திங்கட்கிழமை, ஆகஸ்ட் 17
Shadow

NEWS

உலக கோப்பை ஆக்கி போட்டி- நாளை வேல்சுடன் மோதும் இந்தியா!

உலக கோப்பை ஆக்கி போட்டி- நாளை வேல்சுடன் மோதும் இந்தியா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
15-வது உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கெலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். மற்ற 4 அணிகள் 2-வது சுற்று மூலம் முன்னேறும். ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது. இந்திய அணி 3-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் வேல்சை நாளை (19-ந் தேதி) எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய அணி ...
4 நாட்களில் வண்டலூர் பூங்காவை  ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்!

4 நாட்களில் வண்டலூர் பூங்காவை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு அதிக அளவில் சென்று வந்தனர். காணும் பொங்கலையொட்டி நேற்று வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பழவேற்காடு பகுதியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலா இடமாக வண்டலூர் பூங்கா உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் வண்டலூர் பூங்காவில் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடந்த 4 நாட்களில் வண்டலூர் பூங்காவை 1 லட்சம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். நேற்று மட்டும் 31 ஆயிரம் பேர் குவிந்து இருந்தனர். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூ...
நடிகை அமலா பாலுக்கு கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

நடிகை அமலா பாலுக்கு கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இந்துக்களை தவிர மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இதுபோல கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கேரளா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பாலும் நேற்று முன்தினம் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்து விட்டனர். அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் மனம் வருந்திய நடிகை அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வரு...
தஞ்சை மாநகராட்சி 25-வது வார்டில் புகையில்லா போகி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலப்போட்டி!

தஞ்சை மாநகராட்சி 25-வது வார்டில் புகையில்லா போகி என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலப்போட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தஞ்சாவூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட தத்தோஜியப்பா சந்தில் பிளாஸ்டிக் இல்லா மாநகராட்சி மற்றும் புகையில்லா போகி என்ற தலைப்பின் கீழ் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதற்கு 25-வது வார்டு கவுன்சிலர் ஆர்.தெட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பெண்கள் விழிப்புணர்வு கோலங்கள் இட்டனர். சிறந்த கோலத்திற்கு சிறப்பு பரிசுகளும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் புகையில்லா போகி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டன....
திருப்பூரில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி !

திருப்பூரில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக சட்டமன்றம் நேற்று கூடியது.அப்போது தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் , அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை குறிப்பிடாமல் பேசிய ஆளுநருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . இந்தநிலையில் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர். இதில் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதில் கலந்துகொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆளுநர் உர...
பொங்கல் பண்டிகை- கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை!

பொங்கல் பண்டிகை- கோயம்பேட்டில் சிறப்பு காய்கறி சந்தை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பின்புறம் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு காய்கறி சந்தை இன்று தொடங்கியது. இன்று முதல் ஜனவரி 17-ம் தேதி வரை செயல்படும் சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள், இஞ்சி மற்றும் மண்பானை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். முதல் நாளான இன்று கரும்பு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. சிறப்பு சந்தைக்கு பொதுமக்கள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது....
சென்னை ஆவின் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

சென்னை ஆவின் அலுவலகத்தில் பால் உற்பத்தியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி நந்தனம் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். தமிழக அரசு பால் கொள்முதலுக்கு மேலும் கூடுதல் விலை அறிவிக்க கோரி நடந்த போராட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சண்முகம், பெருமாள், முனுசாமி முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மாநில தலைவர் கே.முகமது அலி கூறியதாவது:- தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டிற்குப் பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை.பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி அறிவிக்க கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 1 லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கப்பட்டத...
பொங்கல் பண்டிகை- தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

பொங்கல் பண்டிகை- தமிழகம் முழுவதும் 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்....
திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!

திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.... “ ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு ...
வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!

வாகன நெரிசலை குறைக்க சென்னையில் 300 சாலைகளில் புதிய கண்காணிக்கும் கருவி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன. இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள். இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும். ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும். 5 நிமிடங்களுக:கு ஒருமுறை டேட்பிக்கள் பதிவேற்றம் செய்யப்படும். எந்த சாலைகளில் போக்குவரத்து நேரிசல் அதிகமாக காணப்படுகிறதோ அதற்கு ஏற்றாற்போல் வாகனங்களை மாற்று பாதைகளில் போக்குவரத்து போலீசார் திருப்பி விட முடியும். இதற்கு முன்பு ஆங்காங்கே ...