பொள்ளாச்சி கொடூரம்: தமிழகத்தில் பாலியல் கொடுமை, பெண் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது – கனிமொழி எம்.பி
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் முன்னிலையில் பேசிய கனிமொழி எம்.பி., “பொள்ளாச்சி போராட்டத்தை தடுக்க முயன்றனர். இந்த போராட்டத்தை தடுத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என தளபதி எச்சரிக்கை விடுத்ததையடுத்து, காவல்துறை பணிந்தது. இதை தடுத்தால் வெகுண்டு எழுவோம்.
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை காவல்துறையே கூறியது. இன்று வரை அந்த கும்பல் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருகின்றனர். ஆளுங்கட்சியினர் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என நினைக்கிறனர். அதிமுகவினருடனான ஆதாரங்கள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே என தொடர்பு இருக்குனு பாருங்க. அதிமுக அமை...









