முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்” சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!
"முட்டாள் ட்ரம்ப்.. என் தந்தையின் வீரமரணத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்" சுலைமானியின் மகள் சைனப் சுலைமானி ஆவேசம்!
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா படுகொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஏற்கனவே ஈரான் அறிவித்த நிலையில், தங்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அடியை கொடுப்போம் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இப்படி இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ட்ரம்பின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என்...









