சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று 5 அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து அனுமதி அளிக்க கோரி கவர்னர் பன்வாரிலாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். 7.5 சதவீத உள்ஒதுக்...
மலிவு விலையில் வெங்காய விற்பனையை தொடங்கிய தமிழக அரசு!

மலிவு விலையில் வெங்காய விற்பனையை தொடங்கிய தமிழக அரசு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரிச்சு வந்துச்சு. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேத்திக்கு தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 45 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும், நாளை முதல் தமிழகம் முழுவதும் பசுமைப் பண்ணை கடைகளில் கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45-க்கான விற்பனை திட்டத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைச்சார்....
சர் என எகிறிய வெங்காயம் விலை கிலோ45க்கு விற்க அரசு முடிவு

சர் என எகிறிய வெங்காயம் விலை கிலோ45க்கு விற்க அரசு முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் பெரிய வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பெரிய வெங்காயம் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது....

சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னையில் தயாராகும் போலீஸ் அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சங்களை கொண்டது. 178 ஆண்டு கால பழமை வாய்ந்த அந்த கனவு கட்டிடம் தனது புதிய அத்தியாயத்தை தொடங்கப்போகிறது. அந்த கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சென்னை போலீசின் சிறப்புகளை சொல்லும். சென்னை போலீஸ் என்றாலே அந்த கட்டிடம் தான் நினைவுக்கு வரும். அருள், ஷெனாய், செந்தாமரை, ஸ்ரீபால், வால்டர் தேவாரம் போன்ற ஜாம்பவான் போலீஸ் கமிஷனர்கள் பணி புரிந்தது அந்த அலுவலகத்தில் தான். கடைசியாக ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது தான், புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் வேப்பேரியில் திறக்கப்பட்டது. கடைசியாக அங்கு கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ் தான். போலீஸ் கமிஷனர் அலுவலகமாக மாற்றப்படும் முன்பு அந்த பகுதி வயல்வெளி சூழ்ந்த பண்ணை வீடாக இருந்தது. அருணகிரி முதலியார் என்பவர் 1842-ல் அந்த கட்டி...
விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்

விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், முன்னோட்டம்
  விஜய் சேதுபதி மிரட்டப்பட்டதற்கு கனிமொழி கண்டனம் விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட என திமுக எம்.பி., கனிமொழி ட்விட்டரில் கருத்து. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம் - கனிமொழி. இந்த குற்றத்தை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கனிமொழி....

முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முதல்வருடன் திரையரங்க உரிமையாளர்கள் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் அவர்களை அவரது இல்லத்தில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், பொருளாளர் இளங்கோவன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சந்தித்தனர் அனைத்து தொழில்நிறுவனங்களும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் குளிர்சாதன வசதியுடன் இருப்பதால் உடனடியாக அனுமதி வழங்க இயலவில்லை அக்டோபர் 28 அன்று சுகாதார குழுவின் கூட்டத்தில் இது சம்பந்தமாக விவாதித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார் இந்த சந்திப்பின்போது அபிராமி ராமநாதன், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் உரிமையாளர் ஹரி, சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் வெங்கடேஷ், வேலூர் சீனிவாசன், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் உரிமையாளர் ரமேஷ், சேலம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்....

Ministers meet TN Guv seeking nod for 7.5% quota bill for medical courses

HOME SLIDER, NEWS, politics
    Ministers meet TN Guv seeking nod for 7.5% quota bill for medical courses A group of Ministers on Tuesday called on Governor Banwarilal Purohit today seeking his assent for the Bill providing 7.5 per cent horizontal reservation for government school students in medical seats. The delegation, comprising Ministers C Ve Shanmugham, D Jayakumar, K P Anbalagan, K A Sengottaiyan and Dr C Vijayabaskar met Mr Purohit at the Raj Bhavan and sought his nod for Bill which was unanimously passed in the State Assembly on September 15 as the NEET results were announced and the counselling for medical admissions were set to begin. The state government had on October 16 informed the Madurai Bench of Madras High Court that “until a decision is taken by the Governor on the assent t...
நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள், ஸ்டாலின் கவலை அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்! விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. ‘காவிரி காப்பாளர்’ பட்டம் மட்டும் போதுமா முதல்வர் பழனிசாமி? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது தெரியாதா? உடனடி நடவடிக்கை தேவை! - மு.க.ஸ்டாலின்...