ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கொரோனா தடுப்பு பணிக்கு தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிக்கு தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் நிதியுதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கொரோனா தடுப்பு பணிக்கு தயாரிப்பாளர் தாணு ரூ.10 லட்சம் நிதியுதவி! கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல தயாரிப்பாளர் தாணு கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கி உள்ளார். அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “பெருந்தொற்றுக் காலத்தில் ஆட்சியின் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது. தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோ...
முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி! நாடோடிகள் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருப்பவர் சாந்தினி. இவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். திருமணம் செய்து கொள்வதாக தன்னை ஏமாற்றியதாகவும், கருகலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டின் பேரில் அடையாறு மகளிர் போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன்   ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போது ஜூன் 9-ந்தேதி வரையில் மணிகண்டனை கைது செய்ய ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. நீதிபதி அப்துல்குத்தூஸ் விசாரித்தார். மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அவர் உத்தர...
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம்- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! தமிழகத்தில் கொரோனா வைரஸ்பாதிப்பால் நடுத்தர வயதை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் ஏற்பட்ட இதுபோன்ற உயிரிழப்புகளால் பல குடும்பங்களில் பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இதுபோன்ற பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல்வேறு தரப்பிலும் முன் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதி இது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டார். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம், வைப்பு தொகை நிலுவையில் வைக்கப்படும் என்று தெரிவி...
தொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்!

தொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தொழிலதிபர் தன்னை கற்பழித்ததாக பிரபல நடிகை பரபரப்பு புகார்! வங்காளதேசத்தை சேர்ந்த புகழ் பெற்ற இளம் நடிகை போரி மோனி. 28 வயதாகும் இவர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசியாவின் சிறந்த 100 திரை நட்சத்திரங்களின் பட்டியலில் போரி மோனி இடம் பிடித்தார். இந்நிலையில், வங்காளதேசத்தின் மிகப்பெரும் தொழில் அதிபர்களில் ஒருவரான நசீர் முகமது தன்னை கற்பழித்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் நடிகை போரி மோனி பேஸ்புக் மூலம் பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் அவர் இது தொடர்பாக தான் சட்ட அமலாக்க துறையை அணுகியபோது தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், எனவே தனக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பேஸ்புக் பதிவு மூலம் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரிக்கை விடுத்தார். நடிகை போரி மோனியின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய...
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு- மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் சிறப்பு கவுரவம்! தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக   மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின்னர் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில்   மு.க.ஸ்டாலின்  பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் காலை டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்  சந்தித்து பேசுகிறார். இந்த சந்தி...
சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபாவை கைது செய்ய டேராடூன் விரைந்த தனிப்படை!

சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபாவை கைது செய்ய டேராடூன் விரைந்த தனிப்படை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபாவை கைது செய்ய டேராடூன் விரைந்த தனிப்படை! சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, சென்னையில் உள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் நாகராஜன், வெங்கட்ராமன் உட்பட 3 பேர் நேரில் ஆஜராகினர். ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை...
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா கட்டுப்பாடுகளை மீறாதீர்கள்- மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் பேசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு தொற்றால் பாதிக்கப்படுகிற வர்கள் 36 ஆயிரமாக இருந்தனர். இது 50ஆயிரமாக உயரும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துகொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவமனை...
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்!

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்!

HOME SLIDER, NEWS, Uncategorized, செய்திகள்
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 24 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்! தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து, அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றும் 24 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 54 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கின்றனர். இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீடுகள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் ஜே.விஜயராணி சென்னை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை இணை செயலாளர் ஏ.ஆர்.ராகுல் நாத் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு சிமெண்ட் கழகம் மேலாண்மை இயக்குனர் எம்.ஆர்த்தி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதார...
பாலியல் புகார் சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

பாலியல் புகார் சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாலியல் புகார் சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது தமிழகத்தில் பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலில் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த புகார்கள், பின்னர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் சென்று, விசாரணை நடைபெறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில், தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக்கொண்டு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வரும் சாமியார் சிவசங்கர் பாபா  மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அவர் நடத்தி சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக...
வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்!

வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
வாளால் கேக் வெட்டிய இங்கிலாந்து ராணி எலிசபெத்! ஜி7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் கலந்து கொண்டார். அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். ராணி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப் அண்மையில் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி  கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இதுவாகும். இந்த நிகழ்வின் போது, ஜி 7 கூட்டமைப்பின் தலைவர்கள், ராணியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புகைப்படம் எடுக்கையில், ராணி 2ம் எலிசபெத் நகைச்சுவையாகப் பேசி, அனைத்துத் தலைவர்களையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தார். மாநாட்டிற்கிடையில், ராணி 2ம் எலிசபெத் கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதில் சிறப்பம்சமாக ராணி வாள் கொண்டு கேக் வெட்டியத...