சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

சென்னையிலிருந்து குஜராத்துக்கு இடம் மாறும் 1000 முதலைகள்… காரணம் இதுதானாம்!

சென்னையிலிருந்து குஜராத்துக்கு இடம் மாறும் 1000 முதலைகள்… காரணம் இதுதானாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள முதலைப் பண்ணையில், 17 வகைகளை சேர்ந்த சுமார் 2,000 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆசியா கண்டத்திலேயே அதிக முதலைகள் பராமரிக்கப்படும் பண்ணையாக இந்த முதலைப்பண்ணை திகழ்ந்து வருகிறது. இங்கே பராமரிக்கப்படும் பெரும்பாலான முதலைகள் சதுப்புநில முதலைகள் ஆகும். இத்தகைய பெருமை வாய்ந்த முதலைப்பண்ணையில், நாள் ஒன்றுக்கு கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி என சுமார் 500 கிலோ இறைச்சி வரை முதலைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடியில் முதலைப் பண்ணை தவித்துவருகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பார்வையாளர்கள் வரத்து குறைந்ததால் முதலை பண்ணைக்கு வருவாய் குறைந்தது. இதனால் முதலைகளை பராமரிக்க முடியவில்லை என்பதாலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில...
மகான் படத்தால் காந்தியை கொச்சைப்படுத்தி விக்ரம் பணம் சேர்க்க வேண்டுமா? – தமிழருவி மணியன் கண்டனம்!

மகான் படத்தால் காந்தியை கொச்சைப்படுத்தி விக்ரம் பணம் சேர்க்க வேண்டுமா? – தமிழருவி மணியன் கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
    மகான் படம் எடுத்தவர்களுக்கும், மராட்டியத்தில் கோட்சேவை வழிபடு நாயகனாக வடிவமைத்து நாடகம் நடத்துபவர்களுக்கும் பெரிய வேற்றுமை இல்லை என காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரமும், அவரது மகனும் இணைந்து நடித்துள்ள ' மகான் ' படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். இந்தப் படம் சார்ந்த இயக்குனரோ, தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர்களோ காந்தியத்தின் அரிச்சுவடி கூட அறியாதவர்கள். இன்றைய இளைய சமூகத்திடம் காந்திய நற்பண்புகளை விதைப்பது இவர்கள் நோக்கமில்லை. நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும் என்பதற்கு மேல் இவர்களுக்கு எந்தச் சிந்தனையும் இருப்பதற்கு நியாயமில்லை. ...
தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில்முன் பாய்ந்த ‘ஹீரோ’!

தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில்முன் பாய்ந்த ‘ஹீரோ’!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில்முன் பாய்ந்த ‘ஹீரோ’! மத்திய பிரதேச மாநிலம், போபால் அருகேயுள்ள பர்கேடியில் சம்பவத்தன்று முகமது மெகபூப் (வயது 37) என்பவர், மசூதியில் தொழுகை முடித்து விட்டு ரெயில் தண்டவாள ஓரத்தில் உள்ள பாதை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரைப் போல பலரும் அந்தப் பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது. 20 வயதை கடந்த இளம்பெண் ஒருவர் முதுகில் பையை சுமந்தவாறு தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு சரக்கு ரெயில் வரத்தொடங்கியதை கண்டபோது அந்தப்பெண்ணுக்கு பீதி ஏற்பட்டு அலறியவாறு தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அவரால் எழுந்து ஓட முடியவில்லை. அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த பலரும் நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர செய்வது அறியாமல் திகைத்து உறைந்து போயினர். அந்தகணத்தில், தண்டவாளத்தி...
சிறையிலிருந்து வீடியோ காலில் பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ஹரி நாடார்!

சிறையிலிருந்து வீடியோ காலில் பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ஹரி நாடார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை எனப் பெயர் எடுத்தவர் ஹரி நாடார். இவர் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடார், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குப் போன சில நாட்களிலேயே அவரது முதல் மனைவி ஷாலினிக்கும், இரண்டாவது மனைவி மஞ்சுவுக்கும் இடையே சண்டை உருவானது. சமூக வலைதளத்தில் இருவரும் ஹரிநாடார் தன்னுடைய கணவர் என வாதங்களை முன்னிறுத்தி வருவதால் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஹரி நாடார் நீக்கப்படுகிறார் என கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்தது பெரு...
முதல்வர் மு.க ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

முதல்வர் மு.க ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்டமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசிலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டார். இதனால், மேற்கு வங்க மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. முன்...
கோர்ட்டில் ஆஜராக ஷில்பா ஷெட்டிக்கு சம்மன்!

கோர்ட்டில் ஆஜராக ஷில்பா ஷெட்டிக்கு சம்மன்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாசிகர், பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மேக்கோரினா என்ற பாடலுக்கு தோன்றி அனைவரையும் கவர்ந்தார். இவருடைய தந்தை 2015-ஆம் ஆண்டு பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 2017-ஆம் ஆண்டு திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்த அவர் இறந்துவிட்டார். அந்த கடனை அவரின் குடுத்திடம் திருப்பி கொடுக்கும் படி கடன் வழங்கியவர் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க முன்வராததால் ஷில்பா ஷெட்டி, அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி வரும் 28-ம் தேதி ஷில்பா ஷெட்டி, சகோதரி சமிந்தா ஷெட்டி, தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் கோ...
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம் விரைவில்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம் விரைவில்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    பழனிசாமி - பன்னீர்செல்வம் சீரழித்த நிதி நிலைமையை, கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வருகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் பல விதமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். அவர், திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது பேசியதாவது, நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும், திமுக வேட்பாளர்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள...
பண மோசடி புகார் ராஜேந்திர பாலாஜியிடம் 11 மணி நேரம் விசாரணை!

பண மோசடி புகார் ராஜேந்திர பாலாஜியிடம் 11 மணி நேரம் விசாரணை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஆவினின் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த புகார்களில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகர் மாவட்ட குற்ற...
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் குற்றமாகாதாம்… ஆனால் இதை கடைபிடிக்கனுமாம்!

வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசினால் குற்றமாகாதாம்… ஆனால் இதை கடைபிடிக்கனுமாம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
    இந்தியாவில் வாகன போக்குவரத்து என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்திற்கு ஏற்ப சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயருகிறது. எனினும் மாநில அரசுகள் மற்றும் போக்குவரத்துக்கு காவல்துறை ஏற்படுத்தி வரும் தொடர்ச்சியான விழிப்புணர்வு காரணமாக பல மக்கள் முன்பை விட இப்போது சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கவன குறைவாக வாகனங்களை இயக்குவதன் காரணமாக விபத்துகள் நேரிடுவது அதிகரித்து வரும் நிலையில், டிரைவிங்கின் போது ஏற்படும் கவன சிதறலுக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் பழக்கம் வாகனத்தை இயக்கியபடியே மொபைலில் பேசுவது. சில நேரங்களில் தவிர்க்க முடியாத அழைப்புகள் மொபைலில் வரும் நேரத்தில் ஓட்டி கொண்டிருக்கும் வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு பேசும் பழக்கம் கொண்ட டிரைவர்கள் இருக்கும் அதே நேரத்தில், ஓட்டி கொண்டிருக்கும் வாகனத்தின் ...
பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.200 ஐ தாண்டும் – அகிலேஷ் யாதவ்

பா.ஜ.க.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.200 ஐ தாண்டும் – அகிலேஷ் யாதவ்

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
  உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் படவுன் மற்றும் ஷாஜஹான்பூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது: அவர்கள் (பா.ஜ.க.) மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.200 ஐ தாண்டும். ஏழைகள் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், அதிகரித்து வரும் எரிபொருள் விலையால், அவர்களுக்கு (ஏழைகளுக்கு) மோட்டார் சைக்கிள் அல்லது கார் கூட சொந்தமாக இல்லை. பா.ஜ.க.வின் சிறிய தலைவர்கள் சிறு பொய்களை சொல்கிறார்கள், பெரிய தலைவர்கள் பெரிய பொய்களை சொல்கிறார்கள், அவர்களின் முக்கிய தலைவர் மிகப் பெரிய பொய்களை கூறுகிறார்கள். பாஜக பொய்யர்களின் கட்சி. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்...