மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் – புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!
மளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!
மளிகை, காய்கறி, டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் என்ற அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது.
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை உருவெடுத்து, கொடூரமாக தாக்கி வருகிறது. நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் சனிக்கிழமைகளில் மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் கொரோனாவின் நோய் ...









