ளது. இதில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் தங்கி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கு தங்கி உள்ள  பெண் ஊழியர்களுக்கு 400 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களை சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறி...
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். ...
கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கிண்டி கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அண்ணாசாலை, கோயம்போடு, பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது. அதன் அருகே பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. கத்திப்பாரா பாலத்திற்கு கீழ் காலியாக இருந்த இடத்தில் 14.50 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சதுக்கத்தில் பேருந்து நிலையம், சிறுவர் பூங்கா, உணவகம், வணிக வளாகம் போன்றவை உள்ளன. இந்த சதுக்கத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்....
சூர்யாவின் வாடா தம்பி… எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

சூர்யாவின் வாடா தம்பி… எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் வாடா தம்பி... எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்! பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘வாடா தம்பி...’ என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. https://youtu.be/B52cNsAIxxU...
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு!

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு! தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். 2021-2022 நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வழியுறுத்தி வந்தன. இந்த நிலையில் 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மொத்த தொகையில் 50 சதவீதமாகும்....
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை, கரூர், நமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சில இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்....