ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உயர்வது ஏன் ? கமல் கேள்வி

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உயர்வது ஏன் ? கமல் கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் உயர்வது ஏன் ? கமல் கேள்வி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை சரி பாதியாக குறைந்திருக்கும் இந்த நேரத்திலும் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது மக்கள் மீதான சுமையை அரசே அதிகரிக்கும் செயல். கடந்த காலங்களில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வை சுட்டி காட்டி, உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் கூடவே அதிகரித்து இருந்தது. பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலையும், பெட்ரோல் டீசலின் விலையை பெரிதும் சார்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் மீதான விலைகுறைப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையையும் குறைந்து மக்களின் பொருளாதார சுமையை குறைக்கக் கூடும். ஆனால் அதற்கு மாறாக தொடர்ந்து வ...
அதிகரிக்கும் கொரானா பாதிப்புகளால் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்!

அதிகரிக்கும் கொரானா பாதிப்புகளால் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்! இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்ததாக தமிழகத்தில் தான் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு மட்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரானாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கொரானாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவ...
ஆரோக்கிய சேது செயலி கட்டாயமில்லையாம் கோர்ட்டில் சொன்ன  மத்திய அரசு

ஆரோக்கிய சேது செயலி கட்டாயமில்லையாம் கோர்ட்டில் சொன்ன மத்திய அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா பரவலை தடுக்கவும், சுய பரிசோதனை செய்யவும் வசதியாக ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியது. அதே நேரம் "இந்த ஆரோக்கிய சேது செயலி நம்பகத்தன்மை இல்லாதது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆனால், அதை மத்திய அரசு மறுத்து ராகுல் அரசியல்செய்வதாக கூறியது. இந்த சூழலில் மே 25ம் தேதி முதல் உள்ளூர் விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விமானப் பயணிகள் அனைவரும் தங்களது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு இது கட்டாயமல்ல என்றும் ஆரோக்கிய சேது செயலில் பச்சை நிற அனுமதி கிடைத்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதேபோல சி...
ஊரடங்கால் தள்ளிப்போன 6 மாத கடன் தவணை வட்டி தள்ளுபடியா? 3 நாளில் முடிவெடுக்க கோர்ட் உத்தரவு

ஊரடங்கால் தள்ளிப்போன 6 மாத கடன் தவணை வட்டி தள்ளுபடியா? 3 நாளில் முடிவெடுக்க கோர்ட் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கடன் தவணை 6 மாதம் தள்ளி வைக்கப்பட்டதற்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் வங்கிகளின் நடவடிக்கை 3 நாளில் முடிவெடுக்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு கொரானா ஊரடங்கால் வேலைவாய்ப்புகளை இழந்து அனைத்து தரப்பினரும் கடுமையான வருவாய் பாதிப்பில் சிக்கியுள்ளதால் வங்கிகளில் பெற்ற கடனுக்கான தவணையை செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த சலுகை காலத்தில் வட்டி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் தவணைக்கான சலுகை காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை உச்ச நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வட்டியை தள்ளுபடி செய்வது விவேகமானதாக இருக்கா...
பல் மருத்துவரை மணக்கப் போகும் பிரபல இயக்குனர்!

பல் மருத்துவரை மணக்கப் போகும் பிரபல இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பல் மருத்துவரை மணக்கப் போகும் பிரபல இயக்குனர்! உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை பலரும் எளிமையாக நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ‘சாஹோ’ படத்தின் இயக்குனர் சுஜித் ரெட்டி தற்போது திருமணம் செய்ய இருக்கிறார். இயக்குனர் சுஜித் ரெட்டி, பிரவல்லிகா என்ற பல் மருத்துவரை மணக்க இருக்கிறார். கொரானா ஊரடங்கால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. வெறும் இரண்டு படங்களிலேயே உச்சம் தொட்ட இயக்குனர் சுஜித் ரெட்டி அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது – பெங்களூர் சிறைத்துறை தகவல்

சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது – பெங்களூர் சிறைத்துறை தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது - பெங்களூர் சிறைத்துறை தகவல் இந்திய அரசியல் வரலாற்றில் முன்னாள் முதல்வர் ஜெ., சொத்து குவிப்பு வழக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் ஜெ. இறந்து விட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மூர்த்தி, சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அவரது இந்த கேள்விக்கு...
தேசிய தலைவர் பிரபாகரன் வரலாறை திரித்து பேசினேனா – இயக்குனர் அமீர் விளக்கம்

தேசிய தலைவர் பிரபாகரன் வரலாறை திரித்து பேசினேனா – இயக்குனர் அமீர் விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
இயக்குனர் அமீர் வெளியிட்ட விளக்க அறிக்கை விவரம்:   அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர் ஒருவர் மறைந்து விட்டால் அவரைப் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொள்வது மனித மாண்பு. அதுவே இன்று வரை நம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் மறைந்த எம்எல்ஏ அண்ணன் ஜெ. அன்பழகனை நினைவு கூறும் விதமாக பல்வேறு நிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது மேலதிகமாக மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சென்னையில் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டு பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிணையில் இருந்து வெளியே வந்த போது தங்களது கட்சி அலுவலகத்தில் இருந்ததாகவும் அப்போதே அவரை தான் பார்த்ததாகவும் அவரிடம் பேசியதாகவும் அவரைப் பற்றி பெருமையாக அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள் என்னிடம் சொன்ன தகவல்களை ஒரு நேர்காணலில் ந...
தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம் மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம் மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழகத்திலும் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்தபடியே இருப்பதால் தமிழக சுகாதார துறை மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இந்த சூழலில் தமிழக சுகாதார துறை செயலாளர் ஆக இருந்த பீலா ராஜேஷ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதில் ஏற்கனவே இந்த பதவியில் இருந்து அனுபவம் பெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் இப்போது மீண்டும் சுகாதார துறை செயலாளர் ஆக நியமிக்கபட்டுள்ளார். இப்போது ராதாகிருஷ்ணன் சென்னையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஜெ., ஆட்சி காலத்திலும், சென்னையில் வெள்ளம் சூழ்ந்த போதும் மிகச் சிறப்பாக பணியாற்றியவர் ராதாகிருஷ்ணன். சென்னையில் வழக்கத்தை விட அதிக தொற்று பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது....
கொரானா ஊரடங்கால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அயோத்தியில் தொடங்கிய ராமர் கோயில் கட்டும் பணி!

கொரானா ஊரடங்கால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அயோத்தியில் தொடங்கிய ராமர் கோயில் கட்டும் பணி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா ஊரடங்கால் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அயோத்தியில் தொடங்கிய ராமர் கோயில் கட்டும் பணி! அயோத்தியில், சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. கட்டுமான பணியை கண்காணிக்க ஒரு அறக்கட்டளை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. அதன் தலைவராக மகந்த் நிருத்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை கடந்த ஏப்ரல் மாதம் எளிமையாக நடைபெற்றது. கொரானா பீதி ஊரடங்கு இருந்தாலும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். இந்நிலையில், கட்டுமான பணிகள் கொரானா ஊரடங்கு அமலில் இருந்தாலும் நேற்று ...
திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி!

திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திருப்பதியில் இன்று முதல் பொது தரிசனம் 6 ஆயிரம் பேருக்கு அனுமதி! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி தொடங்கியது. முதல் இரு நாட்கள் திருமலை-திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 8-ந்தேதி 6 ஆயிரத்து 300 பேரும், 9-ந்தேதி 8 ஆயிரத்து 350 பேரும் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து திருப்பதியில் வசிக்கும் உள்ளூர் மக்களும், திருமலை பாலாஜிநகரில் வசிக்கும் உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய நேற்று அனுமதிப்பட்டனர். அவர்களுக்கு நேற்று காலை 9 மணியில் இருந்து திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியில் 8 கவுண்ட்டர்களிலும், சீனிவாசம் தங்கும் விடுதியில் 6 கவுண்ட்டர்களிலும், அலிபிரி பூதேவி காம்ப்ளக்சில் 4 கவுண்ட்டர்களிலும் டைம் ஸ்லாட் டோக்கன் வழங்கப்பட்டது. 9-ந்தேதி 10 ஆயிரம் ப...