ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 29
Shadow

NEWS

நடிகர் மாதவன் டாக்டர் பட்டம் பெற்றார்

நடிகர் மாதவன் டாக்டர் பட்டம் பெற்றார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தமிழில் அலைப்பாயுதே, மின்னலே படங்களின் மூலம் ரசிகர்களை தன்வசப்படுத்திய மாதவன், இந்தியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். குறிப்பாக, தனு வெட்ஸ் மனு, த்ரீ இடியட்ஸ், உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. தமிழில் கடைசியாக மாதவன் நடிப்பில் ஓடிடி தளத்தில் ‘மாறா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மார்டின் ப்ராகாட் இயக்கத்தில் துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நடிகராக மட்டுமல்லாது ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவதாரமெடுத்துள்ளார் மாதவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாகி வ...
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை  உத்தரவு

பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு

HOME SLIDER, NEWS, politics
  பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவு புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணை நிலை கவர்னராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. அவரை மாற்றவேண்டும் என்று நாராயணசாமி போர்க்கொடி தூக்கி வந்தார். இந்தநிலையில், கிரண்பேடியை திரும்பப்பெறுவதாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார். இதற்கிடையே புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவந்தரராஜன் உத்தரவிட்டுள்...
தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டு பிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழக வீட்டுவசதி வாரிய டெண்டர் முறைகேட்டை கண்டுபிடித்தவர்களை வாழ்த்திய ஸ்டாலின்! தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததை வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆதாரங்களுடன் வெளியில் கொண்டுவந்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து விருதுநகரில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தலைவர் பேசும்போது அழுத்தம் கொடுக்கவே இப்போது அந்த டெண்டர்கள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தலைவரின் பேச்சுக்கு கிடைத்த பெரிய வெற்றி. அதற்காக வீட்டுவசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் அதன் பொதுசெயலாளர் பூச்சி எஸ்.முருகன், சங்க வழக்கறிஞர்கள் புகழ் காந்தி, முத்துக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் இன்று தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்....
சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு – முக ஸ்டாலின் கண்டனம்

சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு – முக ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics
  சிலிண்டர் விலை உயர்வு தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு - முக ஸ்டாலின் கண்டனம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்த நிலையில் இன்று கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதற்கான பரிசுதான் மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழகத்திற்கு பிரதமர் வந்து சென்றதன் பரிசு மானியமில்லா சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்வு என்று கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே மானியத்துடன் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூபாய் 100 உயர்ந்துள்ளது என்றும் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்துகொண்டே போகிறது என்றும் ஏன் இந்த கொடூரம் என்றும் மக்கள் நிம்மதியாக வாழ வரிகளை குறைத்து விலகி விலை உயர்வை தடுக்க என்றும் அவர் கூறியுள்ளார் நேற்று சென்னை வந்த பிரதமர் அடுத்த நாளே தமிழக மக்கள் உள்பட இந்த...
ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை

ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை! ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் மூன்று நாள் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ராகுல் காந்தி கடந்த மாதம் 23, 24 மற்றும் 25-ந்தேதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி, 28-ந்தேதி மற்றும் மார்ச் 1-ந்தேதி ஆகிய மூன்று நாட்களில் தென்தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்....
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு

திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் 17-ந்தேதி முதல் விருப்பமனு! தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். ஏற்கனவே, பிரசாரத்தை தொடங்கியுள்ள ஒவ்வொரு கட்சிகளும், தேர்தலுக்கான ஆயத்த பணிகளை முடிக்கிவிட்டுள்ளன. இன்று காலை அதிமுக, விருப்ப மனு கொடுக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் அளிக்கலாம் எனத் தெரிவித்தது. அதன்பிறகு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வருகிற 21-ந்தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் எனத் தெரிவிதிருந்தார். இந்த நிலையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ‘‘திமுக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வருகிற 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். ரூ.1000 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம். வி்ண்ணப்பக் கட்டணம் ரூ. 25 ஆயிரமாகும். பெண...
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ந்தேதி முதல் விருப்பமனு தாக்கல்!

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ந்தேதி முதல் விருப்பமனு தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ந்தேதி முதல் விருப்பமனு தாக்கல்! மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:- நடைபெற இருக்கும் 2021-ஆம் ஆண்டு தமிழக மற்றும் பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது. சீரமைப்போம் தமிழகத்தை, புதியதோர் புதுவை செய்வோம் எனும் நமது இருபெரும் கனவுகளை நனவாக்க வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வய்ந்த தருணம் இது. நமது கட்சி நேர்மையானவர்களின் கூடாரம். திறமையாளர்களின் கோட்டை. துணிச்சல் மிக்கவர்களின் பாசறை. நாம்தான் தமிழகத்தின் பாதுகாப்புப்படை. ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக பொருளியலைச் சீரமைத்து தமிழகத்தை வளமாக்க முடியும். அதற்குரிய தகுதியும், அருகதையும், திறமையும் நமக்கு மட்டுமே உண்டு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்...
அய்யா வைகுண்டர் கோயிலுக்கு போகும் துணை முதல்வர்… வேண்டுதல் ரகசியம் என்னவோ!?

அய்யா வைகுண்டர் கோயிலுக்கு போகும் துணை முதல்வர்… வேண்டுதல் ரகசியம் என்னவோ!?

HOME SLIDER, NEWS, politics
  சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் உள்ள வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வரும் மார்ச் 4 ஆம் தேதி வருகிறார். சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் ஆலயம் உலக பிரசித்திப் பெற்றதாகும். இக்கோவிலில் தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும் அய்யா வைகுண்டரின் 189 வது அவதார திருநாளை முன்னிட்டு, பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், மனோஜ் பாண்டியன் எம்.பி, இயக்குநரும் தயாரிப்பாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சாமித்தோப்பில் வைகுண்டர் தரிசனம் பெற வருகிறார். 2008 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டரின் வரல...
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!

HOME SLIDER, NEWS, politics
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது!   தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க.வின் 5 ஆண்டு கால ஆட்சி வருகிற மே மாதம் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்தான் வருகிற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்ய முடியும். சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போது தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என தெரிகிறது. இந்த 6 மாத கால இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்க அமைச்சரவை கூட்டம் கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவமும் கொடுக்கப்பட உள்ளது. அநேகமாக 22-ந் தேதிக்குபிறகு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ...
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம் ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வ...