ஊரடங்கு நீடிக்கும் போது சுங்க கட்டணத்தை உயர்த்துவது அப்பாவி மக்களின் ரத்தத்தை உறுஞ்சும் செயல் – சீமான் கடும் கண்டனம்
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் சுங்கக் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக் சொல்லப்பட்டு வரும் நிலையில் அதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீமானின் அறிக்கை:-
வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடிக் கட்டணங்கள் 10 விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படலாம் என வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த 5 மாதத்திற்கும் மேலாகத் தொடரும் ஊரடங்கினால் நாடு முழுமைக்கும் தொழில்கள், வேலைவாய்ப்பு என யாவும் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் பொருளாதார முடக்கமும், பணவீக்கமும் நிலவும் நிலையில் நடுத்தர வர்க்கத்தினரும், அடித்தட்டு உழைக்கும் மக்களும் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து, அத்தியாவசியத் தேவைகளுக்கே வழியற்று நிற்கையில், சுங்கச்சாவடிக் கட்டணம் உயர்த்தப்பட்டால் அது அவர்கள் தலை மீது விழும் பேரிடியாய் மாறும் என்பதில் ஐயமில்லை.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உ...









