சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

அரசியல் பிச்சைக்காரர் கமல் – வம்பிழுக்கும் ஆளும் அதிமுக

அரசியல் பிச்சைக்காரர் கமல் – வம்பிழுக்கும் ஆளும் அதிமுக

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தொண்டர்களிடம் துண்டு விரிக்கும் கமல்ஹாசனை வேண்டுமானால் அரசியல் பிச்சைக்காரர் என சொல்லலாம் என நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத்தான் தேவை என பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.“கருத்துக்குருடரா, காழ்ப்புணர்ச்சி முரடரா” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அந்த கட்டுரையில், பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் தேவை என்கிறாரே கமல்ஹாசன். அப்படியென்றால் ஊனமுற்ற ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்குகிறாரே அவர், அது எதற்காக...
கஜா புயலுக்கு முன்… ரெட் அலார்ட் எச்சரிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது!

கஜா புயலுக்கு முன்… ரெட் அலார்ட் எச்சரிக்கையில் நாம் கவனிக்க வேண்டியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கஜா புயல் கரையைக் கடக்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்! வீடு மற்றும் வீட்டின் கட்டமைப்பை பரிசோதியுங்கள். எங்கேனும் வெடிப்பு இருந்தால் பூச்சு வேலை செய்தல், கதவுகளின் தாழ்ப்பாள்களை சரி செய்தல் போன்றவற்றை துரிதமாக முடியுங்கள். வீட்டுக்கு அருகே இருக்கும் முறிந்த கிளைகள், பட்டுப்போன மரக்கிளை, அதிக எடையுடன் மரக் கிளை இருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள். வீட்டு மாடி, உயரமான சுவர்களில் இருக்கும் கட்டைகள், பயன்படுத்தாத கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும். பேட்டரிகள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள், குடிநீர் கேன்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளவும். பாதி இடிந்த நிலையில் இருக்கும் கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டும். உலர்ந்த பழங்கள் போன்ற சமைக்காமல் அப்படியே சாப்பிடும் பொருட்களை வாங்க...
7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!

7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  7 பேர் யார்? கேள்வியால் பெருங்குழப்பத்தில் இருக்கிறாரா ரஜினி..?! நடிகர் ரஜினிகாந்த் பெருங்குழப்பத்தில் இருக்கிறார் என்றே தெரிகிறது. இதற்கு காரணம் சமீபத்திய அவரது பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாம் அவரை பொதுமக்கள் மத்தியில் கேலிக்ககூத்தாக்கும் விதமாகவே அமைந்துவிடுகிறது. விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ‘7 பேரின் விடுதலையை ரத்து செய்தது குறித்த கேள்விக்கு’ நேரடியாக பதில் சொல்லாமல் ‘எந்த ஏழு பேர்?’ என்று எதிர் கேள்வி கேட்டதோடு மட்டுமல்லாமல், ‘நான் இப்பதான் கேள்விப்படுகிறேன்... இப்பதான் வர்றேன்’ என்றும் பதில் சொல்லி இன்றைய நெட்டிசன்களின் மீம்ஸ் கலாட்டாவில் சிக்கிக் கொண்டார். உண்மையிலேயே ரஜினிகாந்த்துக்கு ராஜீவ் கொலையாளிகளான 7 பேரின் விடுதலை குறித்து செய்தி தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறாரா என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும்...
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- விஜயகாந்த்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச்சேர்ந்த சதீஷ் (வயது22), ரமேஷ் (22) ஆகியோரை தேடி வந்தனர். இவர்களில் ஏற்காட்டில் பதுங்கி இருந்த சதீஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்...
பா.ஜ.க.வினர் அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றனர் – பிரகாஷ் ராஜ்

பா.ஜ.க.வினர் அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றனர் – பிரகாஷ் ராஜ்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ‘போலி’ செய்தியால் ஏற்படும் தாக்கம் மற்றும் சவால்கள் என்கிற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- போலி செய்தி என் மீது நிறைய பேசப்பட்டது. சமுதாயத்தில் போலி செய்தி அதிக அளவில் பரவி வருகிறது. இதுபோன்ற செய்திகளை நம்பக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். மிகவும் சரியான ஒருங்கிணைப்பில் தவறான தகவலை பரப்புகின்றனர். மேலும் இதனை ஒரு ஆயுதமாக சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சியினர் போலி செய்திகளை பரப்புகின்றனர். குறிப்பாக பா.ஜ.க. அதிக அளவில் போலி செய்திகளை பரப்புகின்றது. இவ்வாறு பேசினார். பின்னர் பிரகாஷ்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த 4 1/2 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் போலியான செய்தி...
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்  பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் 2 முறை கவர்னரிடம் பரிந்துரை செய்து உள்ளோம். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருக்கிறோம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குடிசைகளை மாற்றி 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இதில் 3¾ லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 13 லட்சம் வீடுகள் கட்டிக...
கற்பழிப்பு பற்றி யாரிடமும் சொல்ல கூடாது மாணவியின் தந்தையை மிரட்டிய DSP..!

கற்பழிப்பு பற்றி யாரிடமும் சொல்ல கூடாது மாணவியின் தந்தையை மிரட்டிய DSP..!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கற்பழிப்பு நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார்- மாணவியின் தந்தை பேட்டி எனது மகள் கற்பழிப்பு சம்பவம் நடந்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று டி.எஸ்.பி. எங்களிடம் கூறினார் என்று மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார். மாணவியின் தந்தை அண்ணாமலை கூறியதாவது:- எனது மகள் தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று நான் ஆடு மேய்க்க சென்று விட்டேன். எனது மனைவி தோட்டத்து வேலைக்காக சென்று விட்டார். வீட்டில் என் மகள் மட்டும் தனியாக இருந்தார். அவர் மலம் கழிக்க வீட்டில் இருந்து ஒரு பர்லாங் தூரத்தில் உள்ள காட்டு பகுதிக்கு சென்றார். அப்போது சதீஸ், ரமேஷ் ஆகிய 2 வாலிபர்களும் என் மகளை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்ட போலீசில் நான் புகார் செய்தேன். ஆனால் போலீசார் புகார் மனுவை வாங்க ம...
உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி!

உயரம் குறைந்த நலிந்த கலைஞர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் நிதி உதவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (TMJA) தீபாவளி மலர் வெளியிடும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தது. செயற்குழு உறுப்பினர் முபாஷர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தலைவர் கவிதா பேசினார். சங்க செயலாளர் கோடங்கி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் புகழ் ஆரவ் வெளியிட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெற்றுக் கொண்டார். விழா மிக சிறப்பாக நடந்தது. மிகவும் சிரமத்தில் இருக்கும் உயரம் குறைந்த நடிகர்களுக்கு சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது. முன்னதாக செயற்குழு உறுப்பினர் சஞ்சய் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்தி பேசினார். முடிவில் சங்க துணை தலைவர் ஒற்றன் நன்றி கூறினார்.  ...
நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்  – கபிலன்வைரமுத்து

நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் – கபிலன்வைரமுத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  உண்மை வெல்லட்டும்... கபிலன்வைரமுத்து ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன். வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது நம் நம்பிக்கை. தன்வாழ்வே அவர்களின் வாழ்வியல். குடும்ப அமைப்பே நம் அடிப்படை. உலகப் பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியாவை ஓரளவிற்கு பாதுகாத்தது குடும்ப கட்டமைப்பே. அதுவே பிற நாடுகள் நம்மைப் பார்த்து பொறாமைப்படக் கூடிய பண்பு. நம் மண்ணில் தோன்றிய பெண்...
18 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்தது செல்லும் – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

18 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்தது செல்லும் – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என நீதிபதி சத்யநாராயணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்களின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு விசாரித்து வந்தது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது எனவும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கானது 3-வது நீதிபதியான சத்திய நாராயணனிடம் சென்றது. இந்த வழக்கின் மீதான அனைத்து தரப்பு வ...