சனிக்கிழமை, நவம்பர் 28
Shadow

NEWS

இசையுலகில் புது புரட்சி” முதல்வர் பழனிச்சாமியிடம்  விருது பெற்ற பா.இரஞ்சித்தின் இசைக்குழு!!

இசையுலகில் புது புரட்சி” முதல்வர் பழனிச்சாமியிடம் விருது பெற்ற பா.இரஞ்சித்தின் இசைக்குழு!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  "இசையுலகில் புது புரட்சி" அடுத்தடுத்து விருதுகளைக் குவிக்கும் பா.இரஞ்சித்தின் இசைக்குழு!! இந்திய சுதந்திரப் போராட்டத்திலிருந்து, திராவிட இயக்கத்தின் எழுச்சி வரை பல மிக முக்கியமான சமூக மாற்றங்களுக்கு துணையாக இருந்தவை கலையும், இலக்கியமும் தான். மக்களை ஒருங்கிணைக்கவும், சிந்திக்கவும் வைக்கக் கூடிய சாத்தியமான வழிமுறையாக கலை இருந்திருக்கிறது, இருக்கிறது. அமெரிக்காவில் கருப்பினத்தினவர்களின் விடுதலைக்கு இசை மகத்தான ஆயுதமாக விளங்கியதை நாம் அறிந்ததே. இத்தகைய உலக விடுதலை வரலாற்றின் தொடர்ச்சியிலிருந்தே, இயக்குநர் பா.இரஞ்சித் தனது கலைப் படைப்புகளின் மூலம் சமூகத்திற்கு பங்காற்றி வருகிறார். அவரின் கனவிலிருந்து உருவான "தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்" இசைக்குழுவின் குரல்கள் சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரல்களாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இசையுலகில் ஊடுருவியிருக்கிற ஏற்ற...
தனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி!

தனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி. பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் கடந்த 11, 12ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார். இந்த கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று குறித்து தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதற்கான பதிவில், 'உலகின் பழமையான மொழியின் கலாசாரத்தில் என்னை வெளிப்படுத்தி கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் மொழி மிகவும் அழகானது. தமிழ் மக்கள் மிகவும் தனித்துவமானவர்கள்' எனத் தெரிவித்துள்ளார்...
முதல்வர் பழனிச்சாமி  டாக்டர் எடப்பாடியார்! ஆனார்…

முதல்வர் பழனிச்சாமி  டாக்டர் எடப்பாடியார்! ஆனார்…

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
முதல்வர் பழனிச்சாமி  டாக்டர் எடப்பாடியார்! ஆனார்... எம்.ஜி.ஆர் கல்வி ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். அரசியல் தலைவர்கள் பலருக்கும் அவ்வவ்போது இந்தப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை வேலப்பன்சாவடி ஏசிஎஸ் மருத்துவக்கல்லூரியில் முதலமைச்சர் பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, காவ...
ஆந்திராவில் அரசு வேலைக்கு இனி மதிப்பெண் அடிப்படையில் தான் நியமனம்… நேர்முக தேர்வு முறை ரத்தாகிறது – முதல்வர் ஜெகனின் அடுத்த அதிரடி

ஆந்திராவில் அரசு வேலைக்கு இனி மதிப்பெண் அடிப்படையில் தான் நியமனம்… நேர்முக தேர்வு முறை ரத்தாகிறது – முதல்வர் ஜெகனின் அடுத்த அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மதுக்கடைகளை குறைக்கும் திட்டம், ரேஷன் பொருள்கள் வீடு களுக்கே கொண்டுவரும் திட்டம், விவசாயிகளுக்கு நிதி உதவி, ஆட்டோ - கால்டாக்சி ஓட்டுநர்க ளுக்கு நிதி உதவி, என, பல் வேறு திட்டங்களை அமல் படுத்தியிருக்கிறது ஆந்திர அரசு. ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்ற 100 நாள்களுக்குள் இந்த திட்டங்கள் அமல் படுத்தப் பட்டுள்ளன. அந்த வகையில், ஆந்திரா வில் அரசு வேலைகளுக் கான ஏ.பி. பி. எஸ்.சி., தேர்வுகளில், நேர்முகத் தேர்வை நீக்க முடி வெடுக்கப் பட்டுள்ளது. 2020ம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடை முறைப்படுத்தப் படும் என அறிவிக்கப்படுள்ளது. அதன்படி, நேர்முகத் தேர்வுக்கு பதில், தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்படும். இந்த நிலையில், மருத்துவ மற்றும் சுகா தாரத் துறையின் மறு ஆய்வுக் கூட்டத்தின், ஆந்திரமாநிலம் அமராவதி யில் நேற்று (18ம் தேதி) நடந்தது. அப்போது, சமு தாய மருத்து...
நடிகர், நடிகைகளின் சம்பளத்தை உயர்த்தாமல்  கட்டுப்படுத்த புதிய அமைப்பு..!

நடிகர், நடிகைகளின் சம்பளத்தை உயர்த்தாமல் கட்டுப்படுத்த புதிய அமைப்பு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் நடிகைகளின் சம்பளம் உயருவது குறையுமா? தமிழ் சினிமாவில் புதிதாக உருவாகியிருக்கும் சங்கம். திரைப்படங்களின் கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை வழங்கி வந்த கேஸ்டிங் டைரக்டர்கள் எனப்படும் நடிப்பு இயக்குனர்கள், தென்னிந்தியாவில் ஒன்றிணைந்து 'தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கத்திணை' தங்களுக்கென உருவாக்கியுள்ளனர். மேலும் இச்சங்கத்தில் முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு மேலாளராக பணியாற்றுபவர்கள் இதில் ஒரு அங்கமாக உள்ளனர். இச்சங்கமானது வரும் காலங்களில் திரைத்துறையில் புதிதாய் வாய்ப்பு தேடுவோர் மற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு ஒரு நல்ல உறுதுணையாக அமையும் என தெரிவித்துள்ளனர். இதனை வழி நடத்த திரைத்துறையின் ஜாம்பவான்களான நடிகர் மற்றும் இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்கள் கௌரவ வழிகாட்டியாகவும், கௌரவ ஆல...
சாதனை புரிந்த தமிழர்களுக்கு நியூஸ் 18 வழங்கிய மகுடம் விருது..!

சாதனை புரிந்த தமிழர்களுக்கு நியூஸ் 18 வழங்கிய மகுடம் விருது..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தமிழர்களை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் மகுடம் விருதுகள் விழாவை நடத்தி சாதனைத் தமிழர்களை கொண்டாடி வருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி. கடந்த இரு ஆண்டுகளாக கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு, சமூக சேவை என பல்துறை சாதனையாளர்களை அலசி ஆராய்ந்து அவர்களில் ஒருவரை நடுவர்கள் குழு மூலம் தேர்வு செய்து, சாதனையாளார்களையும், தமிழருக்கு பெருமை சேர்த்தவர்களையும் கெளரவித்து வருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு. அந்த வகையில், மூன்றாம் ஆண்டாக 2019ம் ஆண்டுக்கான மகுடம் விருதுகள் விழா சென்னை ஐடிசி க்ராண்ட் சோழா ஹோட்டலில் இன்று (அக்டோபர் 18) நடந்தது. தமிழகத்தில் தனி முத்திரைப்பதித்த திறமையாளர்களை அங்கீகரித்து கொண்டாடிய மகுடம் விருதுகள் விழாவில், சிறந்த அரசுப்பள்ளி, சிறந்த அரசு மருத்துவர், சிறந்த சமூக சேவகர், சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த எ...
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: முக.ஸ்டாலின்* விக்கிரவாண்டி: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் திண்ணை பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பதாலேயே நடத்தாமல் தவிக்கின்றனர் என ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்....
சட்டம் எல்லாருக்கும் பொதுவானது… வடக்குக்கு ஒரு நீதி… தெற்குக்கு ஒரு நீதியா… பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி

சட்டம் எல்லாருக்கும் பொதுவானது… வடக்குக்கு ஒரு நீதி… தெற்குக்கு ஒரு நீதியா… பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சட்டம் எல்லாருக்கும் பொதுவானது... வடக்குக்கு ஒரு நீதி... தெற்குக்கு ஒரு நீதியா... பிரதமருக்கு கடிதம் எழுதிய சிறைவாசி ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் விவரம்: ''நான், ஆர்.பி.ரவிச்சந்திரன், தமிழகத்தில், மதுரை மத்திய சிறையில் இப்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 தமிழர்களில் நானும் ஒருவன். கடந்த 28 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் நாங்கள் என்றோ ஒருநாள் விடுதலை பெறுவோம் என்று காத்திருக்கிறோம். 8 சீக்கியப் போராளிகளை மத்திய அரசு விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பது குறித்தும், பல்வந்த் சிங் ரஜோனாவின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறித்தும் கடந்த வாரம் எனக்குத் தெரியவந்தது. இது வரவேற்க வேண்டிய முடிவு. அதே நேரத்தில் இந்த அறிவிப்பு, மத்தியில் உங்கள் தலைமையிலான ஆட்சி சாதிக்கப் பாடுபடும் ஒ...
அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது வரும் சில படங்கள் திரையுலகை தாண்டி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். அதற்கு பல உதாரணம் இருந்தாலும் சமீபத்திய பரபரப்புக்கு காரணம் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரித்த அசுரன் படம். இந்த படத்தில் பஞ்சமி நில மீட்பு குறித்து வெற்றிமாறன் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார். இடைத்தேர்தல் பிரசாரத்தின் இடையே திமுக தலைவர் ஸ்டாலின் அந்த அசுரன் படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்தி இருந்தார். அப்போது பஞ்சமி நில மீட்பு குறித்த கருத்தை வரவேற்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்து ஒரு பதிவு போட பரபரப்பு அதிகமானது. அதில் திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமும் பஞ்சமி நிலம்தான் அதையும் உரியவர்களிடம் திருப்பினால் நல்லது என்று ராமதாஸ் பதிவு போட அதற்கு ஸ்டாலின் பதில் சவால் விட்டிருக்கிறார். அதில், "மருத்...
விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

விஜயின் பிகில் கதைக்கு சொந்தம் கொண்டாடும் 3 வது இயக்குனர் – 2015ல் பதிவு செய்த கதை திருடி விட்டார்களாம் – பகீர் ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிகில் கதை என்னுடையது பகீர் கிளப்பும் இயக்குனர்..! விஜய் படங்கள் என்றாலே கதை திருட்டு புகாரில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் விஜய்-அட்லி கூட்டணி என்றால் கதை திருட்டு முத்திரை பலமாக விழுகிறது. இப்போதும் தீபாவளி ரிலீசுக்கு விஜய் நடித்துள்ள பிகில் படத்தை அட்லி இயக்கி உள்ளார். இந்த படத்தை ஏ ஜி.எஸ். தயாரித்து உள்ளது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. விஜய் கால்பந்து பயிற்சியாளர் ஆக அப்பா மகன் என இரு வேஷத்தில் நடிக்கிறார். இந்த கதை தன்னுடைய கதை என உதவி இயக்குனர் செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பின் அட்லி தரப்பு கதை தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்...