சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக முடியாது – ப.சிதம்பரம் பிரச்சாரம்

27 அமாவாசை வந்தாலும் தேர்தல் வராது. 270 அமாவாசை வந்தாலும் பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக முடியாது – ப.சிதம்பரம் பிரச்சாரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி செயப்படுத்தப்படும் என்றும், தேர்தல் பிரசார கூட்டத்தில் நின்று கொண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பேசுகின்றனர். அவர்கள் தேவையில்லாமல் பிதற்றலாக பேசக் கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், சட்டமன்றத்தை முடக்குவோம் என்று கூறுகின்றனர். சட்டசபையை யாராலும் முடக்க முடியாது. அரசியல் சாசனப்படி அது முடியாது. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ளது. 2...
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிக்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்குப்பதிவு!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிக்கிய சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி புகார் அளித்த சக தீட்சிதர் சாமி கும்பிட சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான கணேஷ் தீட்சிதர் என்பவர் சாமி கும்பிட சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் 3 தீட்சிதர்கள் பேர் கொலை முயற்சி வழக்குபதிவு செய்திருந்தனர். இந்நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபைக்...
EPS-OPS 2 அமாவாசைகள் சொல்றாங்க 27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு  – உதயநிதி சரவெடி!

EPS-OPS 2 அமாவாசைகள் சொல்றாங்க 27 அமாவாசைல ஆட்சி முடிஞ்சுரும்னு – உதயநிதி சரவெடி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  சட்டசபையை முடக்கி விட்டு தேர்தலை சந்தித்தால் ஒரு இடத்தில் கூட அதிமுக ஜெயிக்காது என திண்டுக்கல்லில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்காக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க இளைஞர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், “தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பொழுது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்திருந்தது. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தமிழகத்தில் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தினோம். தமிழகத்தில் முதலாவது அலையின் போது அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. அப்பொழுது ஒரு கோடி அளவிற்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா அலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தடுப்பு ஊசி கண்டிப்பாக போட வேண்டும் என்று மக்கள் மத்தியில...
உக்ரைன் மீது போர் தொடுக்க  ரஷ்யா தயார்- வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள்!

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா தயார்- வெளிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்கள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும், அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படைவீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஆனாலும், ரஷ்யா எந்நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் உக்ரைனில் இருந்து உடனே வெளியேறும்படி தங்கள் குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளன. இந்த நெருக்கடி குறித்து விவாதிக்க 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ரஷ்யாவுக்கு கெடு விதித்துள்ள உக்ரைன், இதில் பங்கேற்க ஐரோப்பிய பாது...
வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!

வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு – சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
  வன்னியர் நல வாரியம் செயல்படுத்த வேண்டும், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு - சி.என்.இராமமூர்த்தி தலைமையில் தீர்மானம்! வன்னியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக்கட்சியின் நிறுவன தலைவர் சி.என்.இராமமூர்த்தி அவர்களின் பிறந்த நாள் விழாவும், அமைப்பின் மாநில செயற்குழு கூட்டமும் சென்னையில் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு முனபாக தனது பிறந்த நாளை முன்னிட்டு தென்னமரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. முன்னதாக பிறந்த நாளை முன்னிட்டு தாயாரிடம் சி.என்.ஆர். ஆசி பெற்றார்.   சென்னை சாலிகிராமம் சாய் நகரில் உள்ள சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கபபட்டது. பின்னர் வன்னியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சமூகநீதிப் போராளி இடஒதுக்கீட்டு நாயகர் சி.என். இராமமூர்த்தி அவர்கள் தலைமையில் சென்னையில் உ...
வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை பரப்புகிறது பாஜக – தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்

வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை பரப்புகிறது பாஜக – தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  வாட்ஸ்ஆப் மூலம் பாஜக மக்கள் மத்தியில் பொய்களை பரப்பி வருவதாகவும், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரத்தை கேட்பதில் என்ன தவறு உள்ளது என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சந்திரசேகர ராவ் கூறியதாவது- விவசாயிகள் விரும்பாத வேளாண் புதிய சட்டங்களை எதற்காக பாஜக கொண்டு வந்தது? போராட்டத்தின்போது பலர் உயிரிழந்தனர். சட்டங்களை திரும்பப் பெற்ற பின்னர், பாஜக ஏன் விவசாயிகளிடத்தில் மன்னிப்பு கேட்கவில்லை? வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை பாஜக பரப்புகிறது. மத சார்ந்த நம்பிக்கைகள் மற்றொரு தரப்பினருக்கு எதிராக நாடு முழுவதும் தூண்டப்படுகிறது. இவை எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நாம் முன்னோக்கி செல்ல வேண்டும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? நானும் கூட அதைக் க...
வாட்ஸ் அப்பில் ரெட் ஹார்ட் எமோஜி அனுப்பினால் ஜெயில் கன்பார்ம்!

வாட்ஸ் அப்பில் ரெட் ஹார்ட் எமோஜி அனுப்பினால் ஜெயில் கன்பார்ம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை குறிக்கும் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சைபர் கிரைம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. சவுதி சட்டத்தின்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மோசடி புகார்களுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி, சவுதி நாளிதழுக்கு விடுத்துள்ள அறிக்கையில், வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய எமோஜீயை ஒருவரது விருப்பம் இல்லாமல் அனுப்புவது துன்புறுத்தல் குற்றத்திற்கு சமம் ஆகும் என்றும், ஆன்லைனில் சேட்டிங் செய்யும் போது சில படங்கள் மற்றும் எமோஜீக்களை பயன்படுத்துவதால், எதிர்தரப்பினர் காயமடைந்ததாக புகார் தொடர்ந்தால், அது துன்புறுத்தல் குற்றமாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்...
2024-ம் ஆண்டு ஒரே தேர்தலா? மிசாவையே பார்த்த என்னை மிரட்ட முடியாது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

2024-ம் ஆண்டு ஒரே தேர்தலா? மிசாவையே பார்த்த என்னை மிரட்ட முடியாது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின் கே.புதூர், மூன்று மாவடி, ஆரப்பாளையம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண், கண்ணகி நீதி கேட்டு முழங்கிய மண், கருணாநிதி நீதி கேட்ட மண், தி.மு.க இளைஞர் அணிக்கு அடிக்கல் நாட்டிய மண் மதுரை. தி.மு.க வரலாற்றில் மதுரையும், மதுரை வரலாற்றில் தி.மு.கவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை. தென் தமிழகத்திற்கு தலைநகரம் போல இருக்கிறது மதுரை. மதுரையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன...
பஞ்சாப் மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் -மோடி பிரசாரம்!

பஞ்சாப் மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் -மோடி பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும்.  மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன். காங்கிரஸ் கொள்கைகள் பஞ்சாப் மாநிலத்தில் தொழில்களை அழித்துவிட்டது, வேலைவாய்ப்பை பாதித்துள்ளது. தங்களுக்குள் சண்டை போடுபவர்கள் நிலையான அரசாங்கத்தை தருவார்களா? இவ்வாறு அவர் பேசினார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் ...
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வருகின்றனர். ஒமைக்ரான், கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. வருகிற 16-ந்தேதி மழலையர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பல்வேறு தருணங்களில் விளக்கியுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மார்ச் மாதத்து...