விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து?!
விசாரிக்க தனிவீடு... பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்... தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!
விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகள் கொடூர மரண வழக்கு நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைதாகி உள்ளனர்.
இந்த சூழலில் இதே போல வியாபாரிகளிடமும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை மடக்கியும் தொடர் வசூலில் ஈடுபடும் இன்ஸ்பெக்டரால் பொதுமக்கள் பெரிதும் அவதி படுகிறார்கள்.
அதோடு, புகார் கொடுக்கும் பொது மக்களை அலட்சியமாகவும், புகாரில் குற்றம் சாட்டப்படும் நபரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்தும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறார் இந்த இன்ஸ்பெக்டர்
தனது கட்டப்பஞ்சாயத்து வசூல் வேட்டைகளுக்கு ...









