ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தது!

ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தது. ரஷிய தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கருதப்படுகிறது. எனவே, இந்தியா மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கடந்த 1-ந் தேதி ரஷியாவில் இருந்து 1½ லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. மத்திய மருந்துகள் ஆய்வுக்கூடம் அதற்கு ஒப்புதல் அளித்தது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ந் தேதி, ஐதராபாத்தில் முதல் முறையாக ஒரு பயனாளிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தொகுப்பு நேற்று இந்தியாவுக்கு வந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அதில், 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் இருந்தன. வி...
குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் நிலநடுக்கம்!

குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் நிலநடுக்கம்! குஜராத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். ராஜ்கோட்டிலிருந்து 122 கி.மீ., தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவானது என்று தேசிய புவியியல் மையம் தெரிவித்திருந்தது. இதனால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்றும் ராஜ்கோட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிற்பகல் 12.57 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ராஜ்கோட்டிலிருந்து வடமேற்கில் 83 கி.மீ., தொலைவில் பதிவாகி உள்ளது.  கட்ஜ் பகுதியில், 4.2 ரிக்டர் அளவுகோலில் இம்மாதம் 10ம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும், அம்மாநிலத்தின் ம...
இன்று முதல் தமிழகத்தில்  ‘இ-பதிவு’ முறை கட்டாயம்!

இன்று முதல் தமிழகத்தில் ‘இ-பதிவு’ முறை கட்டாயம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று முதல் தமிழகத்தில் 'இ-பதிவு' முறை கட்டாயம்! தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு ‘இ-பதிவு' முறை கட்டாயம் ஆகும். தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்புக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு ‘இ-பதிவு' முறை (http://eregister.tnega.org) அமல்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்த உத்தரவில், 'த...
டி.ஆர்.டி.ஓ.-யின் 2-டிஜி பவுடர் வடிவில் கொரோனா தடுப்பு மருந்து!

டி.ஆர்.டி.ஓ.-யின் 2-டிஜி பவுடர் வடிவில் கொரோனா தடுப்பு மருந்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) கொரோனா தடுப்பு மருந்து டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன. இந்த முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு, 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், டிஆர்டிஓ ஆகியவை இணைந்து கிளினிக்கல் பரிசோதனையை கொரோனா நோயாளிகளிடம் நடத்தினர். 2-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை இந்தியாவில் 6 மருத்துவமனைகளில் நடந்து ...
எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு

எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து சட்டமன்ற கட்சித்  தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன் கூட்டினார். அப்போது ஆலோசனை வழங்க எம்எல்ஏ-க்கள் குழு அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க முதலமைச்சர் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு எம்எல்ஏ இடம் பிடித்துள்ளனர் திமுக- எழிலன் அதிமுக- சி. விஜயபாஸ்கர் பாஜக- நயினார் நாகேந்தின் பாமக- ஜிகே மணி காங்கிரஸ்- முனிரத்தினம் மதிமுக- சதன் திருமலைக்குமார் விடுதலை சிறுத்தைகள்: பாலாஜி கொமதேக- ஈஸ்வரன் தமிழக வாழ்வுரிமை கட்சி- வேல்முருகன் புரட்சி பாரதம்- ஜெகன் மூர்த்தி சிபிஐ- ராமச்சந்திரன் சிபிஎம்- நாகை மாலி மனிதநேய மக்கள் கட்சி- ஜவாஹிருல...
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு!

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை ஓட்டெடுப்பு! தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் பல தொகுதிகளை இழந்த நிலையில் இந்த தேர்தலில் மீண்டு எழுந்தது. அந்த கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம் 18 எம்.எல்.ஏ.க்களில் சட்டசபை தலைவர் பதவியை பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல் முறை எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றவர்கள் மட்டும் அமைதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள், இரண்டு மற்றும் 3 முறை எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களிடையே இந்த பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி ஒருமித்த முடிவை ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம் எ...
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்! சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசிவிர் மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு ச...
‘கோயில்களை காப்போம்’ என்ற கோஷம் ஜக்கி வாசுதேவின் முட்டாள்தனம் – அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

‘கோயில்களை காப்போம்’ என்ற கோஷம் ஜக்கி வாசுதேவின் முட்டாள்தனம் – அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ‘கோயில்களை காப்போம்’ என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள கோயில்களை எல்லாம் இந்து சமய அறநிலையத்திடம் இருந்து மீட்கப்போவதாக கோஷம் எழுப்பி வரும் ஜக்கி வாசுதேவுக்கு தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். 1927 ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கிய நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவருமான சர் பி.டி. ராஜன் அவர்களின் பேரனான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர். அதோடு, 1950 ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த மூல விகிரகத்திற்கு பதிலாக புதிய விக்கிரகத்தை வழங்கியவரும் பி.டி.ராஜன் என்பது வரலாறு, இன்றளவும் பி.டி.ஆர். அவர்கள் வழங்கிய ஐயப்பன் சிலையே மூலஸ்தானத்தில் வழிபாட்டுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்துமதத்தின் மீது...
பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாஜக அரசின் திட்டமிடாத தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் அதிக அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது.   இதைத் தடுக்க கொரோனா தடுப்பூசி சிறந்த வழி என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு மூன்று கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணியை அறிவித்துள்ளது.  அதன்படி மே 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே முதல் இரண்டு கட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் பலருக்கு இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்படவில்லை.  இதற்கு கொரோனா தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு முக்கிய காரணம் ஆகும்.   பாஜக அரசு சரியான உற்பத்தி மற்றும் திட்டமிடல் இல்லாமல் வெளிநாடுகளுக்கு மருந்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதால் இந்த தட்டுப...